உஷார்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்களே! இதை நம்பி ஏமாற வேண்டாம்!

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பான் எண்ணை அப்டேட் செய்யுங்கள் என்று போலியான செய்திகள் அனுப்பப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Nov 13, 2022, 02:36 PM IST
  • SBI வாடிக்கையாளர்களுக்கு வங்கி முக்கிய செய்தி.
  • போலி செய்திகளை பார்த்து ஏமாற வேண்டாம் என்று வேண்டுகோள்.
  • பான் கார்ட் இணைப்பு குறித்து வரும் செய்தி போலியானது என்று தெரிவித்துள்ளது.
உஷார்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்களே! இதை நம்பி ஏமாற வேண்டாம்! title=

மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவர்களது பான் எண்ணை அப்டேட் செய்யும்படி சில போலி செய்திகள் வருவது கண்டறியப்பட்டுள்ளது.  அந்த செய்தியில் "அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் எஸ்பிஐ யோனா கணக்கு இன்று மூடப்பட்டது, இப்போது உங்கள் பான் எண் விவரங்களைப் அப்டேட் செய்யவும்" என்று வங்கியிலிருந்து அனுப்புவது போன்று போலியான தகவல்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பப்படுகிறது.  இதுகுறித்து பிஐபி ஃபேக்ட் செக் அதன் அதிகாரபூர்வ ட்வீட்டர் பக்கத்தில், எஸ்பிஐ வங்கியின் பெயரில் ஒரு போலி செய்தி வெளியிடப்படுவதாகவும், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு தடுக்கப்படுவதைத் தவிர்க்க அவர்களின் பான் எண்ணைப் அப்டேட் செய்யுமாறும் கேட்கப்படுகிறது என்று ட்வீட் செய்துள்ளது.  

மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டதா? சரிபார்க்க வழிகள்!

மேலும் பிஐபி பொதுவாக மக்கள் தங்கள் தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களைப் பகிர்ந்து கொள்ளக் கேட்கும் மின்னஞ்சல்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதுபோன்ற போலியான செய்திகள் வரும் பட்சத்தில் மக்கள் report.phishing@sbi.co.in என்ற இணையதளத்தில் புகார் செய்யலாம் என்றும் பிஐபி கூறியுள்ளது.  கடந்த திங்கட்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் நவம்பர் 9 முதல் 15 வரை தனது 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் மூலம் எலெக்ட்டோரால் பாண்டுகளை வெளியிடுவதற்கும், பணமாக்குவதற்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிசி அமைச்சகம் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில் "இந்திய மாநில ஆர் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), XXIII கட்ட விற்பனையில், 09.11.2022 முதல் 15.11.2022 வரை அதன் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் மூலம் எலெக்ட்டோரால் பாண்டுகளை வெளியிடுவதற்கும் பணமாக்குவதற்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என்று அமைச்சகம் தெரிவித்திருந்தது.

மேலும் படிக்க | EPFO News: அதிகரிக்கிறதா இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் ஓய்வூதியம்? சமீபத்திய அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News