புதுடெல்லி: தனிநபர் கடனுக்கான RBI விதிகள்: ரிசர்வ் வங்கி ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. இப்போது இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (NBFCs) தனிநபர் கடன்கள் தொடர்பான விதிகளை மேலும் கடுமையாக்கியுள்ளது. ரிஸ்க் வெயிட்டேஜ் (risk weightage) 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விதிகள் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தாது. வீட்டுக் கடன், கல்விக் கடன் மற்றும் வாகனக் கடன் ஆகியவற்றிற்கு இந்த புதிய ரிஸ்க் வெயிட்டேஜ் பொருந்தாது. இது தவிர, தங்கம் மற்றும் தங்க நகைகளுக்கு எதிராக வழங்கப்படும் கடனுக்கும் இந்த விதி பொருந்தாது. இந்தக் கடன்களுக்கு 100 சதவீதம் ரிஸ்க் வெயிட்டிங் பொருந்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விரிவாக கூறுவதென்றால், வணிக வங்கிகள் மற்றும் என்பிஎஃப்சிகளின் நுகர்வோர் கடன் வெளிப்பாட்டின் ரிஸ்க் வெயிட்டேஜ் புள்ளிகளை 100 சதவிகிதம் என்பதிலிருந்து 125 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை (2023 நவம்பர் 16) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


வணிக வங்கிகளின் நுகர்வோர் கடன் வெளிப்பாடு (நிலுவையில் உள்ளவை மற்றும் புதியவை), தனிநபர் கடன்கள் உட்பட பல கடன்களுக்கு 25 சதவீத புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | திரும்பி பார்க்க வைத்த அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம்: ரிசர்வ் வங்கியின் இலக்கை எட்டுமா?


தனிநபர் கடனுக்கான விதிகள்


அதிக ரிஸ்க் வெயிட்டேஜ் என்பது, பாதுகாப்பற்றதாகக் கருதப்படும் தனிநபர் கடன்கள் என்று வரும்போது, ​​வங்கிகள் அதிகத் தொகைக்கு தனி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அதிக ரிஸ்க் வெயிட்டிங் வங்கிகளின் கடன் வழங்கும் திறனைக் கட்டுப்படுத்துகிறது.


சக்திகாந்த தாஸ் 


ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் சமீபத்தில் நுகர்வோர் கடன் பிரிவில் சில வகை கடன்கள் அதிகரித்திருப்பது பற்றி பேசியிருந்தார். வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்கள் உள் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்தவும், அதிகரித்து வரும் அபாயங்களைக் கையாளவும் மற்றும் அவர்களின் சொந்த நலனுக்காக பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.


ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பெரிய வங்கிகள் மற்றும் பெரிய NBFC களின் MDs/CEO களுடன் கலந்தாலோனை மேற்கொண்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், நுகர்வோர் கடன்களின் உயர் வளர்ச்சி மற்றும், வங்கிக் கடன்களில் பெருமளவு NBFCகளால் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும்  குறிப்பிட்டார்.


மேலும் படிக்க | NPS விதிகளில் பெரிய மாற்றம்: இனி உங்கள் பணத்தை எடுக்க இந்த புதிய செயல்முறை அவசியம்!!


ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மறுஆய்வின் அடிப்படையில், தனிநபர் கடன்கள் உட்பட வணிக வங்கிகளின் நுகர்வோர் கடன்கள் (நிலுவையில் உள்ளவை மற்றும் புதியவை) தொடர்பான ரிஸ்க் எடையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ், அபாய எடை 25 சதவீதம் முதல் 125 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் வீட்டுக் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் மற்றும் தங்கம் மற்றும் தங்க நகைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கடன்கள் இல்லை.


NBFC (Non-bank financial institution)களின் கடன் வெளிப்பாடுகளின் விஷயத்தில், வீட்டுக் கடன்கள், கல்விக் கடன்கள், வாகனக் கடன்கள், தங்க நகைகளுக்கு எதிரான கடன்கள் மற்றும் நுண்நிதி/கடன்கள் தவிர்த்து, நுகர்வோர் கடன் வெளிப்பாடு (நிலுவையில் உள்ள மற்றும் புதியது) சில்லறை கடன்கள் என வகைப்படுத்தப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. SHG கடன்களுக்கு, ரிஸ்க் வெயிட்டேஜ் என்பது 100 சதவிகிதத்திலிருந்து 125 சதவிகிதமாக அதிகரிக்கும்.


அசையும் சொத்துக்கள், உதாரணமாக, வாகனங்கள் போன்ற இயல்பாகவே தேய்மானம் உள்ள பொருட்களுக்கு எதிராக வழங்கப்படும் அனைத்து டாப்-அப் கடன்களும், கடன் மதிப்பீடு, விவேகமான வரம்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் பாதுகாப்பற்ற கடன்களாக கருதப்படும்.


ரிசர்வ் வங்கி ஆளுநர் இந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி, நுகர்வோர் கடனின் சில பிரிவுகளில் மட்டும் அபரிதமான வளர்ச்சி இருப்பதை சுட்டிக்காட்டினார். எனவே  வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு (NBFCs) தங்கள் உள் கண்காணிப்பு வழிமுறைகளை வலுப்படுத்தவும் அவர் அறிவுறுத்தியிருந்தார். அதன் பிறகு  அவர்களின் சொந்த நலனுக்காக பொருத்தமான பாதுகாப்புகளை நிறுவும் வகையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கக் கூடாது? உச்ச நீதிமன்ற கேள்விக்கு அரசு பதில் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ