மீண்டும் ரூ.2000 நோட்டு பற்றிய முக்கிய செய்தி: ரிசர்வ் வங்கி அளித்த அப்டேட்

2000 Rupees Notes: ரிசர்வ் வங்கியின் மான்டேரி கொள்கையின் கடைசி நாளான நேற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து கவர்னர் சக்திகாந்த தாஸ் தேவையான அப்டேட்களை அளித்துள்ளார். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 11, 2023, 07:20 AM IST
  • 2000 ரூபாய் நோட்டுகள் குறித்தும் ஒரு முக்கியமான அப்டேட்.
  • இந்த முடிவு மே 19 அன்று எடுக்கப்பட்டது.
  • ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை.
மீண்டும் ரூ.2000 நோட்டு பற்றிய முக்கிய செய்தி: ரிசர்வ் வங்கி அளித்த அப்டேட் title=

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை அதிகரிக்கவில்லை. ரிசர்வ் வங்கியின் மான்டேரி கொள்கையின் கடைசி நாளான நேற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் சக்திகாந்த தாஸ் 2000 ரூபாய் நோட்டுகள் குறித்தும் ஒரு முக்கியமான அப்டேட்டை கொடுத்துள்ளார். அதன்படி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது பெரும் பலன் அளிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதனுடன் பணப்புழக்கமும் அதிகரிக்கும். மேலும் இதுவரை 87 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துள்ளன என்றும் கூறியுள்ளார்.

2000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக அரசு எடுத்த முடிவு உபரி பணப்புழக்கத்தை அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார். மேலும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டதால் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.

பணப்புழக்கம் என்பது கடனைச் சந்திக்க உடனடியாகக் கிடைக்கும் அல்லது முதலீட்டுக்குப் பயன்படுத்தப்படும் தொகையைக் குறிக்கிறது. இதனுடன், இது பணத்தின் அளவையும் காட்டுகிறது.

மேலும் படிக்க | Mutual Funds முதலீட்டாளர்களுக்கு முக்கிய டிப்ஸ்: இதிலிருந்து எப்போது வெளியேற வேண்டும்? 

இந்த முடிவு மே 19 அன்று எடுக்கப்பட்டது
கடந்த வாரம் கிடைத்த தகவலின்படி, ஜூலை 31ம் தேதி வரை புழக்கத்தில் இருந்து வெளியேறிய ரூ.2000 நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.14 லட்சம் கோடி ஆகும். 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து வாபஸ் பெற மத்திய அரசு கடந்த மே 19ம் தேதி முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்களும் இதை செய்ய வேண்டும்
2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த மே மாதத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதைத் தொடர்ந்து, மக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்திவருகிறார்கள் அல்லது ரூ.500, ரூ.100 நோட்டுகளாக மாற்றிப் பெறுகிறார்கள். மேலும் மக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம் என்று இந்தியன் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற கூடுதல் கால அவகாசம் வழங்குவதா, வேண்டாமா என செப்டம்பர் மாத இறுதியில் முடிவு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை
44வது நிதிக் கொள்கை மீளாய்வுக் கூட்டத்தில் (எம்பிசி கூட்டம்) இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஏப்ரல், ஜூன் மாதங்களைத் தொடர்ந்து தற்போது ஆகஸ்டிலும் மூன்றாவது முறையாக ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை பழைய நிலையிலேயே வைத்திருக்கிறது. ஜூன் மாதத்தில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6.5 சதவிகிதம் என்ற அதே அளவில் வைத்தது. தற்போது மீண்டும் அதே அளவே நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நேற்று நடைபெற்ற எம்பிசி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒருமித்த கருத்துடன் ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகத் தக்கவைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். முன்னதாக, அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை இரண்டரை சதவீதம் உயர்த்தியது. ரெப்போ விகிதத்தில் இந்த மாற்றம் மே 2022 முதல் மார்ச் 2023 வரை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு, மே 2022 வரை ரெப்போ விகிதம் 4 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது அதன் விகிதம் 6.5 சதவீதமாக உள்ளது.

மேலும் படிக்க | பொதுமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட், எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News