இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியான சுதா மூர்த்தி, நன்கு அறியப்பட்ட எழுத்தாளர், பரோபகாரர் மற்றும் கல்வியாளர். அவர் இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார். ஒரு சாதனை பெண்ணாக பல துறைகளில் அவர் செய்துள்ள மகத்தான பணிகளுக்காக 2006 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார் சுதா மூர்த்தி. சுதா மூர்த்தியின் வாழ்க்கை அனைவரையும் மிகவும் ஊக்கமளிக்கக்கூடியது. அவர் தனது திறமை மற்றும் உறுதியால் தனது வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
கல்லூரி மாணவி
சுதா மூர்த்தி கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தார். அவர் படித்த போது 599 மாணவர்கள் இருந்த பொறியியல் வகுப்பில் இவர் ஒரே ஒரு மாணவிதான். சுதா மூர்த்தி ஒருமுறை அமிதாப் பச்சனின் ‘கௌன் பனேகா க்ரோர்பதி 11’ நிகழ்ச்சியில் தனது வகுப்பில் ஒரே பெண் மாணவியாக இருந்ததால் தான் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டதாக கூறினார். தான் பொறியியல் படிப்பைத் தொடரும் முடிவுக்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சுதா மூர்த்தி தொடர்ந்து கல்லூரிக்கு செல்ல, அவரது பெற்றோர் சில நிபந்தனைகளை விதித்தனர். அவற்றை அவர் பின்பற்ற வேண்டும் என அவரது பெற்றோர் கூறினர். சுதா கல்லூரி வளாகத்தில் சேலை மட்டுமே அணிய வேண்டும் என அவரது பெற்றோர் கூறினார்கள். அவர் மாணவர்களுடன் பேசக்கூடாது என்றும், கல்லூரி கேன்டீனுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. சுதா மூர்த்தி இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்த போது, அவர் ஜே.ஆர்.டி டாடாவிற்கு கடிதம் எழுதி, தனது நிறுவனத்தின் "வேலையில் பெண்களை சேர்ப்பதில்லை” என்ற கொள்கையை நீக்க வலியுறுத்தினார்.
“ஒரு நாள் நான் எனது விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, புனேவில் உள்ள TELCO நிறுவனத்தில் இளம், பிரகாசமான பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதாக ஒரு அறிவிப்பைப் படித்தேன். ஆனால் இறுதியில், மாணவிகள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அது உண்மையில் எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எனக்கு அப்போது 23 வயது. அந்த வயதில் அனைவருக்கும் கோவம் வருவது இயல்புதான்” என்று சுதா மூர்த்தி கபில் சர்மா ஷோவில் பல ஆண்டுகள் முன்னர் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
மேலும் படிக்க | இன்கம் டேக்ஸ் ரீப்ஃண்ட் முக்கிய அப்டேட்: இதை செய்யவில்லை என்றால் ரீஃபண்ட் கிடைக்காது
“எனது கடிதத்தில், ஜே.ஆர்.டி டாடா ஐயா, நாடு சுதந்திரமாக இல்லாதபோது, உங்கள் குழு ரசாயனங்கள், இன்ஜின், இரும்பு மற்றும் எஃகு தொழில்களைத் தொடங்கியது. நீங்கள் எப்போதும் காலத்திற்கு முன்னால் இருக்கிறீர்கள். இந்த சமூகத்தில் 50 சதவீதம் ஆண்களும், 50 சதவீதம் பெண்களும் உள்ளனர். பெண்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி, அதன் மூலம் நீங்கள் பெண்களின் சேவையை துண்டிக்கிறீர்கள். அதாவது இப்படி செய்தால் உங்கள் நாடு முன்னேறாது. பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் கிடைக்காவிட்டால், சமுதாயமோ, நாடுகளோ உயராது. இது உங்கள் நிறுவனம் செய்துள்ள ஒரு தவறு’ என்று எழுதினேன்” என்று சுதா மூர்த்தி கூறினார்.
சுதா மூர்த்தியின் முயற்சிகள் பலனளித்தன. டாடா நிறுவனம் தங்களது, “பெண்களுக்கு வாய்ப்பில்லை” என்ற கொள்கையை நீக்கியது. இப்போது டாடா மோட்டார்ஸ் என்று அழைக்கப்படும் அந்த நாள் டெல்கோவில் பணிபுரிந்த முதல் பெண் பொறியாளர் சுதா மூர்த்தி ஆவார்.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு நிதியமைச்சரின் முக்கிய அறிவிப்பு! மாதம் ரூ.20500 கிடைக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ