நாஜிக்கள் கொள்ளையடித்த ரூ.11,617 கோடி மதிப்பிலான 28 டன் எடையுள்ள தங்கம்!!

இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பா முழுவதிலும் இருந்து நாஜிக்கள் கொண்டு சென்ற 28 டன் தங்கமும், வேறுபல விலை உயர்ந்த பொக்கிஷங்களும் அங்கு இருக்கலாம் என்றும், அதன் மதிப்பு 25 பில்லியன் இங்கிலாந்து பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 28, 2020, 06:21 PM IST
நாஜிக்கள் கொள்ளையடித்த ரூ.11,617 கோடி மதிப்பிலான 28 டன் எடையுள்ள தங்கம்!! title=

இங்கிலாந்து: நாஜிக்கள் கொள்ளையடித்த 11,617 கோடி ரூபாய் மதிப்புள்ள 28 டன் எடையுள்ள தங்கம் போலந்து கோட்டையில் புதைக்கப்பட்டிருக்கலாம். இந்த தங்க புதையலின் எடை 28 டன் என்றும், அதன் மதிப்பு 25 பில்லியன் பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இந்திய மதிப்பில்  11,617 கோடி ரூபாய் (ரூ1,16,17,52,87,500) அதிகம்.

16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெர்மன் கோட்டையை அடையாளம் கண்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமளிக்கும் விஷயத்தை வெளியிட்டுள்ளனர்.

இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பா முழுவதிலும் இருந்து நாஜிக்கள் கொண்டு சென்ற 28 டன் தங்கமும், வேறுபல விலை உயர்ந்த பொக்கிஷங்களும் அங்கு இருக்கலாம் என்றும், அதன் மதிப்பு 25 பில்லியன் இங்கிலாந்து பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இந்திய மதிப்பில்  11,617 கோடி ரூபாய் அதிகம்.

நாஜி ராணுவ அதிகாரியான எஸ்.எஸ். ஸ்டாண்டர்டென்ஃபுரர் எகோன் ஓலன்ஹவுரின் நாட்குறிப்பில் விவரிக்கப்பட்டுள்ள 11 இடங்களில் ஒன்றான ஹோட்ச்பெர்க் அரண்மனை நவீன போலந்தில் அமைந்துள்ளது. நாஜி ராணுவ அதிகாரியின்  நாட்குறிப்பு தொடர்பான விவரங்கள் கடந்த ஆண்டுதான் வெளியானது என ஸ்பூட்னிக் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த சரித்திர பிரசித்திபெற்ற நாட்குறிப்பை கண்டறிந்த சிலேசியன் பிரிட்ஜ் அறக்கட்டளையின் ரீச்ஸ்பேங்கின், தங்கம் மற்றும் பிற பொக்கிஷங்களின் இன்றைய மதிப்பு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு போலந்துக்கு சொந்தமான முன்னாள் ஜெர்மனின் நகரம் ப்ரெஸ்லாவ் (Breslau)வில் இருந்த ஜெர்மனின் மத்திய வங்கியான ரீச்ஸ்பேங்க்கின் தங்கப் பாளங்கள் மற்றும் பிற பொக்கிஷங்களின் இன்றைய மதிப்பு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமானதாக இருக்கும் என்றும், அது இந்தக் கோட்டையின் கீழ் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று இந்த டைரியைக் கைப்பற்றிய சிலேசிய பிரிட்ஜ் அறக்கட்டளை கூறுகிறது.

கடந்த ஆண்டு போலந்து நாட்டின் கலாச்சார அமைச்சகத்திடம் இந்த நாட்குறிப்பை வழங்கியதாக இந்த அறக்கட்டளையின் தலைவரான ரோமன் ஃபுர்மனியாக் தெரிவித்தார். ஆனால் அமைச்சகம் முழுமையான விசாரணை மேற்க்கொள்ளவில்லை என்றும், மீண்டும் பொதுமக்கள் உதவியுடன் விசாரணையை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு ஆழத்தம்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

அரசாங்கத்தின் அனுமதியின்றி அகழ்வராய்ச்சி செய்வதும்,  நிதியுதவி இல்லாமல் இந்த பணிகளை மேற்கொள்வது மிகவும் கடினமானது. கோட்டையின் தற்போதைய உரிமையாளர் அகழ்ந்து பொக்கிஷத்தை தேட அனுமதி வழங்கியுள்ளதாகவும், குறிப்பிட்ட அந்தப் பகுதி வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு உள்ளதாகவும் அறக்கட்டளைக் கூறுகிறது. அதோடு, புதையல் வேட்டையை  தடுப்பதற்காக சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளதாகவும் அறக்கட்டளை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தங்கத்தைத் தவிரவும், போலந்து, சோவியத் யூனியன், பிரான்ஸ், பெல்ஜியம், ஆகியவற்றின் மதம் தொடர்பான கலைப்பொருட்கள் மற்றும் கலைப் படைப்புகளையும் நாஜிக்கள் சூறையாடியதாக கூறப்படுகிறது. இந்த புதையல்கள் குறைந்தபட்சம் 11 இடங்களில் மறைத்து வைக்கப் பட்டிருப்பதாக கடந்த ஆண்டு கண்டெடுக்கப்பட்ட நாட்குறிப்பு பொன்னானத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

(மொழியாக்கம் - நகரி அரிஹரன்)

Trending News