பணியாளர்கள் ஓய்வு வயது உயர்வு, ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் : ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று உள்ளது. அதன்படி ஊழியர்கள் முதல் ஆசிரியர்கள் வரை ஓய்வு பெறும் வயதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனுடன் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பல்வேறு பலன்களும் வழங்கப்படும். மேலும் தற்போது ஓய்வூதிய வயதை உயர்த்திய பிறகு, பணியாளர்கள் 65 வயது வரை பணியாற்றத் தகுதியடைவார்கள். இதற்கான உத்தரவு கடிதமும், துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓய்வூதிய வயது அதிகரிப்பு
உண்மையில் ஆசிரியர்களின் ஓய்வு வயதை ஆந்திர அரசு தற்போது உயர்த்தியுள்ளது. அதன்படி ஆந்திர அரசு ஓய்வு பெறும் வயதை 3 ஆண்டுகள் உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இனி ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 65 ஆக உயர்த்தி, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் ஷியாம ராவும் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


மேலும் படிக்க | இந்த 50 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா? உடனே படியுங்கள்.. லட்சாதிபதி ஆகலாம்


ஓய்வு பெறும் வயது 62லிருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
ஆந்திரப் பிரதேசத்தில் உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வின் பலனைப் பெறுவார்கள். மேலும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதன் கீழ், அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் மற்றும் யுஜிசி ஊதிய விகிதத்தைப் பெறும் ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பல்கலைக்கழக பதிவாளருக்கு அறிவுறுத்தல்கள்
இதற்காக, சம்பந்தப்பட்ட பல்கலை பதிவாளருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே ஓய்வூதிய வயது அதிகரிப்புக்குப் பிறகு, இப்போது ஊழியர்கள் 65 வயது வரை பணியாற்றத் தகுதியுடையவர்களாவார்கள். சனிக்கிழமை வெளியிடப்பட்ட உத்தரவுக்குப் பிறகு, ஆசிரியர் ஊழியர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


மாநில பல்கலைக்கழகம் தேசிய அளவில் நல்ல அங்கீகாரம் பெற வேண்டும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்காக ஆசிரியர்களின் சேவை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் ஓய்வு ஊதியத்தை அதிகரிக்க ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளதாக உயர்கல்வி அமைச்சகம் தெளிவாக கூறியுள்ளது. பரிந்துரை மூலம் ஆசிரியர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் ஊதிய விகிதத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை யுஜிசி உயர்த்தி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக உத்தர் பிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசும் கூடிய விரைவில் மருத்துவர்களின் ஓய்வு வயதை உயர்த்தி அமல்படுத்தலாம் என, சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டு இருந்தார். அதன்படி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 62 ஆக உள்ள நிலையில் அதை 65 ஆக உயர்த்தலாம் என்று கூறப்படுகிறது. டாக்டர்கள் பற்றாக்குறையை சமாளிக்க, உத்தர் பிரதேச அரசு இதுபோன்ற முடிவை எடுத்துள்ளது, விரைவில் இந்த உத்தரவு செயல்முறைப்படுத்தப்படும். இந்த உத்தரவு அமலானதும், உத்தர் பிரதேசத்தில் இதுவரை அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது 62 ஆக இருந்த நிலையில், தற்போது ஊழியர்கள் கூடுதலாக மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க | வீட்டு விஷேசங்களில் மொய் பணம் வைக்கும்போது ஏன் 501, 1001 என்று எழுதப்படுகிறது தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ