தங்கம் விலை நிலவரம்: தொடர்ந்து சரிவை சந்திக்கும் தங்கத்தின் விலை...!!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதால், தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 48,860 ரூபாயாக உள்ளது.


நேற்று தங்கத்தின் விலை 258 ரூபாய் அதிகரித்து 10 கிராமுக்கு 51,877 ரூபாயாக இருந்தது.


வெள்ளியின் விலையும் நேற்று அதிகரித்தது. கிலோ ஒன்றுக்கு 837 ரூபாய் அதிகரித்து 69,448 ரூபாயாக இருந்தது.


ரூபாயின் மதிப்பு 21 காசுகள் குறைந்து ஒரு டாலரின் விலை 73 ரூபாய் 35 காசுகளாக உள்ளது.


கடந்த மாதத்தில் தங்கத்தின் விலை ரூ.5500 வரை குறைந்துள்ளது. ஆகஸ்ட் 7 ஆம் தேதி 10 கிராமுக்கு 56,200 ரூபாயை எட்டிய தங்க விலை, இப்போது 10 கிராம், ரூ 51,877 ரூபாய் என குறைந்துள்ளது. வெள்ளி விலையும் ஒரு மாதத்தில் ஒரு கிலோவுக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது.


கடந்த வர்த்தக வாரத்தில் தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. தங்கம் கடந்த 3 நாட்களில் மட்டும் 10 கிராமுக்கு சுமார் ரூ.800 குறைந்துள்ளது. மறுபுறம், கடந்த 1 மாதத்திற்கான தரவைப் பார்த்தால், தங்கத்தின் விலை சுமார் 5500 ரூபாய் குறைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது.


ALSO READ | பென்ஷன் இல்லையேன்னு டென்ஷன் வேண்டாம்.. LIC பாலிஸியில் மிக அற்புத திட்டம் இருக்கு..!!!