Indian Railways அதிரடி: இனி ரயிலிலேயே வெளிநாடு செல்லலாம்... வெளிவந்த மாஸ் அப்டேட்
Indian Railways: இந்த விஷயத்தில் நடந்து வரும் முன்னேற்றம் குறித்து பேசிய எஸ் ஜெய்சங்கர், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான சுற்றுலா புள்ளிகளை அதிகரிக்க பூடான் `மிகவும் ஆர்வமாக உள்ளது` என்றார்.
புதுடெல்லி: ரயில் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்தியா மற்றும் பூடான் இடையே சர்வதேச ரயில் சேவையை இந்திய ரயில்வே விரைவில் தொடங்கவுள்ளது. இது குறித்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், அண்டை நாடான பூடானுக்கு இந்தியாவுக்கும் இடையேயான ரயில் இந்தியாவில் அசாமில் இருந்து இயக்கப்படும் என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சுற்றுலாவிற்கு பெரிய ஊக்கம்
இந்த விஷயத்தில் நடந்து வரும் முன்னேற்றம் குறித்து பேசிய எஸ் ஜெய்சங்கர், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான சுற்றுலா புள்ளிகளை அதிகரிக்க பூடான் "மிகவும் ஆர்வமாக உள்ளது" என்றார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், "பூடான் மற்றும் அஸ்ஸாம் இடையேயான ரயில் இணைப்பு குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், ஏனெனில் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான சுற்றுலா புள்ளிகளை அதிகரிக்க பூட்டான் மிகவும் ஆர்வமாக உள்ளது, மேலும் இது அஸ்ஸாமுக்கு மிகவும் நல்லது.” என கூறியதாக ஏஎன்ஐ அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியா, பூடான் இடையேயான முதல் ரயில் இணைப்பு
இந்த ரயில் இணைப்பு பணிகள் முடிவடைந்தால், இந்தியாவிற்கும் பூடானுக்கும் இடையிலான முதல் ரயில் இணைப்பாக இது இருக்கும். 2026 ஆம் ஆண்டுக்குள் இது முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரலில், பூட்டானின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் டான்டி டோர்ஜி, பூடான் அரசாங்கம் முதலில் இந்தத் திட்டத்தில் வேலை செய்யும் என்றும், பின்னர் சாம்ட்சே, ஃபுவென்ஷோலிங், நங்காங்லாம் மற்றும் சம்ட்ருப்ஜோங்கர் போன்ற பிற பகுதிகளை இணைக்கும் என்றும் கூறினார்.
முன்னதாக, பூட்டான் லைவ் ஒரு அறிக்கையில், இந்தியாவிற்கும் பூடானுக்கும் இடையிலான ரயில் இணைப்பைத் தொடங்குவதற்கான கணக்கெடுப்பு ஏப்ரல் 2023 இல் நிறைவடைந்ததாகவும், இந்த ரயில் இணைப்பு பூட்டானின் கெலேபு மற்றும் இந்தியாவின் அசாமில் உள்ள கோக்ராஜரை இணைக்கும் என்றும் கூறியது.
ஜெய்சங்கர் இந்தியா, சீனா இடையே எல்லைப் பேச்சுவார்த்தை
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பேச்சுவார்த்தைகள் குறித்தும் ஜெய்சங்கர் பேசுகையில், அது "நிறுத்தப்படவில்லை" என்றும், இரு நாடுகளும் "கடந்த மூன்று ஆண்டுகளில் முக்கிய பதட்டமான புள்ளிகளில் முன்னேற்றம் கண்டுள்ளன" என்றும் கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய பதட்ட நிலைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்தார். மேலும் எல்லைப் பேச்சுவார்த்தை குறித்து விரைவில் மற்றொரு கூட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவும் சீனாவும் அவ்வப்போது எல்லை தகராறுகளை எதிர்கொண்டுள்ளன. அவை 1962 ஆம் ஆண்டுக்கு முந்தையவை. மிகச் சமீபத்திய மோதல் ஜூன் 2020 இல் நடந்தது. அப்போது இந்திய மற்றும் சீன துருப்புக்கள் கல்வான் பள்ளத்தாக்கில் சண்டையில் ஈடுபட்டன.
எல்லைப் பகுதிகளில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண இரு நாடுகளும் ராணுவ மட்டத்தில் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த ஆண்டு ஏப்ரல் 23 அன்று, 18வது சுற்று இந்தியா-சீனா கார்ப்ஸ் கமாண்டர் நிலை கூட்டம், சீனப் பக்கத்தில் உள்ள சுஷுல்-மோல்டோ எல்லை சந்திப்புப் புள்ளியில் நடைபெற்றது.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, "வடக்கு எல்லையில் உள்ள பகுதிகள் உட்பட எல்லைக் கட்டமைப்புகளை கணிசமாக மேம்படுத்தி வருகிறது" என்று ஜெய்சங்கர் கூறினார்.
2014க்குப் பிறகு, எல்லை உள்கட்டமைப்பில் பெரும் உந்துதல் ஏற்பட்டபோது, சீனத் தரப்பிலிருந்து போட்டியும் ரோந்துப் பணியும் அதிகரித்துள்ளது,” என்றார் ஜெய்சங்கர்.
அஸ்ஸாமுடன் ரயில்வே இணைப்புக்காக பூடானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியுறவு அமைச்சர் கூறினார்.
"பூடான் மற்றும் அஸ்ஸாம் இடையேயான ரயில் இணைப்பு குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக புள்ளிகளைத் திறக்க பூட்டான் மிகவும் ஆர்வமாக உள்ளது, இது அஸ்ஸாமுக்கு மிகவும் நல்லது" என்று ஜெய்சங்கர் கூறினார்.
இதற்கிடையில், பூடானுக்கும் சீனாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து பேசிய ஜெய்சங்கர், “... அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர், மேலும் 24 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. அவர்கள் அதிக சுற்றுகளை நடத்துவார்கள். நம்மைப் பாதிக்கும் விஷயங்களைக் கவனமாகக் கண்காணிக்கிறோம். அடுத்த கட்ட விஷயங்களை அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.” என்று கூறினார்.
கைலாஷ் மானசரோவர் யாத்திரை குறித்து ஜெய்சங்கர் பேசுகையில், “கைலாஷ் மானசரோவர் – உள்கட்டமைப்பு உருவாகி வருகிறது. அங்கு ஒரு சுரங்கப்பாதை தேவை, பார்டர் ரோடு ஆர்கனைசேஷன் (பிஆர்ஓ) வேலை செய்து திட்டமிட்டு வருகிறது. ஆனால், சீனாவிடமிருந்து பழைய நடைமுறைக்கு வருவதற்கான எந்த சமிக்ஞையும் இல்லை”. என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | Indian Railways: சிக்கனத்தில் இறங்கும் ரயில்வே... பயணிகளுக்கு இதனால் பலன்கள் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ