கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியல் ஒருவர் சுமார் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்கத்தில் முகக்கவசம் செய்து அணிந்து வலம் வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது...!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்து வருகிறது. நோய் பாதிப்பில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி வருக்கின்றனர்.
இந்நிலையில், ஒடிசாவை சேர்ந்த நபர் ஒருவர் சுமார் ரூ.3,50,000 மதிப்பில் தங்கத்திலான முகக்கவசம் அணிந்து வீதியில் உலா வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியை சேர்ந்தவர் அலோக் மொஹந்தி என்பவர், சிறுவயது முதலே தங்க நகைகள் மீது அளவற்ற மோகம் கொண்டவர். இதை தொடர்ந்து, கொரோனா காலத்தில் அத்தியாவசியமாக மாறியுள்ள முககவசத்தை தங்கத்தில் வடிவமைத்து அணிய திட்டமிட்டார். இது தொடர்பாக புனேவில் உள்ளவர்களிடம், தங்கத்தில் முகக்கவசம் செய்வது தொடர்பாக குறிப்புகளை அலோக் மொஹந்தி கேட்டுள்ளார்.
இதையடுத்து, சூரத்தில் உள்ள நகைக்கடைக்காரரிடம் சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான வைரங்கள் மற்றும் நகைகள் பதிக்கப்பட்ட முககவசங்களையும் செய்து வாங்கியுள்ளார். தங்க நகைகளில் மீது தீராக் காதல் கொண்டுள்ள அலோக் மொஹந்தி, மோதிரம், சங்கிலிகள் மட்டுமின்றி தொப்பி, கை கடிகாரம் உள்ளிட்டவற்றையும் தங்கத்தில் வடிவமைத்து அணிந்து வருகிறார்.
READ | COVID-19 தோற்றுக்கான புதிய அறிகுறி அறிவிப்பு... நீளும் Symptoms பட்டியல்...
இது குறித்து அலோக் மொஹந்தி ANI-யிடம் கூறுகையில்... "நான் கடந்த 30 - 40 ஆண்டுகளாக தங்க ஆபரணங்களை அணிந்து வருகிறேன். தங்கத்தை அணிவது எனது பலவீனம். தங்க முகக்கவசம் அணிந்தவர்களைப் பார்த்த பிறகு, உடனடியாக என் நகைக்கடைக்காரரிடமும் அதுபோல ஒன்றை வடிவமைக்குமாறு கூறினேன். முக்காகவாசம் தயாரிக்க நகைக்கடைக்காரர் N-95 முகக்கவசத்தில் தங்க வேலைகளை செய்துள்ளார். தங்க முகக்கவசம் தயாரிக்க 22 நாட்கள் ஆனது, இதற்கு சுமார் 3.5 லட்சம் ரூபாய் செலவாக்கியதாகவும் அவர் தெரிவித்தார். முகமூடி தயாரிக்க சுமார் 90 -100 கிராம் மஞ்சள் உலோகம் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.