Low Investment Business Ideas: இன்றைய காலகட்டத்தில், வேலையில்லாத் திண்டாட்டம் மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பணத் தட்டுப்பாடும், இளைஞர்களிடயே பல பிரச்சனைகளும் மிகவும் அதிகரித்துள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் பெரும்பாலும் தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கத் திட்டமிடுகிறார்கள். ஆனால் சில நேரங்களில் பணப் பற்றாக்குறை காரணமாகவும், சில நேரங்களில் சரியான திட்டமிடுதல் இல்லாத காரணமாகவும் இந்த தொழில்கள் தோல்வியடைகின்றன. எனினும், அனைத்து வணிகங்களுக்கும் அதிக முதலீடு தேவை என்றில்லை. உங்கள் வீட்டிலிருந்தே, குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய சில சிறிய மற்றும் பகுதி நேர வணிகங்களும் உள்ளன. இவற்றுக்கு பெரிய மூலதனம் தேவையில்லை, அவற்றின் லாபமும் நன்றாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுதொழிலில் ஆரம்பித்து இன்று சொந்த நிறுவனங்களை நிறுவியிருக்கும் இதுபோன்ற வெற்றிகரமான உதாரணங்கள் சமூகத்தில் ஏராளம். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய சில குறைந்த முதலீட்டு வணிகங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


1. மினரல் வாட்டர் சப்ளையர்


10,000 ரூபாயில் இந்தத் தொழிலைத் தொடங்கலாம். இந்தத் தொழிலுக்கான தேவை எந்தப் பருவத்திலும் குறையாது. வீட்டிலிருந்தபடியே இதை செய்யலாம். இதற்கு இரண்டு பேர் தேவைப்படும். தண்ணீர் பாட்டில்களை வழங்குவதற்கு முன், நீங்கள் தொலைபேசியில் ஆர்டர்களை பெற வேண்டும். இந்த வணிகத்தில் ரொக்கமாக பணம் அளிக்கப்படுவதால், முதல் மாதத்திலேயே நீங்கள் லாபத்தைப் பெறத் தொடங்குவீர்கள்.


2. காலை உணவு 


இந்த தொழிலுக்கு தேவை அதிகம். காலையில் மக்கள் பெரும்பாலும் அலுவலகத்திற்கு செல்ல அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். குடும்பத்துடன் வாழாமல், கல்வி, தொழில், வேலை என தனியாக வாழ்பவர்கள் பலர் உள்ளனர். இவர்களுக்கு எப்போதும் தரமான காலை உணவிற்கான தேவை இருக்கிறது. இப்பணியை பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ தொடங்கலாம். இதற்கு ஆரம்பத்தில் ரூ.20 முதல் 25 ஆயிரம் வரை மட்டுமே செலவாகும். இருப்பினும், இதற்கும் உங்களுக்கு பொருத்தமான இடம் தேவைப்படும். ஆனால் இதிலும் நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே பலன்களைப் பெற ஆரம்பிக்கிறீர்கள்.


மேலும் படிக்க | Business Idea:ரூ.10,000 இருந்தால் போதும்... முதல் நாளில் இருந்தே வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும்!


3. மொபைல் பழுதுபார்த்தல்


தற்சமயம் இந்தியாவில் அனைவரிடமும் மொபைல் போன்கள் உள்ளன. மொபைல் ரிப்பேரிங் என்பது கிராமம் முதல் சிறிய நகரம் வரை ஒரு பெரிய வணிகமாக உள்ளது. மக்கள் அதிக அளவில் போன்களை பயன்படுத்துவதால், அவை அடிக்கடி பழுதடைவதும் உண்டு. ஆகையால் மொபைல் ரிபேரிங் தொழிலுக்கு அதிக தேவை உள்ளது. இந்தத் தொழிலைத் தொடங்க, நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் கோர்சை படிக்கலாம். இந்தப் படிப்பை முடிக்க 3 முதல் 6 மாதங்கள் ஆகும். இந்தத் தொழிலைத் தொடங்கினால் நல்ல வருமானம் பெறலாம்.


4. கார் சுத்தம் செய்யும் கடை


இன்றைய காலக்கட்டத்தில் சொந்தமாக கார் வைத்திருக்கும் மோகம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இப்போதெல்லாம் அனைவரது வீட்டிலும் பைக், கார் வைத்திருப்பது ட்ரெண்ட் ஆகிவிட்டது. ஆனால், இப்போதெல்லாம் யாருக்கும் தங்களுடைய காரை சொந்தமாக கழுவி சுத்தம் செய்ய போதுமான நேரம் இல்லை. இதற்காக அவர்கள் ஒரு கார் சுத்தம் செய்யும் கடைகளை அணுகுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தத் தொழிலைச் செய்தால் மிகக் குறைந்த மூலதனத்தில் செய்யலாம். உங்களிடம் கொஞ்சம் இடம் இருந்தால், நீங்கள் கார் சுத்தம் செய்யும் மையத்தைத் திறக்கலாம்.


5. யோகா பயிற்றுவிப்பாளர்


தற்போது யோகா பயிற்சியாளர்களுக்கான தேவை வேகமாக அதிகரித்துள்ளது. ஏனென்றால், யோகாவின் மூலம் பல வகையான நோய்கள் மற்றும் டென்ஷனில் இருந்து விடுபடலாம். மன அழுத்தத்தை குறைக்கும் நுட்பங்களில் யோகா மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் இதை செய்பவர்கள் உலகம் முழுதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். யோகா பயிற்சியாளர்களுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதிக தேவை உள்ளது. இதை ஒரு தொழிலாக செய்ய, முறையாக ஒரு குருவிடம் யோகா கற்றுக்கொண்டால் போதும். உங்கள் வீட்டின் ஒரு பகுதியிலோ, யோகா மையத்திலோ நீங்கள் இதை கற்றுக்கொடுக்கலாம். இது மட்டுமின்றி தூரத்தில் உள்ளவர்களுக்கும் ஆன்லைனில் கற்றுக்கொடுக்கலாம். 


மேலும் படிக்க | Business Idea: குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் கொடுக்கும் டாப் ‘10’ பிஸினஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ