சொத்துக்கள் வாங்க PF தொகையை பயன்படுத்துவது எப்படி?
நிலுவையில் உள்ள வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் கூட PF பணத்தை பெற்று கொள்ளலாம்.
சொந்த வீடு கட்டுவது என்பது பலரது கனவு, இதற்கு குறிப்பிட்ட அளவு நிதி தேவைப்படுகிறது. வருங்கால வைப்பு நிதியை சமநிலைபடுத்துவும், குறிப்பாக சம்பளம் பெறுபவர்களுக்கு உதவும் வகையிலும் மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்று PF திரும்பப் பெறுவது, இருப்பினும் திரும்பப் பெறுவதற்கான அளவு பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. மேலும், ஒருவர் திரும்பப் பெறுவதற்குத் தகுதிபெற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஒரு சம்பளம் பெறும் தனிநபர், நிதியில் ஐந்து வருடங்கள் பங்களிப்பிற்குப் பிறகுதான் PF இருப்பைத் திரும்பப் பெற முடியும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) அனைத்து உறுப்பினர்களும் இதற்குத் தகுதியானவர்கள்.
மேலும் படிக்க | இந்த ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்: 14% அகவிலைப்படி அதிகரிப்பு
மேலும், உங்கள் PF திரும்பப் பெறுவது வீடு கட்டுவதற்காக இருந்தால், அந்த நிலம் உங்களுக்கோ அல்லது உங்கள் மனைவிக்கோ அல்லது இருவருக்கும் சொந்தமானதாக இருக்க வேண்டும். பணம் எடுத்தால், பணத்தை எடுத்த ஆறு மாதங்களுக்குள் வீட்டைக் கட்டத் தொடங்க வேண்டும், EPFO உறுப்பினர்கள் தவணை முறையில் திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சமயங்களில், வீடு கட்டும் பணியை திரும்பப் பெற்ற ஆறு மாதங்களுக்குள் தொடங்கி, கடைசித் தவணை செலுத்திய நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
வெவ்வேறு PF திரும்பப் பெறுவதற்கான காரணங்கள் வெவ்வேறு வரம்புகளைக் கொண்டிருக்கும் என்பதைக் குறிப்பிடுவது முக்கியம். அதாவது, ஒரு மனை வாங்குவதற்கு - 24 மாத அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ-வும் , வீடு கட்டுவதற்கு - 36 மாத அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ-வும், வீட்டை வாங்குவதற்கு - 36 மாத அடிப்படை சம்பளம் மற்றும் டிஏவும், வீட்டை மேம்படுத்த/புதுப்பிக்க - 12 மாத அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ-வும், வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு - 36 மாத அடிப்படைச் சம்பளம் மற்றும் டிஏ-வும் ஆகும்.
மேலும், இந்த பணம் எடுப்பது அனைத்தும் PF கணக்கு இருப்பில் 90 சதவீதமாக கட்டுப்படுத்தப்படும். வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துதல் EPF திட்டத்தின் பிரிவு 68-BB, நிலுவையில் உள்ள வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் PF திரும்பப் பெற அனுமதிக்கிறது. ஒரு ஊழியர் தனது பெயரிலோ அல்லது மனைவியின் பெயரிலோ வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான பணத்தை எடுக்கலாம். அவ்வாறு திரும்பப் பெறுவது 36 மாத அடிப்படைச் சம்பளமாக மட்டுமே இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR