Gold / Silver Rates Today: தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய விலை நிலவரம் இதோ

டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய அனைத்து முக்கிய நகரங்களிலும் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 27, 2021, 12:00 PM IST
  • தேசிய அளவில் தங்கத்தின் விலையில் இன்று வீழ்ச்சி.
  • சென்னையில், 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை 190 ரூபாய் குறைந்து 42,160 ரூபாயாக உள்ளது.
  • அந்தந்த மாநில வரிவகைகளுக்கு ஏற்ப, நாடு முழுவதிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.
Gold / Silver Rates Today: தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய விலை நிலவரம் இதோ  title=

Gold rate today on 27 March 2021: டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய அனைத்து முக்கிய நகரங்களிலும் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 

டெல்லியில் 22 காரட்டுக்கான தங்கத்தின் விலை 300 ரூபாய் குறைந்து ரூ. 43,850 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 320 ரூபாய் குறைந்து ரூ. 47,840 ஆக உள்ளது. 

சென்னையில், 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை (Gold Price) 190 ரூபாய் குறைந்து 42,160 ரூபாயாக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை 290 ரூபாய் குறைந்து ரூ. 46,000 ஆக உள்ளது. 

கொல்கத்தாவில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 150 ரூபாய் வீழ்ச்சியைக் கண்டு 44,190 ரூபாயாக உள்ளது. 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்து ரூ. 46,910 ஆக விற்கப்படுகின்றது. 

மும்பையில், தங்கத்தின் விலையில் 160 ரூபாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 22 காரட் தங்கம் 43,760 ரூபாய்க்கும் 24 காரட் தங்கம் 44,760 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. 

ALSO READ: சும்மா இருக்கும் தங்கத்தை வைத்து சூப்பரா சம்பாதிக்க SBI Gold monetization scheme: முழு விவரம் உள்ளே

உலகளாவிய சந்தைகளில் தங்கம் (Gold) மற்றும் வெள்ளி விலைகள் பலவீனமடைந்துள்ளன. இந்தியாவில் தேசிய அளவிலும், உள்நாட்டு விலைகளிலும் பலவீனம் காணப்படுகின்றது. இதன் விளைவாக விலைகள் வீழ்ச்சியடைகின்றன. 
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தங்கத்தின் விலை காலை 8 மணி அளவிலான விலை நிலவரமாகும். தங்கத்தின் விலை நாள் முழுவதும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். தங்கம் வாங்குபவர்கள் அந்த நேரத்தில் சரியான விலையை தெரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. 

மேலும், அந்தந்த மாநில வரிவகைகளுக்கு ஏற்ப, நாடு முழுவதிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ALSO READ: தாமதிக்காமல் தங்கம் வாங்கலாம், மிக விரைவில் விலைகள் மீண்டும் உயரும் என்கிறார்கள் நிபுணர்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News