சட்ட விரோத குடியேறிகளின் தலைநகராக இந்தியா இருக்க முடியாது: மத்திய அரசு

சட்டவிரோத குடியேறிகளின் தலைநகரமாக இந்தியா  மாறக் கூடாது. ரோஹிங்கியா முஸ்லிகள்  நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்கள் என மத்திய அரசு வாதிட்டது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 26, 2021, 08:30 PM IST
  • 2018 ஆம் ஆண்டில் அசாமில் ரோஹிங்கியாக்கள் நாடு கடத்தப்படுவதைத் தடுக்க தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • தகவலை மறைத்ததற்காக பிரஷாந்த பூஷணை தலைமை நீதிபதி கடிந்து கொண்டார்.
  • விசாரணைக்கு பிறகு வழக்கின் தீர்ப்பை உச்ச நீதி மன்றம் ஒத்தி வைத்தது.
சட்ட விரோத குடியேறிகளின் தலைநகராக இந்தியா இருக்க முடியாது: மத்திய அரசு title=

ஜம்முவில் 170 ரோஹிங்கியா முஸ்லிம்களை இந்திய அரசு சட்டவிரோதமாக கைது செய்துள்ளது என்றும் அவர்களை அவர்களது சொந்த நாடான மியான்மாருக்கு அனுப்பினால், அவர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதால்,  ஐ.நா மனித உரிமை அமைப்பு கூறியுள்ளபடி  சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ள அந்த  'அகதிகளை' இந்தியா மியான்மாருக்கு நாடு கடத்தாமல், இந்தியாவில் இருக்க அனுமதித்து அவர்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும்,  சட்ட பிரிவு 21 -ன் கீழ் இந்திய குடியுரிமையை அவர்களுக்கு  வழங்க வேண்டும்  என்று  இந்தியாவில் - குறிப்பாக ஜம்முவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களை காக்கும் நோக்கில் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு (Central Government) சார்பில் ஆஜாரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, "சட்டவிரோத குடியேறிகளின் தலைநகரமாக இந்தியா  மாறக் கூடாது. ரோஹிங்கியா முஸ்லிகள்  நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்கள். சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து,  பிரிவு 21-ன், சட்டப்படி இந்தியாவிற்குள் நுழைந்தவர்களுக்கு மட்டுமே  கீழ் குடியுரிமை வழங்கப்படும். சட்ட விரோதமாக நுழைந்தவர்களுக்கு, அப்பிரிவின் கீழ் குடியுரிமை வழங்க முடியாது.  இந்த விவகாரம் இந்தியாவுக்கும் மியான்மாருக்கும் இடையேயான ராஜீய விவகாரம். அதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. மியான்மாரின் அனுமதியுடன் இவர்கள் அங்கே திருப்பி அனுப்பப்படுவார்கள். ” என வாதிட்டார். 

ALSO READ | இஸ்லாமியர்கள் இணைந்தால் 4 புதிய பாகிஸ்தான் உருவாகும்: TMC தலைவர் ஷேக் ஆலம்

மேலும், வழக்கறிஞர் பூஷண், 2018 ஆம் ஆண்டில் அசாமில் ரோஹிங்கியாக்கள் நாடு கடத்தப்படுவதைத் தடுக்க இதேபோன்று தாக்கல் செய்த மனுவை  உச்சநீதிமன்றம் (Supreme Court) தள்ளுபடி செய்தது என்பதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். 

இந்த தகவலை மறைத்ததற்காக  பிரஷாந்த பூஷணை தலைமை நீதிபதி கடிந்து கொண்டார்.

ஜம்மு காஷ்மிர் அரசின் சார்பில் ஆஜரான ஹரிஷ் சால்வே, "இந்த விவகாரம் மத்திய அரசு சம்பந்தப்பட்டது. ஐ.நா மனித உரிமைக்கான உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடவில்லை. எனவே, அகதிகளை ஏற்கும் பொறுப்பு இந்தியாவிற்கு இல்லை. மேலும் இவர்கள் சட்டவிரோதமாக எல்லை கடந்து இந்தியாவுக்குள் குடியேறியவர்கள். இதில் நீதிமன்றம் தலையிடுவது தகாது” என வாதிட்டார். 

விசாரணைக்கு பிறகு வழக்கின் தீர்ப்பை உச்ச நீதி மன்றம் ஒத்தி வைத்தது. 

ALSO READ | Twitter பயனர்களுக்கு எச்சரிக்கை; போலி செய்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை
 

Trending News