இந்த ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்: 14% அகவிலைப்படி அதிகரிப்பு

Dearness Allowance Hike: ரயில்வே வாரியம் ஊழியர்களின் அகவிலைப்படியை ஒரே நேரத்தில் 14 சதவீதம் உயர்த்தியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 19, 2022, 02:11 PM IST
  • பணவீக்கத்தை சந்தித்து வரும் ரயில்வே ஊழியர்களுக்கு, அரசு பெரும் நிவாரணம் அளித்துள்ளது.
  • அகவிலைப்படி ஜூலை 1, 2021 முதல் 7 சதவீதமும், ஜனவரி 1, 2022 முதல் 7 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • 10 மாத டிஏ உயர்வு நிலுவைத் தொகையும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்: 14% அகவிலைப்படி அதிகரிப்பு title=

அகவிலைப்படி உயர்வு: தொடர்ந்து பணவீக்கத்தை சந்தித்து வரும் ரயில்வே ஊழியர்களுக்கு, அரசு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. ரயில்வே வாரியம் ஊழியர்களின் அகவிலைப்படியை ஒரே நேரத்தில் 14 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு இரண்டு முறையின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.

10 மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும்

இதனுடன், இந்த டிஏ உயர்வு பொருந்தக்கூடிய ஊழியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், அவர்களுக்கு 10 மாத டிஏ உயர்வு நிலுவைத் தொகையும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 6வது ஊதியக் குழுவின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு 7 சதவீத உயர்வு இரு பகுதிகளாக இந்த டிஏ உயர்வு கிடைக்கும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

டிஏ 203 சதவீதம் அதிகரித்துள்ளது

அகவிலைப்படி ஜூலை 1, 2021 முதல் 7 சதவீதமும், ஜனவரி 1, 2022 முதல் 7 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​ஆறாவது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு 189 சதவீத டிஏ வழங்கப்படுகிறது. 

மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத டிஏ நிலுவைத் தொகை கிடைக்கவுள்ளதா? உண்மை என்ன? 

இந்த ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 1, 2021 முதல் 7 சதவீதம் அதிகரித்து 196 சதவீதமாக உயரும். இதேபோல், ஜனவரி 1, 2022 முதல் 7 சதவீதம் அதிகரித்ததால், இது 203 சதவீதமாக அதிகரிக்கும். இது மே மாத ஊதியத்தில் 10 மாத நிலுவைத் தொகையுடன் ஊழியர்களுக்கு கிடைக்கும்.

ரயில்வே ஊழியர்களுக்கு இரட்டை நன்மை

ரயில்வே வாரியத்தின் இந்த முடிவு ஊழியர்களுக்கு இரட்டிப்பு பலன் தரும். நிதி இயக்குனரகம் மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு ரயில்வே வாரியம் இந்த முடிவை அமல்படுத்தியுள்ளது. முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மார்ச் மாதத்தில் 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. 7வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெற்ற லட்சக்கணக்கான ஊழியர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.

7வது ஊதியக் குழுவில் 34% டிஏ

மூன்று சதவீத உயர்வுக்குப் பிறகு, மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18 ஆயிரம் ரூபாயாகும். அரசு சார்பில் 7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தி அடிப்படை குறைந்தபட்ச சம்பளம் 7000 ரூபாயில் இருந்து 18000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், முழு கணக்கீடு இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News