வீட்டுக்கடன் வட்டி விகிதங்களை உயர்த்தியது LIC HFL!
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (எல்ஐசி எச்எஃப்எல்) வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.40% வரை உயர்த்துகிறது.
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (எல்ஐசி எச்எஃப்எல்) வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 20 அடிப்படை புள்ளிகள் அல்லது 6.7 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகிதத்தின் உயர்வு கடன் வாங்குபவர்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது, இந்த வட்டி உயர்வானது வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. சிபில் ஸ்கோர் 700 மற்றும் அதற்கு மேல் உள்ள கடன் வாங்குபவர்களுக்கு, சமீபத்திய வீட்டுக் கடன் வட்டி விகிதம் 20 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | இந்த நேரத்தில் டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியாது!
சிபில் ஸ்கோர் 700 க்கும் குறைவாக மற்றும் என்டிசி வாடிக்கையாளர்களுக்கு 25 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.25% மற்றும் 40பிபிஎஸ் அல்லது 0.40% வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சிபில் ஸ்கோர் என்பது வாடிக்கையாளரின் கடன் வரலாற்றின் 3 இலக்க எண் ஆகும், கிரெடிட் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும். சிபில் ஸ்கோர் எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு சிறந்த கிரெடிட் ரேட்டிங்கும் இருக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதங்களை 40 என இருந்த அடிப்படை புள்ளிகளை 4.40 சதவீதமாக உயர்த்தியதைத் தொடர்ந்து வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை எல்ஐசி எச்எஃப்எல் உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி நீண்ட காலத்திற்குப் பிறகு பாலிசி விகிதங்களை உயர்த்தியுள்ளது மற்றும் அதன் தாக்கம் கடன் வழங்குபவர்களிடையே காணப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் முடிவைத் தொடர்ந்து, பல பொது மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் கடன் வழங்குபவர்கள் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை நிதிகளின் மார்ஜினல் காஸ்ட் மற்றும் ரெப்போ விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் உயர்த்தியுள்ளனர். இதில் ஹெச்டிஎஃப்சி வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் கரூர் வைஸ்யா வங்கி போன்ற சில வங்கிகளும் அடங்கும்.
மேலும் படிக்க | SIP முதலீட்டில் ஏகப்பட்ட லாபம்: இந்த அம்சங்களில் தெளிவு தேவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR