Today Gold Price: தங்கத்திற்கான தேவை (Gold rates today) மற்றும் வெள்ளி (Silver rates today)தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், கொரோனா வைரஸ் (Coronavirus) தாக்கம் மற்றும் லாக் டவுன் (Lockdown) போன்ற சூழ்நிலை காரணமாக, நகை வியாபாரிகளின் வர்த்தகம் பின்னடைவை சந்தித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் காரணமாக வணிகர்கள், தங்கம் மற்றும் வெள்ளியை சில்லறை விற்பனையில் விற்கும் முறைக்கு மாறத் தொடங்கியுள்ளனர். இப்போது அவர்கள் தங்கள் ஆபரண விற்பனைகளை ஆன்லைனில் அல்லது டிஜிட்டல் வடிவத்தில் விளம்பரப்படுத்துகிறார்கள். உலக தங்க சபையின் (World gold council) அறிக்கையிலும் , இதுப்பற்றி ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்பட்டு உள்ளது.


அந்த அறிக்கையின்படி, நகை வியாபாரத்தின் சில்லறை விற்பனையை அதிகரிக்க, பெரிய கடைக்காரர்களும் நிறுவனங்களும் தங்கள் கடை மாதிரியை மறுவடிவமைப்பு செய்து விற்பனையை அதிகரிக்க டிஜிட்டல் மூலோபாயத்தை பின்பற்றுகின்றனர்.


ALSO READ | சுமார் ₹.3.5 லட்சம் மதிப்பில் தங்க N-95 முக கவசம் அணிந்து கெத்தாக வலம் வரும் ஆண்!


இந்தியாவில் ஆன்லைன் தங்க சந்தை (Gold Market) என்ற தலைப்பில், அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்துப்படி, கோவிட் 19 காரணமாக ஏற்பட்ட மந்தநிலையை கருத்தில்  கொண்டு நகைக்கடை விற்பனையாளர்கள் இந்தியாவில் தற்போதுள்ள வணிக மாதிரியை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன என்று கூறியுள்ளது.


ஆன்லைனில் தங்க நகைகள் வாங்குவதற்கான சராசரி அளவு ரூ .25,000-30,000 எனக் கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அக்ஷயா திரி மற்றும் ஆடி பண்டிகை (Aadi Festiva) உட்பட சிறப்பு விழாக்காலங்களின் போது தங்கம் மற்றும் நாணயங்களின் ஆன்லைன் விற்பனை அதிகமாக  இருக்கிறது என்பதையும் அறிக்கையில் மேற்கோள்காட்டப்பட்டு உள்ளது. 


இந்தியாவில் ஆன்லைன் (Onlie Gold) தங்கச் சந்தை 1-2 சதவீதம் மட்டுமே என்றாலும், டிஜிட்டல் வர்த்தகர்கள் மற்றும் பெரிய நகை விற்பனையாளர்களிம் இருந்து இது ஒரு பெரிய ஊக்கத்தைப் பெறுகிறது என்று  இந்தியாவுக்கான உலக தங்க சபையின் (WGC MD India) நிர்வாக இயக்குனர் சோமசுந்தரம் பி.ஆர். தெரிவித்துள்ளார்.


ALSO READ | தங்கம் மற்றும் வெள்ளி முகக்கவசங்கள் விற்பனை அமோகம்… தேவை அதிகரிக்கிறது


இந்தியாவில் ஆன்லைன் தங்க சந்தை, மதிப்பின் அடிப்படையில், மொத்த தங்க விற்பனையில் 1-2 சதவீதம் மட்டுமே என்று அறிக்கை கூறுகிறது. 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், நகர்ப்புற தங்க நகைகள் வாங்கியதில் 17 சதவீதமும், கிராமப்புற தங்க நகைகள் வாங்கியதில் மூன்று சதவீதமும் மட்டுமே ஆன்லைனில் செய்யப்பட்டன.


ஆன்லைன் விற்பனையில் 70-80 சதவிகிதம் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட வாடிக்கையாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட ஆன்லைன் விற்பனையானது 20-30 சதவிகிதம் ஆகும்.


டிஜிட்டல் (Digital Platform) வணிகர்கள் இந்த சூழ்நிலையை ஒரு வாய்ப்பாக கருதி ஆன்லைன் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும். அதே நேரத்தில் பெரிய நகை விற்பனையாளர்கள் தங்கள் கடை மாதிரியை தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவிறுத்தப்பட்டு உள்ளது. இதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளனர்.


ALSO READ | நாஜிக்கள் கொள்ளையடித்த ரூ.11,617 கோடி மதிப்பிலான 28 டன் எடையுள்ள தங்கம்!!