Home Insurance: உலக வாழ்க்கை நிலையற்றது. அதுவும், இயற்கையின் சீற்றத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. மழை, வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு என இயற்கை அன்னை அவ்வப்போது தனது கொடூர முகத்தையும் காட்டுவதுண்டு. இவற்றை நம்மால் தடுக்க முடியாது என்றாலும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், இவற்றால் நமக்கு ஏற்படும் நஷ்டத்தை கண்டிப்பாக குறைக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், வீட்டுக் கடன் காப்பீடு குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தியுள்ளன. ஆனால் மக்களிடையே வீட்டுக் காப்பீடு குறித்து அதிக தகவல்களோ அல்லது புரிதலோ இல்லை. வீட்டு காப்பீடு உங்கள் வீட்டின் பாதுகாப்பிற்கானது. ஆனால் பெரும்பாலான மக்கள் வீட்டுக் காப்பீட்டை மிகவும் முக்கியமானதாகக் கருதுவதில்லை.


எனினும், சமீபத்திய நாட்களில் நிலநடுக்கம், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் நாட்டின் பல பகுதிகளில் ஏற்படுவதை காண முடிகின்றது. அத்தகைய சூழ்நிலையில் நாம் சிக்கிக்கொண்டால் வீட்டுக் காப்பீட்டு  மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டுக் காப்பீட்டின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் அது தொடர்பான பிற முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 


2 வகையான வீட்டுக் காப்பீடு உள்ளன


வீட்டுக் காப்பீட்டில் இரண்டு வகைகள் உள்ளன. 


- ஒன்று வீட்டின் பாதுகாப்பை கவர் செய்யும்
- மற்றொன்று வீட்டில் உள்ள பொருட்களின் பாதுகாப்பை கவர் செய்யும்.


வீட்டின் பாதுகாப்பை கவர் செய்யும் திட்டம் கட்டமைப்புக் காப்பீட்டு கவர் (Structure Insurance Cover) எனப்படுகிறது. வெள்ளம், நிலநடுக்கம், தீ மற்றும் மின்னல் போன்ற இயற்கை பேரிடர்களாலோ, அல்லது திருட்டு, கொள்ளை மற்றும் கலவரம் போன்ற காரணங்களாலோ வீடு சேதமடைந்தால் கட்டமைப்பு காப்பீடு உங்களுக்கு உதவியாக இருக்கும்.


இரண்டாவது வீட்டில் உள்ள பொருட்களுக்கான காப்பீடு (Content Insurance). இது மின்னணு பொருட்கள், தளபாடங்கள், நகைகள் மற்றும் வீட்டில் உள்ள பிற மதிப்புமிக்க பொருட்களுக்கு பொருட்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. வீட்டுப் பாதுகாப்பு மற்றும் வீட்டில் வைத்திருக்கும் உடமைகளின் பாதுகாப்பு ஆகிய இரண்டும் உங்களுக்கு வேண்டுமானால், நீங்கள் விரிவான வீட்டுக் காப்பீட்டின் (Comprehensive Home Insurance) விருப்பத்தையும் தேர்வு செய்யலாம். இதில், இரண்டின் கவரேஜும் ஒரே நேரத்தில் கிடைக்கும்.


மேலும் படிக்க | வீட்டு உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்: ரியல் எஸ்டேட்டில் இந்த முடிவை மாற்ற அரசு தயார்


வீட்டுக் காப்பீடு எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன?


வீட்டுக் காப்பீடு (Home Insurance) எடுப்பது கட்டாயமில்லை. எனினும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் வீடுகள் பெருமளவில் சேதமடைகின்றன. அத்தகைய சூழ்நிலையில், விரிவான வீட்டுக் காப்பீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சமீபத்தில் நிலச்சரிவால் கேரளத்தின் வயநாட்டில் (Wayanad) நடந்த பேரழிவை நாம் பார்த்தோம். பல வீடுகள் மண்ணில் புதைந்து போயின. பல வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இது போல இயற்கை பேரிடர் அபாயம் அதிகம் உள்ள இடங்களில் வீட்டுக் காப்பீடு மிகவும் உதவியாக இருக்கும். 


இந்த காப்பீட்டில், இயற்கை பேரிடர்கள் தவிர தீ விபத்து, மின்சார விபத்து, திருட்டு, கொள்ளை, கலவரம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆகையால், இந்த காப்பீடு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். கடினமான காலங்களில் உங்கள் மூலதனத்தைப் பாதுகாப்பதே வீட்டுக் காப்பீட்டின் நோக்கமாகும்.


வீட்டுக் காப்பீட்டின் பிரீமியம் எவ்வளவு


எந்தவொரு திட்டத்தையும் தேர்ந்தெடுப்பதற்கு முன், அதற்கான நமது தேவை என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும். எந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பதாக இருந்தாலும், அதை தேவைக்கேற்ப தேர்ந்தெடுக்க வேண்டும். இதை உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டால், இந்த விஷயத்தில் நிதி நிபுணர் அல்லது காப்பீட்டு முகவரிடமிருந்து ஆலோசனையையும் பெறுவது அவசியமாகிறது. அப்படிப்பட்ட தொழில்துறை வல்லுனர்களால் நமது சூழ்நிலை, வீடு மற்றும் இருப்பிடம் போன்றவற்றை சரியாக ஆராய்ந்து நமக்கான சிறந்த திட்டத்தை பரிந்துரைக்க முடியும். இந்த காப்பீட்டுத் திட்டங்களின் பிரீமியம் உங்கள் தேவைக்கேற்ப தீர்மானிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: அதிரடி டிஏ ஹைக்... AICPI எண்கள் மூலம் வந்த நல்ல செய்தி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ