ரூ.2000 நோட்டை மாற்ற வங்கிக்கு செல்கிறீர்களா? இந்த அப்டேட் அவசியம்... அலர்ட் மக்களே!!
Rs. 2000 Note: இன்னும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றாமல் அல்லது டெபாசிட் செய்யாமல் உள்ளவர்கள், வரும் நாட்களில் இதை டெபாசிட் செய்ய உள்ளவர்கள் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ரூ.2000 நோட்டு: ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, மக்கள் அதை மாற்றவும் டெபாசிட் செய்யவும் வங்கிகளை தொடர்பு கொண்டு வருகின்றனர். 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்றிக்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி நான்கு மாதங்கள் அவகாசம் அளித்துள்ளது. 2000 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை 30 செப்டம்பர் 2023 வரை மாற்றலாம் அல்லது டெபாசிட் செய்யலாம். இன்னும் இந்த 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றாமல் அல்லது டெபாசிட் செய்யாமல் உள்ளவர்கள், வரும் நாட்களில் இதை டெபாசிட் செய்ய உள்ளவர்கள் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் மாநிலத்தில் வங்கி விடுமுறை நாட்களை பற்றி நன்கு தெரிந்துகொண்டு பின்னர் வங்கிக்கு செல்வது நல்லது.
2000 ரூபாய் நோட்டு
மே 19, 2023 தேதியிட்ட ரிசர்வ் வங்கியின் செய்திக்குறிப்பின்படி, "ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும் அல்லது மாற்றுவதற்கான வசதி செப்டம்பர் 30, 2023 வரை பொதுமக்களுக்குக் கிடைக்கும். அனைத்து வங்கிகளும் தங்கள் கிளைகள் மூலம் ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்றிக்கொள்வதற்கான வசதியை பொதுமக்களுக்கு வழங்கும்." ஆகையால், இந்த பணியை இன்னும் செய்து முடிக்காதவர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு முன்னர் இந்த பணியை செய்து முடித்துக்கொள்ளலாம்.
வங்கி விடுமுறைகள்
நீங்கள் செப்டம்பர் மாதத்தில் 2000 ரூபாய் நோட்டை மாற்றவோ அல்லது வங்கியில் டெபாசிட் செய்யவோ சென்றால், செப்டம்பர் மாதத்தில் வரும் வங்கி விடுமுறைகள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். சில மாநிலங்களில், ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி, / க்ருஷ்ண ஜெயந்தி / ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி, வரசித்தி விநாயக விரதம் / விநாயக சதுர்த்தி / கணேஷ் சதுர்த்தி ஆகிய நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
மேலும் படிக்க | மீண்டும் ரூ.2000 நோட்டு பற்றிய முக்கிய செய்தி: ரிசர்வ் வங்கி அளித்த அப்டேட்
செப்டம்பர் 2023 இல் வங்கி விடுமுறைகள்
மேலும் ஸ்ரீ நாராயண் குரு சமாதி தினம், மகாராஜா ஹரி சிங் ஜி பிறந்தநாள், ஸ்ரீமந்த் சங்கர்தேவ் பிறந்த நாள், மிலாத்-இ-ஷெரிப் (முகமது நபி பிறந்த நாள்), ஈத்-இ-மிலாத்/ஈத்-இ-மிலாதுன்னபி (முகமது நபி பிறந்த நாள்), ஈத்-இ-மிலாத்-உல்-நபிக்குப் பிறகு (இந்திரஜாத்ரா/வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். மறுபுறம், செப்டம்பர் மாதத்தில் ஞாயிறு, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் உட்பட மொத்தம் 17 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். எனினும், இவை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.
500 ரூபாய் நோட்டு, சமீபத்திய புதுப்பிப்பு:
2000 ரூபாய் நோட்டு புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வந்தது முதல், இன்னும் பல ரூபாய் நோட்டுகள் பற்றிய பல வித செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக 500 ரூபாய் நோட்டு பற்றி பல வதந்திகள் கிளம்பியுள்ளன. எனினும், மக்கள் அதிகாரப்பூர்வ அமைப்புகளிலிருந்து வரும் அறிவிப்புகள் மற்றும் செய்திகளைத் தான் நம்ப வேண்டும் என்றும் ஆதாரமற்ற வதந்திகளை நம்பக்கூடாது என்றும் இந்திய அரசாங்கமும் இந்திய ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
அந்த வகையில், சமீபத்திலும் 500 ரூபாய் நோட்டு தொடர்பான ஒரு செய்தி வைரலாக பரவியது. இது குறித்த விளக்கம் அளிக்க ரிசர்வ் வங்கு முன்வர வேண்டிய நிலையும் ஏற்பட்டது. ‘ஸ்டார் மார்க்' (*) கொண்ட நோட்டின் செல்லுபடியாகும் தன்மை குறித்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்படும் அனைத்து அச்சங்களையும் வதந்திகளையும் ரிசர்வ் வங்கி நிராகரித்துள்ளது. இந்நிலையில், தொடரின் நடுவில் நட்சத்திரம் உள்ள நோட்டை நீங்கள் பெற்றிருந்தால், மற்ற நோட்டுகளைப் போலவே இந்த நோட்டும் செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | இந்தியாவில் ரூ.500 நோட்டு மற்றும் ஆதார் அட்டை தடையா? வெளியான அதிர்ச்சி தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ