SIP: தினசரி 50 ரூபாய் சேமித்தால் 5 வருடங்களில் லட்சாதிபதியாகலாம்!

தினசரி 50 ரூபாய் சேமித்தால் போதும் ஐந்தே ஆண்டுகளில் லட்சாதிபதி ஆகலாம்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 25, 2021, 08:53 AM IST
  • சிறு துளி பெரு வெள்ளம்
  • தினசரி 50 ரூபாய் சேமிப்பது மிகவும் எளிது
  • 50 ரூபாய் 5 வருடங்களில் லட்சமாக அதிகரிக்கும்
SIP: தினசரி 50 ரூபாய் சேமித்தால் 5 வருடங்களில் லட்சாதிபதியாகலாம்! title=

Mutual Fund SIP Investment: Mutual: மாதந்தோறும் SIPயில் சிறிய அளவிலான தொகையை   முதலீடு செய்தால், எதிர் வரும் ஆண்டுகளில் கணிசமாக தொகையை சேமிக்கலாம். சிறு துளி பெரு வெள்ளம் என்பதைப் போல, தொகை சிறியதாக இருந்தாலும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு கணிசமானத் தொகை கையில் கிடைக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் SIP என்பது முதலீட்டின் ஒரு விருப்பமாகும், இதன் மூலம் நீங்கள் வழக்கமான சிறு சேமிப்பு மற்றும் முதலீடுகளிலிருந்து ஈக்விட்டி போன்ற வருமானத்தைப் பெறலாம். உங்கள் சேமிப்பை மாதந்தோறும் முதலீடு செய்யும் பழக்கத்தை நீங்கள் மேற்கொண்டால், அடுத்த சில ஆண்டுகளில் எளிதாக பல லட்சம் ரூபாய்களை உருவாக்க முடியும்.

உதாரணமாக, தினமும் 50 ரூபாய் சேமித்து, ஒவ்வொரு மாதமும் SIP இல் முதலீடு செய்வதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் 5 ஆண்டுகளில் 1-2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை எளிதாக உருவாக்கலாம். ஐந்து ஆண்டுகளில் 20 முதல் 30 சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட வருவாயைக் கொடுக்கும் பல பரஸ்பர நிதித் திட்டங்கள் உள்ளன.

Read Also | லாரி டிரைவர்களுக்கு 72 லட்சம் ரூபாய் சம்பளம்!

SIP கால்குலேட்டர்: ஒரு நாளைக்கு ரூ .50 சேமித்தால் அது எப்படி லட்சக்கணக்கில் திரும்பக் கிடைக்கும்? தெரிந்துக் கொள்ளுங்கள்

நாளொன்றுக்கு 50 ரூபாய் சேமித்தால், மாதம் ரூ .1,500 சேமிக்கிறீர்கள் என்று பொருள். அதை SIPயில் முதலீடு செய்தால், 20% வருடாந்திர வருமானம் கிடைக்கும். நீங்கள் சேமிக்கும் 1500 ரூபாயை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் 1.55 லட்சத்துக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்வீர்கள். ஆண்டு வருமானம் 30 சதவீதம் என்று வைத்துக் கொண்டால், உங்கள் முதலீட்டுடன் சேர்த்து இந்த நிதி 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வளரும்.

அதுவே, வருடாந்திர வருமானம் 25 சதவிகிதமாக கிடைத்தால் 5 ஆண்டுகளில் உங்கள் முதலீடு 1.80 லட்சத்தையும் தாண்டும். இதனால் உங்களுக்கு கிடைக்கும் வருவாய் அதிகமாகும்.

பொதுவாக மியூட்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்கள் 30% க்கும் அதிகமான வருமானத்தை கொடுக்கின்றன. பரஸ்பர நிதிகள் போன்ற பல முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன, கடந்த 5 ஆண்டுகளில் அதன் வருமானம் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. உதாரணமாக, ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் டெக்னாலஜி ஃபண்டின் 5 வருட வருடாந்திர வருவாய் 33 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தது.

Also Read | மத்திய அரசு ஊழியர்களின் பணிக்கொடை ரூ.7 லட்சமாக உயர்கிறதா?  

இதேபோல், டாடா டிஜிட்டல் இந்தியா நிதியின் வருவாய் 32 சதவிகிதம், ஆதித்யா பிர்லா சன் லைன் டிஜிட்டல் இந்தியா ஃபண்ட்  (Aditya Birla Sun Life Digital India Fund) 31 சதவிகிதத்திற்கும் அதிகமான வருவாயைக் கொடுத்தது. இதேபோல், குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் 22 சதவிகிதத்திற்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளது. (இந்த நிதிகளின் வருமானம் NAV இன் அடிப்படையில் 23 செப்டம்பர் 2021 அன்று அறிவிக்கப்பட்டன.)

SIP என்பது ஒரு முறையான முதலீட்டு முறை. கடந்த ஐந்து ஆண்டுகளில், இதுபோன்ற பல நிதிகள் மக்களுக்கு கணிசமான லாபத்தைக் கொடுத்துள்ளன. அவற்றின் வருடாந்திர SIP வருமானம், 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதில், சந்தையின் அபாயத்தை முதலீட்டாளர் நேரடியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. அதே நேரத்தில், வருமானமும் பாரம்பரிய முதலீட்டை விட அதிகமாக உள்ளது. 

எனினும், இதிலும் ஆபத்து இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. எனவே, ஒரு முதலீட்டாளர் தனது வருமானம், இலக்கு மற்றும் இடர் விவரங்களைப் பார்த்து முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். இதில், SIP இன் சிறப்பு என்னவென்றால், மாதத்திற்கு வெறும் 100 ரூபாயுடன் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். இதன் மூலம், முதலீடு செய்யும் பழக்கம் உருவாகும், சந்தை ஆபத்து மற்றும் அதன் மீதான வருவாயின் மதிப்பீட்டை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ள இந்த சிறிய தொகை முதலீடு உதவும்.  

ALSO READ: 7th Pay Commission: DA, DR குறித்து அரசின் தலையீட்டை நாடிய ஓய்வூதியர் சங்கம், விவரம் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News