யெஸ் பேங்க், தனது வாடிக்கையாளரின் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. ஐசிஐசிஐ, எஸ்பிஐ, எச்டிஎஃப்சி ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப்பார்த்தால், யெஸ் பேங்கின் வட்டி, வைப்புத்தொகை வைத்திருப்பவர்களுக்கு லாபமானது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யெஸ் வங்கிக்கான ஃபிக்ஸட் டெபாசிட் (fixed deposit ) விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன, மேலும் அவை எஸ்பிஐ, எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ போன்ற பிற வங்கி விகிதங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் எந்த வங்கியின் வட்டி அதிகம் என்பதை புரிந்துக் கொள்ளலாம்.
தனியார் துறை வங்கியான யெஸ் பேங்க்,ம் தனது வாடிக்கையாளர்களின் நிலையான வைப்புத்தொகை (FD) வட்டி விகிதத்தில் திருத்தம் செய்துள்ளது.


₹2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தவணைக்காலத்திற்கு அதிக வட்டி கொடுக்கும் யெஸ் பேங்கின் திருத்தப்பட்ட FD வட்டி விகிதங்கள் நவம்பர் 21, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.


சமீபத்திய வட்டி உயர்வின்படி, யெஸ் வங்கி இப்போது பொதுக் குடிமக்களுக்கு 3.25% முதல் 7.75% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.75% முதல் 8.25% வரையிலும் ஏழு நாட்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு வட்டி கொடுக்கிறது. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.... வட்டியை அள்ளித் தரும் ‘சில’ வங்கிகள்!
 
ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 7.25% வீதத்தையும், ஒரு வருடத்தில் இருந்து 18 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு 7.50% வீதத்தையும், 18 மாதங்கள் முதல் 24 மாதங்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 7.75% வீதமும் வழங்கப்படும்.


யெஸ் பேங்க் FD விகித உயர்வு: புதிய வட்டி விகிதங்களை சரிபார்க்கவும்
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை - 3.25%
15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை - 3.70%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை - 4.10%
91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை - 4.75%
121 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை - 5.00%
181 நாட்கள் முதல் 271 நாட்கள் வரை - 6.10%
272 நாட்கள் முதல் < 1 வருடம் - 6.35%
1 வருடம் - 7.25%
1 வருடம் 1 நாள் முதல் 18 மாதங்கள் வரை - 7.50%
18 மாதம் < 24 மாதங்கள் - 7.75%
24 மாதங்கள் முதல் < 36 மாதங்கள் வரை - 7.25%
36 மாதங்கள் முதல் < 60 மாதங்கள் வரை - 7.25%
60 மாதங்கள் - 7.25%
60 மாதங்கள் 1 நாள் முதல் <= 120 மாதங்கள் - 7%


மேலும் படிக்க | அதிக வருமானத்துடன் வரி சேமிப்பு பலன்களும் கிடைக்க... சில சிறந்த முதலீட்டு திட்டங்கள்..!


யெஸ் பேங்க் எஃப்டி விகிதங்கள் மற்றும் ஐசிஐசிஐ, எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வட்டி விகிதங்கள்
ஐசிஐசிஐ வங்கியானது தற்போது பொது வாடிக்கையாளர்களுக்கு ஏழு நாட்களில் இருந்து 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 3% முதல் 7.1% வரை வட்டி வழங்குகிறது, அதே சமயம் மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் 3.5% முதல் 7.65% வரை உள்ளது.


இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC வங்கி, பொது வாடிக்கையாளர்களுக்கு 3% முதல் 7.20% வரையிலான வட்டி விகிதத்தை ஏழு நாட்களில் இருந்து 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும், மூத்த குடிமக்களுக்கு 3.5% முதல் 7.75% வரை வழங்குகிறது. எஸ்பிஐ பொது வாடிக்கையாளர்களுக்கு ஏழு நாட்களில் இருந்து 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் FD க்கு 3-7.1% வட்டியை வழங்குகிறது, மேலும் மூத்த குடிமக்கள் இந்த வைப்புத்தொகையில் கூடுதல் 50 அடிப்படை புள்ளிகளைப் பெறுவார்கள்.


மேலும் படிக்க | சிறுசேமிப்புத் திட்டங்களில் பெஸ்ட் எது? மூணு ஆப்ஷன்கள்... உங்கள் சாய்ஸ் எது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு, ஆன்மீகம், ஆயிலகம் என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ