ரிஸ்க் எடுக்காமல் ரஸ்க் சாப்பிடும் நபரா நீங்கள்? இந்த முதலீட்டு திட்டம்தான் உங்களுக்கு ஏற்றது
Investment Tips: அதிக ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, நிலையான வருமான முதலீட்டு திட்டம் ஏற்றதாக இருக்கும்.
நிலையான வருமான முதலீடு (Fixed Income Investment ) எந்த ரிஸ்க்கும் எடுக்காமல், எந்த வித அபாயமும் இல்லாமல் நிலையான வருமானத்தை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வருகிறது. இந்த பண்டிகைக் காலத்தில், உங்களுக்கு திடீர் பண வரவு ஏற்பட்டால், அல்லது நீங்கள் முதலீடு செய்ய விரும்பி அதற்கான தொகை உங்களிடம் சேர்ந்திருந்தால், ரிஸ்க் இல்லாமல் நீங்கள் அதை முதலீடு செய்ய விரும்பினால், உங்களுக்கு நிலையான வருமான முதலீட்டு திட்டம் ஏற்றதாக இருக்கும்.
ஃபிக்ஸ் இன்கம் இன்வெம்ஸ்ட்மெண்ட், அதாவது நிலையான வருமான முதலீடு என்றால் என்ன? அதன் பெயர் குறிப்பிடுவது போல, முதிர்வு வரை உத்தரவாதமான வருவாயை உங்களுக்கு வழங்கும் முதலீட்டு வழியாகும் இது. மேலும் மெச்யூரிட்டியின் போது, முதலீட்டாளர் தனது அசல் தொகையையும் திரும்பப் பெறுகிறார்.
நிலையான வருமான முதலீடு என்பது ஒரு முதலீட்டாளருக்கு நிலையான வட்டி அல்லது ஈவுத்தொகை வடிவத்தில் நிலையான பணப்புழக்கத்தை வழங்கும் ஒரு அசெட் அல்லது பாதுகாப்பாகும். ரிஸ்க் அதிகம் உள்ள முதலீடுகளில் கிடைக்கும் அளவு இங்கு லாபம் கிடைக்காமல் போகலாம். ஆனால், இங்கு முதலீடு செய்தால் நீங்கள் உங்கள் பணம் பற்றி கவலை இல்லாமல் இருக்கலாம்.
நிலையான முதலீட்டுத் திட்டங்களில், அரசு அல்லது கார்ப்பரேட் பத்திரங்கள், அரசாங்க சேமிப்புத் திட்டங்கள் போன்ற பல திட்டங்களை நீங்கள் பெறக்கூடும். இது தவிர, நிலையான வருமான பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETFs) மற்றும் நிலையான வருமான மியூசுவல் ஃபண்டுகளும் இதில் அடங்கும். அத்தகைய சில திட்டங்களை இங்கே காணலாம்.
கடன் நிதிகள் (டெப்ட் ஃபண்ட்ஸ்)
டெப்ட் ஃபண்ட்ஸ், அரசு அல்லது கார்ப்பரேட் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. இவற்றில் ரிஸ்க் குறைவு. ஆனால் அதற்கேற்ப வருமானமும் குறைவாக இருக்கும். இந்த காரணத்திற்காக இது பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizens Savings Scheme)
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது ஒரு நல்ல முதலீட்டு திட்டமாக இருக்கும். இது குறைந்த வரி வரம்பைக் கொண்டுள்ளது. இதன் மூலம் வழக்கமான வருமானம் வந்து கொண்டிருக்கும். இதில் முதலீட்டு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். மேலும் மூன்று ஆண்டுகளுக்கு இதை நீட்டிக்க முடியும். இதில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund)
PPF அல்லது பொது வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு பிரபலமான முதலீட்டு திட்டமாகும். நீண்ட கால முதலீட்டிற்கு இது உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதில், நல்ல வட்டி விகிதத்தில் வருமானம் கிடைப்பதுடன், வரி விலக்கும் கிடைக்கும். வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் இந்த முதலீட்டைக் காட்டினால், உங்களின் வரிவிதிப்பு வருமானம் (டேக்ஸ் ஸ்லேப் இங்கம்) குறைக்கப்படலாம். இதில், ஒரு வருடத்தில் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (Voluntary Provident Fund)
தன்னார்வ வருங்கால வைப்பு நிதியும் PPF ஐப் போன்றது. இது ஒரு சம்பளம் பெறும் ஊழியர் தானாக முன்வந்து குறைத்துக்கொள்ளும் சம்பளமாகும். இந்த குறைக்கப்பட்ட ஊதியமானது அவரது வருங்கால வைப்பு நிதி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும். மேலும் இதன் மூலம் நீண்ட காலத்துக்கு செல்வத்தை குவிக்க முடியும்.
இது தவிர, பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா, செல்வமகள் சேமிப்புத் திட்டம், தபால் அலுவலகம் தொடர் வைப்பு, தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம், தபால் அலுவலக நேர வைப்பு, வங்கி நிலையான வைப்பு போன்ற பல விருப்பங்கள் உள்ளன. அவை உங்களுக்கு நிலையான வருமானத்தைத் தரும்.
மேலும் படிக்க | SBI வாடிக்கையாளர்களே உஷார்!! இந்த கட்டணங்களை உயர்த்தியது வங்கி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ