பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கக் கூடாது? உச்ச நீதிமன்ற கேள்விக்கு அரசு பதில் என்ன?

NPS And OPS: டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை பிப்ரவரி 2024 வரை நிறுத்தி வைத்த நீதிமன்றம், ஏன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கக் கூடாது என்று அது தொடர்பான தரவுகளை கேட்டுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 16, 2023, 04:50 PM IST
  • ஏன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கக் கூடாது?
  • டெல்லி அரசிடம் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்
  • பழைய ஓய்வூதியம் கிடைக்கும்: நம்பிக்கையில் அரசு ஊழியர்கள்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கக் கூடாது? உச்ச நீதிமன்ற கேள்விக்கு அரசு பதில் என்ன? title=

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஓபிஎஸ்-ஐ ஏன் மீட்டெடுக்கக் கூடாது என்று மத்திய அரசு 4 வாரங்களுக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியத் திட்டங்களைப் பற்றிய விளக்கத்தை மத்திய அரசிடம் இருந்து உயர் நீதிமன்றம் கேட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் இன்னும் உந்துதல் பெற்றுள்ளனர்.

இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் தங்கள் மாநில பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வூதியம் வழங்குகின்றன, இது ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் இது அரசாங்கத்தின் நிதிச்சுமையை அதிகரிக்கிறது, எனவே மத்திய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்கிறது.

எனவே, பணியாளர்களுக்கு நலன் தரும் பழைய ஓய்வூதியத்தையே தொடர வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ள உச்ச நீதிமன்றம், அடுத்த விசாரணையை 2024 பிப்ரவரியில் மேற்கொள்ளும்.

மேலும் படிக்க | கோடீஸ்வரனாகும் எளிய வழி... ‘இந்த’ 5 விதிகளை கடைபிடிக்கவும்...!

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பத்தை தாக்கல் செய்வதாக மத்திய அரசு கூறியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் நிம்மதியை தந்திருப்பதாகவும், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வரும் என்று நம்புவதாக அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் (All India State Government Employees Federation (AISGEF)) அறிவித்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த சமீபத்திய தீர்ப்பு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற மனுதாரரின் மனுவை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்றுக்கொண்டதுடன், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தின் முக்கியத்துவம் குறித்தும் நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர். அதன்பிறகு, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை ஒரு மாதத்திற்குள் மீட்டெடுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது, மேலும் டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை பிப்ரவரி 2024 வரை நிறுத்தி வைத்த நீதிமன்றம், ஊழியர்களுக்கு ஏன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கக் கூடாது என்று அரசாங்கத்திடம் அது தொடர்பான தரவுகளைக் கேட்டுள்ளது. இருப்பினும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை வழங்குவதன் மூலம் அரசு ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் (அரசு) இடையிலான பணி ஒப்பந்தத்தை மாநில அரசு மீறுகிறது என்பதை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. எனவே 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் பழைய ஓய்வூதிய திட்டம் அரசுப் பணியாளர்களுக்கு கிடைத்துவிடும் என்று மத்திய அரசு ஊழியர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.  

மேலும் படிக்க |  இபிஎஃப் வட்டித்தொகை... ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி!!

எம்.பி.க்களுக்கு நோட்டீஸ்
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 30 முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை பழைய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்கு எதிராக கூட்டுப் போராட்ட வழிகாட்டல் குழு ஏற்கனவே எம்.பி.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அகில இந்திய மாநில அரசு ஊழியர்கள் 3 நவம்பர் 2023 அன்று டெல்லியில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்காக மெகா பேரணியை நடத்தினர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கும், அனைத்து மாநில அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, அரசுப் பணியாளர்கள் தொடர் போராட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஏற்கனவே தங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டங்களை வழங்கி வரும் நிலையில், மத்திய அரசு ஏன் அதை அமல்படுத்தமுடியாது என்று போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.  

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுத்தல்
2004-ம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அதன் பிறகு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள விதிமுறைகளின்படி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. புதிய ஓய்வூதியத் திட்டம்- என்பது, என்.பி.எஸ் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டதால், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறும் ஊழியர்கள் இந்தத் திட்டத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

மேலும் படிக்க | பழைய ஓய்வூதியம் அதிரடி அப்டேட்: இந்த ஊழியர்களுக்கு மீண்டும் ஓபிஎஸ், விரைவில் உத்தரவு!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News