அரசு பெண் ஊழியர்கள் ஓய்வூதியத்திற்கான நாமினியை நியமிக்க சிறப்பு உரிமை! மத்திய அரசு அதிரடி!
Pension Act Amendment By Centre: மத்திய அரசு நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதிய விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
Pension Nomination And Women Employee : குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதார தாக்கங்களைக் கொண்ட ஒரு முக்கிய நடவடிக்கையாக, குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக மத்திய அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அரசு ஊழியர்களில் பெண்கள், தங்கள் கணவர்களுக்குப் பதிலாக தங்கள் மகன்கள் அல்லது மகள்களை குடும்ப ஓய்வூதியத்திற்கு பரிந்துரைக்க அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று (2024 ஜனவரி 29, திங்கட்கிழமை) மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதிய விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குடும்ப ஓய்வூதியம் தொடர்பான புதிய விதி
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை (Department of Pensions and Pensioners' Welfare (DoPPW)) மூலம் மாற்றப்பட்ட மத்திய சிவில் சேவைகள் விதிகள் (Central Civil Services (Pension) Rules), 2021-ன் திருத்தங்களின்படி, பெண் அரசு ஊழியர்கள் தங்கள் கணவர்களுக்குப் பதிலாக தங்கள் மகன்கள் அல்லது மகள்களை குடும்ப ஓய்வூதியத்திற்காக பரிந்துரைக்கலாம் என ஜனவரி 29 அன்று அறிவித்தது.
இந்த முடிவு "புதிய பாதை படைக்கும்" என்றும், "நீண்ட கால அளவில் சமூகம் மற்றும் பொருளாதார தாக்கத்தை" ஏற்படுத்தும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வ வெளியீட்டில் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, ஒரு பெண் அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், அவரது கணவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது, கணவர் இல்லையென்றாலும், அவரால் இயங்கமுடியாத நிலையிலும் அல்லது மறைவுக்குப் பிறகு மட்டுமே குடும்பத்தின் பிற உறுப்பினர் குடும்ப ஓய்வூதியம் பெற முடியும் என்று விதிமுறைகள் இருந்தன.
"குடும்ப ஓய்வூதிய சட்டத்தின் புதிய திருத்தம் பெண் அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் கணவருக்கு பதிலாக, தகுதியான குழந்தை / குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியத்தை வழங்கக் கோர அனுமதிக்கிறது" என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசு ஊழியா் ஒருவரின் உயிரிழப்புக்குப் பின், குடும்ப ஓய்வூதியத்தின் பலன் அவரது வாழ்க்கைத்துணைக்கு மட்டுமே என்று இருந்த நிலையில் தற்போது பெண்களுக்கு மட்டும் மத்திய அரசு தற்போது திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, பெண் அரசு ஊழியா்கள் தனது மகன் அல்லது மகளின் பெயரை குடும்ப ஓய்வூதியம் பெற பரிந்துரை செய்து நியமனம் செய்ய முடியும் என்று மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திருமண முரண்பாடுகள் விவாகரத்து வழக்குகளுக்கு வழிவகுக்கும் அல்லது குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், வரதட்சணைத் தடைச் சட்டம் அல்லது இந்திய தண்டனைச் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளுக்கு இந்தத் திருத்தம் தீர்வு காணும் என்று மத்திய பணியாளர்களுக்கான இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணையின் போது அரசு பெண் ஊழியர் அல்லது ஓய்வூதியம் பெறுவோர் இறந்து விட்டால், அதன்படி குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Budget 2024: சேமிப்பு கணக்கு வட்டி வருமானத்தின் மீதான வரி விலக்கு அதிகரிக்கலாம்!
பெண்களுக்கு சமமான மற்றும் நியாயமான உரிமைகளை வழங்குவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியின் கொள்கைக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
அரசு ஊழியர்களில் பெண்கள் அல்லது ஓய்வூதியம் பெறும் பெண்கள் தங்கள் நியமனதாரரை மாற்ற விரும்பினால், சம்பந்தப்பட்ட அலுவலகத் தலைவரிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுக்க வேண்டும், அதில் தகுதியான குழந்தைக்கு முன்னுரிமை அளிக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
மத்திய அரசு வேலைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தவும் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை (DoPT) ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ