இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஸ்பேமர்கள் மற்றும் மோசடிக்காரர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் ஒரு முடிவெடுத்துள்ளது.  அதாவது ஒருவரது மொபைலுக்கு அழைப்பு வரும்போது அவரது மொபைலில் யார் அழைக்கிறார்கள் என்று அழைப்பவரின் பெயர் திரையில் தெரியும் வகையிலான அமைப்பை உருவாக்கவுள்ளது.  வாடிக்கையாளரின் பெயர் தெரியும் வகையில் கேஒய்சி ஆவணங்கள் டெலிகாம் ஆபரேட்டர்களிடம் கிடைக்கும்.  பொது மக்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்படும் இந்த நடவடிக்கை, சந்தாதாரர்களின் கேஒய்சி ஆவணங்களை பூர்த்தி செய்வதற்கு டெலிம் ஆபரேட்டர்களின் ஒரு பகுதிக்கு இணங்குவதை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு உதவும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உஷார்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்களே! இதை நம்பி ஏமாற வேண்டாம்! 



இந்த நடவடிக்கை மூலமாக சரிபார்க்கப்படாத அழைப்பாளர்கள், ஸ்பேமர்கள் மற்றும் பல சிம் கார்டுகளைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்களைக் கட்டுப்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் அழைப்புகளுக்கும் இதேபோன்ற நடவடிக்கை செய்யப்படலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றது.  அதேசமயம் இவ்வாறு வாடிக்கையாளரின் பெயரைக் காண்பிப்பது தனியுரிமைக்கு எதிரானது என்று எதிர்ப்புகள் எழுந்தது இருப்பினும் இந்த நடவடிக்கை சட்ட மற்றும் அரசியலமைப்பு செயல்முறை மூலம் கையாளப்படுகிறது.


மக்கள் பலரும் இதுவரையில் தங்களை யார் அழைக்கிறார்கள் என்பதை கண்டறிய ட்ரூகாலர் செயலியை தான் பயன்படுத்தி வந்தனர், ஆனால் இந்த ட்ரூகாலர் ஒரு குழுவின் மூலம் மட்டுமே தகவலை சேகரிக்கிறது, அதனால் சில சமயங்களில் இதில் நாம் சிலரை அடையாளம் காணமுடியாமல் போய்விடும் வாய்ப்பு நிறைய உள்ளது.  ஆனால் இப்போது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுத்தவுள்ள நடவடிக்கையின் மூலம் கேஒய்சி ஆவணங்கள் இணைக்கப்படுவதால் ட்ரூகாலரில் இருக்கும் சில குறைபாடுகள் இதில் இருக்காது.  இருப்பினும் ட்ராய் நடைமுறைப்படுத்தப்போகும் இந்த வசதி இயல்பாகவே மொபைல்களில் கிடைக்குமா அல்லது இதற்கென்று தனி செயலியை பதிவிறக்க வேண்டுமா என்பது குறித்த தெளிவான விவரங்கள் இன்னும் கிடைக்கபெறவில்லை.


மேலும் படிக்க | EPFO News: இனி இவர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ