Union Budget on February 1: 2024-25 நிதியாண்டுக்கான கடன்கள் எவ்வளவு இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணிப்பு வெளியிட்டு வருகின்றனர். மத்திய அரசு மொத்தக் கடன்களை நடப்பு ஆண்டின் அளவிற்கு அருகில் வைத்திருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும்போது, அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த கடன் எவ்வளவாக இருக்கும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொத்த சந்தைக் கடன் ரூ.15 லட்சம் கோடி (180.47 பில்லியன் டாலர்) முதல் ரூ.15.5 லட்சம் கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடலாம் என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறுகிறது. 2024/25 ஆம் ஆண்டிற்கான அதன் மொத்த சந்தைக் கடனை இந்த நிதியாண்டின் நிலைக்கு நெருக்கமாக வைத்திருக்கலாம், முக்கியமாக தொற்றுநோய் செலவினங்கள் காரணமாக மொத்த கடன்கள் வெகுவாக அதிகரித்திருப்பதாக இரண்டு அரசாங்க ஆதாரங்களின் அடிப்படையில் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் போது, அடுத்த நிதியாண்டில் இந்தியா அதன் மொத்த சந்தைக் கடன் ரூ.15 லட்சம் கோடி (180.47 பில்லியன் டாலர்) முதல் ரூ.15.5 லட்சம் கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடலாம் என்று வளர்ச்சியை அறிந்த இரு அதிகாரிகளும் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | Budget 2024: சேமிப்பு கணக்கு வட்டி வருமானத்தின் மீதான வரி விலக்கு அதிகரிக்கலாம்!
அதாவது மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் ரூ.15.43 லட்சம் கோடி இலக்கை கடன் தொகை எட்டியுள்ளது. அதில், ஜனவரி 22ஆம் தேதி வரை சுமார் ரூ.14.08 லட்சம் கோடி அதாவது சுமார் 91 சதவீதத்தை அரசாங்கம் வாங்கியுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய்க்கு சற்று முன்பு, 2019/20ல் அதன் மொத்த சந்தைக் கடன்கள் ரூ. 7.1 லட்சம் கோடியாக இருந்தது.
"இந்த நிதியாண்டில் சந்தைக் கடன்களை குறைப்பதில் அரசு தீவிரமாக உள்ளது" என்று அதிகாரி ஒருவர் கூறினார். வரவு செலவுத் திட்டங்களைப் பற்றி கருத்தை தெரிவித்தாலும், தங்கள் பெயரை இரு அதிகாரிகளும் வெளியிட விரும்பவில்லை.
ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பின்படி, மொத்தக் கடன் பெறுவதற்கான புள்ளிவிவரங்கள், பொருளாதார வல்லுநர்களின் மதிப்பீடான ரூ.15.6 லட்சம் கோடி என்ற தொகைக்கு அருகில் உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவாரா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் நடைபெற ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களுக்கான செலவினங்களைக் குறைப்பதன் மூலம் அரசாங்கம் அதன் நிதிப் பற்றாக்குறையை குறைந்தபட்சம் 50 அடிப்படை புள்ளிகளால் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது என்றும் அனுமானிக்கப்படுகிறது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிற்வனத்தின் கருத்துக் கணிப்பு, அரசாங்கம் தனது நிதிப் பற்றாக்குறையை இந்த ஆண்டு 5.9 சதவீதத்தில் இருந்து 5.3 சதவீதமாகக் குறைக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்ப்புக்கு இடையில் வந்துள்ளது. ஆனால், தேர்தல் நடைபெறும் ஆண்டு இது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து ஆறாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள மத்திய நிர்மலா சீதாராமன், நடுத்தர வர்க்கத்தினருக்கும், உழைக்கும் மக்களுக்கும் சிறப்பு அறிவிப்பையும் பட்ஜெட்டில் அறிவிக்கலாம் என்ற எதிர்பார்புகளும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ