பயணிகளுக்கு ரயில்வே தந்த குட் நியூஸ்! வாய்ப்பை தவற விட்டுடாதீங்க! உடனே படியுங்கள்

IRCTC Bali Tour Package Price: நீங்களும் சர்வதேச சுற்றுப்பயணம் செய்ய விரும்பினால், உங்கள் பட்ஜெட்டும் குறைவாக இருந்தால், இப்போது நீங்கள் பதற்றம் கொள்ளத் தேவையில்லை, ஏனென்றால் இன்று உங்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த செய்தியை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 3, 2023, 12:22 PM IST
  • பாலி உலகின் மிகவும் பிரபலமான தீவுகளில் ஒன்றாகும்.
  • IRCTC தற்போது ஒரு டூர் பேக்கேஜைக் கொண்டு வந்துள்ளது.
  • 5 இரவுகள் மற்றும் 6 பகல்கள் அடங்கும்.
பயணிகளுக்கு ரயில்வே தந்த குட் நியூஸ்! வாய்ப்பை தவற விட்டுடாதீங்க! உடனே படியுங்கள்  title=

ஐஆர்சிடிசி பாலி டூர் பேக்கேஜ்: நீங்களும் சர்வதேச சுற்றுப்பயணம் செய்ய விரும்பினால், உங்கள் பட்ஜெட்டும் குறைவாக இருந்தால், இப்போது நீங்கள் பதற்றம் கொள்ளத் தேவையில்லை, ஏனென்றால் இன்று உங்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த செய்தியை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், அதன்படி இந்தியன் இரயில்வே IRCTC ஒரு டூர் பேக்கேஜுடன் வந்துள்ளது, அதாவது அது IRCTC இன்டர்நேஷனல் டூர் பேக்கேஜ் ஆகும். இதில் உங்கள் அனைவருக்கும் விமானம், ஹோட்டல் மற்றும் உணவு அனைத்தும் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும்.

இதன் மூலம் வெளிநாடு செல்லும் உங்களின் கனவை நீங்கள் எளிதாக நிறைவேற்றிக் கொள்ளலாம். அதன்படி ​​இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பாலிக்கு சென்று வர இந்தியன் இரயில்வே புதிய டூர் பேக்கேஜை உருவாக்கி உள்ளது.

மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: இவர்களுக்கு பழைய ஓய்வூதியம்... வந்தது உத்தரவு

இந்தோனேசியாவில் உள்ள பாலி அதன் அழகிய கடற்கரைகளுக்காக உலகம் முழுவதும் பிரபலமானது. கடற்கரையில் கட்டப்பட்ட புகழ்பெற்ற வரலாற்று கோயில்கள், பாரம்பரிய இசை மற்றும் நடனம் போன்றவற்றை காண, உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வரத் தொடங்கியுள்ளனர்.

பாலி உலகின் மிகவும் பிரபலமான தீவுகளில் ஒன்றாகும்
இந்தோனேசியாவின் பாலி தீவு உலகின் மிகவும் பிரபலமான தீவுகளில் ஒன்றாகும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் புதுமண தம்பதியர்கள் இங்கு வருகிறனர். அதேபோல் நீங்கள் அனைவரும் இதுவரை படித்த மற்றும் கேள்விப்பட்ட அனைத்து எரிமலைகளையும் இங்கே காணலாம். 

இத்தகைய அழகான இடத்தை நீங்களும் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டால், IRCTC தற்போது ஒரு டூர் பேக்கேஜைக் கொண்டு வந்துள்ளது. எனவே இந்த பேக்கேஜின் முழு விவரத்தை இங்கே காண்போம்.

5 இரவுகள் மற்றும் 6 பகல்கள் - IRCTC International Tour Package
5 இரவுகள் 6 பகல்கள் கொண்ட ஐஆர்சிடிசி பாலி டூர் பேக்கேஜ் ஆகஸ்ட் 11 ஆம் தேதி லக்னோவில் இருந்து தொடங்கும். இந்த சர்வதேச டூர் பேக்கேஜுக்கு "Awesome Bali" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மலிவான பேக்கேஜில், IRCTC ஆல் உங்களுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவும் வழங்கப்படும். IRCTC பாலி டூர் பேக்கேஜை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், நீங்கள் லக்னோ விமானத்தை அடைய வேண்டும்.

 விமான விவரங்கள்:

Dates Details
11.08.2023 Departure
Air Asia Flight LKO (23:05 hrs) - Don Mueang International Airport DMK (04:00 hrs)

DMK (06:15 hrs) - Bali airport (11:30 hrs)
16.08.2023 RETURN 
Air Asia Flight

DPS (12:00 hrs) - DMK (15:30 hrs)

DMK (20:15 hrs) - LKO (22:35 hrs)

கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படும் - IRCTC Bali Tour Package Price
சிங்கிள் புக்கிங்: ரூ.101400 கட்டணம் செலுத்த வேண்டும். 
அதேசமயம், இரண்டு மற்றும் மூன்று பேருக்கு: தலா ரூ.92,700 செலுத்த வேண்டும்.
5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு படுக்கையுடன் முன்பதிவு செய்ய ஒரு குழந்தைக்கு ரூ.88000 ஆகும். படுக்கை இல்லாமல் முன்பதிவு செய்ய ஒரு குழந்தைக்கு (2 முதல் 11 வயது வரை) ரூ.82600 கட்டணம் வசூலிக்கப்படும்.

எப்படி புக் செய்வது:
நீங்கள் Bali Pour பேக்கேஜில் முன்பதிவு செய்ய விரும்பினால், IRCTC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று எளிதாக முன்பதிவு செய்யலாம். மறுபுறம், நீங்கள் பேக்கேஜ் தொடர்பான ஏதேனும் தகவல் அறியவேண்டும் என்றால் நீங்கள் 8287930922, 8287930902 எண்களில் அழைக்கலாம்.

பயணத்திட்டம்:
ஐந்து இரவுகள் ஆறு நாட்கள் பேக்கேஜில் "Ulwata Temple, Kintamani Village, Ubud Coffee Plantation, Ubud Royal Palace, Ubud Traditional Art Market, Bali Safari & Marine park with Jungle Hopper Pass, Tanjung Benoa Beach, Turtle Conservation Island, Tanah Lot for Sunset Tour" இடங்கள் அடங்கும்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்... இனி ஓய்வூதியம் எக்குத்தப்பாக உயரும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News