தீபாவளி பண்டிகை வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க... குறைந்த முதலீட்டில் லாபத்தை அள்ளித் தரும் ‘சில’ பிஸினஸ்!

 தீபாவளி பண்டிகையின் போது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்க வைக்கும் சில பிஸினஸ் ஐடியாக்கள் பற்றி இங்கு விரிவாகப் அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 19, 2023, 04:12 PM IST
  • பெரும்பாலானோர் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு பரிசு பொருட்களை வாங்கிக் கொடுப்பார்கள்.
  • காற்று மற்றும் ஒலி மாசை ஏற்படுத்தாத பட்டாசுகளை விற்கலாம்.
  • தீபாவளி என்றாலே பட்சணங்கள் இல்லாமல் இருக்க முடியாது.
தீபாவளி பண்டிகை வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க... குறைந்த முதலீட்டில் லாபத்தை அள்ளித் தரும் ‘சில’ பிஸினஸ்! title=

தீபாவளி இந்தியா முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. தீபாவளி பண்டிகையின் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை உடுத்தி பட்டாசி வெடித்து, சுவையான தின்பண்டங்களை சுவைத்து மகிழும் ஒரு பொன்னாள். பண்டிகை காலத்தில் பல துறைகளில் வியாபாரமும் அமோகமாக இருக்கும்.  அதனால், வியாபாரிகளுக்கும் தீபாவளி முக்கியமான பண்டிகையாகும். சிறிய முதலீட்டில் புதியதொரு தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு,  தீபாவளி காலம் பொன்னான வாய்ப்பை வழங்கும். இந்தப் பண்டிகைக் காலத்தில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்க வைக்கும் சில பிஸினஸ் ஐடியாக்கள் பற்றி இங்கு விரிவாகப் அறிந்து கொள்ளலாம்.

1. பரிசு பொருட்கள் கடை: பொதுவாகவே பண்டிகை காலங்களில், பெரும்பாலானோர் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு பரிசு பொருட்களை வாங்கிக் கொடுப்பார்கள். அதிலும் தீபாவளியின் போது பரிசுகள் பரிமாறிக் கொள்வது மிக அதிக அளவில் இருக்கும். இந்நிலையில், வீட்டிலேயோ, அல்லது சிறிதான ஒரு கடையை வாடைக்கு எடுத்தோ, தீபாவளி பரிசுப் பொருட்களை விற்கலாம். அவர் ஆடைகளாக இருக்கலாம். அல்லது வேறு வீட்டு உபயோக பொருட்களாக இருக்கலாம். அல்லது கவரிங் நகைகளாக இருக்கலாம். உங்கள் பட்ஜெட் மற்றும் இருக்கும் இடத்தை பொறுத்தும், உங்களை சுற்றியுள்ளவர்களின் தேவையை வைத்தும் (Business Idea) நீங்கள் முடிவு செய்யலாம்.  

2. பட்சணக் கடை : தீபாவளி என்றாலே பட்சணங்கள் இல்லாமல் இருக்க முடியாது. இந்த நேரத்தில் பலகாரக் கடைகள் போட்டால் நல்ல சம்பாத்தியம் கிடைக்கும். இன்றைக்கு பெரும்பாலானோர் வேலைக்கு செல்பவர்களாக இருப்பதால், வீட்டில் பட்சணங்கள் தயாரிக்க நேரம் இருப்பதில்லை. அதனால் பட்சணங்களை தயாரித்து விற்பதால், கொள்ளை லாபம் அடையலாம்.

3. பாத்திரக் கடை : தீபாவளிக்கு பலகாரம் செய்வதற்கான அச்சுக்கள் மற்றும் இதர உபகரணங்கள் தேவையும் அதிகம் இருக்கும். அது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு பரி கொடுக்கும் நோக்கிலும் விதம் விதமான பாத்திரங்கள், எவர்சில்வர் டப்பாக்கள் போன்றவற்றை வாங்கவும் ஆர்வம் காட்டுவார்கள். இதுபோன்ற பொருட்களை மொத்த விலையில் வாங்கி விற்பதால், நல்ல லாபம் கிடைக்கும். சாலையோர கடையை அமைத்தும் விற்பனை செய்யலாம்.

மேலும் படிக்க | Business Idea: லட்சங்களில் வருமானம் தரும் ஆலோவேரா ஜெல் பிஸினஸ்... நீங்களும் தொடங்கலாம்!

4. பட்டாசுகள் : பட்டாசு இல்லாமல் தீபாவளியா... இன்றைய காலகட்டத்தில் சுற்றுசூழல் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், சுற்று சூழலை பாதிக்காத காற்று மற்றும் ஒலி மாசை ஏற்படுத்தாத  பட்டாசுகளை விற்கலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு இப்போது மக்களிடையே அதிகம் தோன்றியுள்ளதால் இந்தப் பட்டாசுகளுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தையும் பெற்றுத் தருகிறது.

5. தீபங்கள் விற்பனை : தீபங்கள் ஒளிர்வதே தீபாவளி. தீப ஒளித் திருநாள் என்றும் கூறப்படுகிறது. தீபாவளி நாளில், கார்த்திகை பண்டிகையை போலவே எல்லா இடங்களிலும் தீபங்களை ஏற்றி பலர் வழிபடுவார்கள். மண் தீபம், பித்தளை தீபம், LED தீபம், தண்ணீர்ல் மிதக்கும் LED தீபம், டெரகோட்டா வேலைப்பாடுகள் செய்யப்பட்ட தீபம் உள்பட ஏகப்பட்ட வகை தீபங்கள் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம்.

மேலும் படிக்க | Business Tips: வெறும் ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. மாதம் 40,000-50,000 வரை சம்பாதிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News