பிரதமர் மோடி தலைமையிலான அரசு, முதல் முறையாக பதவி ஏற்றதில் இருந்தே, கருப்பு பணம் ஓழிக்கவும், கள்ள நோட்டுகளை அகற்றவும் டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவித்து வருகின்றது. அந்த வகையில், இந்த டிஜிட்டல் கரன்சியானது நிச்சயம் முக்கிய பங்கு வகிக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தினை வலுப்படுத்த உதவும் எனவும்,  இந்தியாவில் பண பரிவர்த்தனையை அடுத்த இடத்திற்கு எடுத்து செல்லும் என்றும் கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிஜிட்டல் கரன்சி என்பது மின்னணு வடிவில் இருக்கும் ஒரு பிரத்யேக நாணயமாகும். இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் நாணயத்தை நேற்று சோதனை அடைப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது நவம்பர் 1 ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் சோதனை முறையில் நாட்டின் முதல் டிஜிட்டல் கரன்சியை இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த முன்முயற்சியில் ஒன்பது வங்கிகள் ஈடுபட்டுள்ளன. அவை பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, HDFC வங்கி, ICICI வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, யெஸ் பேங்க், IDFC ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் HSBC ஆகிய வங்கிகள்.  


ஏற்கனவே பெரும்பாலான நாடுகளில் டிஜிட்டல் நாணயங்கள் உபயோகத்தில் உள்ளது. இந்த டிஜிட்டல் நாணயங்களில், கிரிப்டோகரன்சி, ஸ்டேபிள் காயின்கள், மூன்றாவது CBDC எனப்படும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் ஆகிய மூன்று வகைகள் உள்ளன. இதன் மூலம்24 மணி நேரமும் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அதோடு ரொக்க பணத்தை போல வங்கிகள் அல்லது ஏடிஎம்மில் சென்று பணம் எடுக்க வேண்டியதில்லை. இதற்காக கூடுதல் கட்டணம் எதுவும்  செலுத்த வேண்டியதில்லை.


சில்லறை பங்கு வாடிக்கையாளர்களுக்கான டிஜிட்டல் நாணய பயன்பாடு, சோதனை அடிப்படையில் ஒரு மாதத்திற்குள் தொடங்கப்படும் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணத்தின் மீதான மக்களின் சார்பு, டிஜிட்டல் நாணயம் மூலம் குறைக்கப்படும். மேலும் சில வழிகளில், மொத்த விற்பனை பரிவர்த்தனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். பரிவர்த்தனை தற்போது ரொக்கம், ரூபாய், காசோலைகள் அல்லது வேறு ஏதேனும் நிதி அமைப்பு மூலம் மேற்கொள்ளப்படுகிறது.


மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் என்பது ஒரு நாட்டின் முக்கிய நாணயத்தின் டிஜிட்டல் வடிவமாகும். டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி கண்காணிப்பதால் ஒவ்வொரு ரூபாய் பரிமாற்றமும் கணக்கில் வரும். இதன் மூலம் மோசடி, ஊழல் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சர்வதேச அளவில் இந்தியாவில் பரிவர்த்தனையை கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரிவர்த்தனைகள் செலவைக் குறைக்கிறது என்பதால், பணம் அனுப்பும் செலவு குறையும்.


மேலும் படிக்க | RBI Digital Rupee:இன்று அறிமுகமாகிறது டிஜிட்டல் கரன்சி; ரிசர்வ் வங்கி அறிவிப்பு 


கூகுள் பே, பேடிஎம் மற்றும் யுபிஐ இ-வாலட்டுகளிலிருந்து டிஜிட்டல் கரன்சி வேறுபடுகிறது. இ-வாலட்டுகளுக்கு வரம்பு உள்ளது. ஆனால் டிஜிட்டல் கரன்சியில் அதிக பணத்தை அங்கு கொண்டு செல்லலாம். இருப்பினும், இதில் பாதுகாப்பு அம்சம் குறித்த கவலைகளுக்கு உள்ளது. தவறான எண்ணுக்கு பணம் மாற்றப்பட்டால் என்ன செய்வது என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இதனை ரிசர்வ் வங்கி இதன் பிரத்தியேக அம்சங்களை விரைவில் தெளிவுபடுத்தும் என கூறப்படுகிறது.


மேலும், டிஜிட்டல் கரன்சிகள் காலாவதியாவதில்லை. தற்போது, ​​இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை மாற்றுவது சவாலாக உள்ள நிலையில், தற்போது அவை எளிதாகிவிடும். மேலும், பணப் பரிமாற்றத்தை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெட் பேங்கிங்கில் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் உண்டு. டிஜிட்டல் கரன்சி முறையில் கட்டணம் வசூலிக்கப்படாது.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, அடிப்படை ஊதியம் ரூ.9,000 அதிகரிக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ