வீட்டு உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்: ரியல் எஸ்டேட்டில் இந்த முடிவை மாற்ற அரசு தயார்

Capital Gains Tax on Property: நிதி மசோதா, 2024 இல் இந்த திருத்தத்தின் விவரங்கள் மக்களவை உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இரண்டு விருப்பங்களில் எது வரி குறைவாக இருந்தாலும், அதை சொத்தை விற்பவர்கள் செலுத்தலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 7, 2024, 12:34 PM IST
  • மக்களவையில் நிதி மசோதா தாக்கல்.
  • புதிய விதிகளால் அதிக வரி விதிக்கப்பட்டது.
  • இந்த மாற்றம் ஏன் செய்யப்பட்டது?
வீட்டு உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்: ரியல் எஸ்டேட்டில் இந்த முடிவை மாற்ற அரசு தயார் title=

Capital Gains Tax on Property: ஜூலை 23, 2024 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் சொத்து விற்பனை மீதான வரியை 20ல் இருந்து 12.5 சதவீதமாக குறைத்தார். ஆனால், மக்களை இது மகிழ்விக்கவில்லை. புதிய விதிகளின் கீழ் இண்டெக்ஸேஷன் அதாவது அட்டவணைப்படுத்தலின் நன்மை நிறுத்தப்படும் என்று அரசாங்கம் கூறியது. இதன் விளைவாக, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு நபர் தனது சொத்தை விற்க முன்பை விட அதிக வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. 

எனினும், இது தொடர்பாக இப்போது ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை கருத்தில் கொண்டு, ரியல் எஸ்டேட் மீதான நீண்ட கால மூலதன ஆதாய வரி  (long term capital gains tax) திட்டத்தில் மாற்றங்களை செய்ய அரசாங்கம் முன்வந்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் காணலாம். 

தேர்வு செய்யும் வசதி வழங்கப்படும்

இந்த விதியின் கீழ், ஒரு தனிநபர் மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பத்திற்கு (HUF) இரண்டு வகைகளில் ஒன்றை தேர்வு செய்யும் வசதி கிடைக்கும். 

- ஏற்கனவே உள்ள இண்டெக்சேஷனுடன் (Indexation) 20% வரி செலுத்தலாம். 
- அல்லது 12.5 சதவீத புதிய திட்டத்தின் கீழ் வரி செலுத்தும் வசதியும் இருக்கும்.

மக்களவையில் நிதி மசோதா தாக்கல்
 
நிதி மசோதா, 2024 இல் இந்த திருத்தத்தின் விவரங்கள் மக்களவை உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இரண்டு விருப்பங்களில் எது வரி குறைவாக இருந்தாலும், அதை சொத்தை விற்பவர்கள் செலுத்தலாம். இந்த மாற்றம் ஜூலை 23, 2024க்கு முன் வாங்கிய சொத்துக்களுக்குப் பொருந்தும். மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்படும் நிதி மசோதாவில் இந்த மாற்றத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) முன்மொழிவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: அதிரடி டிஏ ஹைக்... AICPI எண்கள் மூலம் வந்த நல்ல செய்தி

புதிய விதிகளால் அதிக வரி விதிக்கப்பட்டது

புதிய விதிகளால் அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும் என்ற கவலை நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பிற சொத்து உரிமையாளர்களை பற்றிக்கொண்டதை கவனத்தில் கொண்ட மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. புதிய விதிகளில், பணவீக்கத்தால் ஏற்படும் விலை உயர்வை கணக்கில் கொள்ளும் 'இன்டெக்சேஷன்' வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி விகிதம் 20%லிருந்து 12.5% ​​ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

இந்த மாற்றம் ஏன் செய்யப்பட்டது?

அனைத்து வகையான சொத்துக்களுக்கும் வெவ்வேறாக இல்லாமல், ஒரே மாதிரியான வரி விதிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய விதிகள் மக்களுக்கு தீங்கு விளைவிக்காது என்று மக்களுக்கு உறுதியளிக்கும் முயற்சியை வரி ஆணையமும் நிதி அமைச்சரும் (Finance Minister) மேற்கொண்டனர். இந்த மாற்றங்கள் பழைய சொத்துக்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பல பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.

 புதிய வரி விதிகளின் கீழ் ரியல் எஸ்டேடில் அரசு வரி அடுக்கை மாற்றாமல் இருந்திருந்தால், வரி செலுத்துவோருக்கு (Taxpayers) ரூ.17,500 அளவிலான பலன் மட்டுமே கிடைத்திருக்கும். ஆனால் ரியல் எஸ்டேட் மீதான மூலதன ஆதாய வரி சூத்திரத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, இந்த நன்மை முடிவடையும் நிலையில் இருந்தது. இது குறித்து EY இந்தியாவின் வரி மற்றும் ஒழுங்குமுறை சேவைகளின் மூத்த ஆலோசகர் சுதிர் கபாடியா, 'அரசு மேலும் நிவாரணம் வழங்கியுள்ளது. மக்களுக்கு எது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு முயற்சி எடுத்துள்ளது.’ என்று கூறினார்.

மேலும் படிக்க | இந்த வங்கியில் FD கணக்கு இருந்த உங்களுக்கு குட் நியூஸ்: வட்டி விகிதத்தில் பெரிய ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News