NCLT: பங்குதாரர்களுக்கு நல்ல செய்தி! எதிர்பார்ப்பு நிறைவேறியது! ZEEL-Sony உறுதி
ZEEL-SONY MERGER: பங்குதாரர்களுக்கு நல்ல செய்தி! ZEEL-Sony இணைப்பை NCLT அங்கீகரித்தது; ஒப்பந்தத்துடன் தொடர்புடைய ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டன
புதுடெல்லி: ZEEL-Sony இணைப்பை NCLT அங்கீகரித்துவிட்டது. ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆட்சேபனைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது, Zee பங்குதாரர்களுக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Zee இன் அனைத்து பங்குதாரர்களுக்கும் முக்கிய செய்தியாக, Zee Entertainment Enterprise Limited (ZEEL) மற்றும் Sony இணைப்பு NCLT ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆட்சேபனைகளையும் NCLT நிராகரித்த பிறகு வணிக இணைப்பு முடிந்தது என்று செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பான விரிவான நகல் வெள்ளிக்கிழமையன்று இரு நிறுவனங்களும் வெளியிடும். ஆனால், இணைப்புச் செய்தி அறிவிக்கப்பட்டதில் இருந்து நிறுவனத்தின் பங்குகள் 16 சதவீதம் உயர்ந்துள்ளதால், ஜீ நிறுவனத்தின் அனைத்துப் பங்குதாரர்களுக்கும் இது ஒரு நல்ல செய்தி என்பது நிரூபணமாகியுள்ளது.
Zee Entertainment Enterprises Limited (ZEEL) மற்றும் Sony Pictures Networks India ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பு இரு நிறுவனங்களின் பொழுதுபோக்கு வாரியங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பல நிறுவனங்கள் இந்த இணைப்புக்கு தடைகள் கோரி விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | SIP முதலீடுகளில் வரலாறு காணாத லாபம்! சூப்பர் வருமானத்துக்கு காரணம் என்ன?
ZEEL-Sony ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்து, IDBI Trusteeship, JC Flowers மற்றும் Axis Finance போன்ற பெரிய நிறுவனங்களின் ஆட்சேபனைகளை NCLT நிராகரித்தது. சோனி, இணைப்பின் மிகப்பெரிய பங்குதாரராக இருக்கும் என்பதையும், ஒப்பந்தம் முடிந்த பிறகு, புதிய நிறுவனம் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
லீனியர் நெட்வொர்க்குகள், டிஜிட்டல் சொத்துக்கள், உற்பத்தி செயல்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளை இணைப்பதை உறுதிபடுத்தும் ஒப்பந்தம் இது. இரண்டு முன்னணி ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்கள் இணைப்பு (ZEEL-SONY MERGER) ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும். மகத்தான வாய்ப்புகள் நிறைந்த பொழுதுபோக்குகளின் துறையில், அடுத்த சகாப்தத்தை நோக்கிய வெற்றி பயணத்திற்காக இரு நிறுவனங்களும் கைகோர்க்கிறது.
தற்போதைய சூழ்நிலையில், ZEEL இன் பங்குதாரர்களின் பங்கு 61.25% ஆகும். 15.75 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டிற்குப் பிறகு இந்தப் பங்கில் மாற்றம் இருக்கும். இதற்குப் பிறகு, ZEEL பங்குதாரர்களின் பங்கு சுமார் 47.07 சதவீதமாகவும், சோனியின் பங்கு 52.93 சதவீதமாகவும் இருக்கும்.
புதிய நிறுவனத்தின் வருமானம் 2 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய இணைப்பு Sony மற்றும் ZEEL இரண்டிற்கும் ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Zee Entertainment-Sony Pictures Networks India இடையேயான இணைப்பு 22 செப்டம்பர் 2021 அன்று அறிவிக்கப்பட்டது. ZEEL-Sony இணைப்பிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட நிறுவனத்தில் ரூ.11,605.94 கோடி முதலீடு செய்யப்படும். இணைந்த பிறகு, ஒன்றிணைந்த நிறுவனம், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.
மேலும் படிக்க | டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்த UPI Lite பரிவர்த்தனை வரம்பு உயர்த்தப்பட்டது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ