கோலாலம்பூர்: மலேசியாவிற்கு செல்ல இனி இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. இது தொடர்பான அறிவிப்பை மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்தார். நேற்று (2023, நவம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை) மக்கள் நீதிக் கட்சி மாநாட்டில் பேசியபோது,மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பின்படி, இந்தியா மற்றும் சீனாவில் இருந்து மலேசியாவுக்கு செல்பவர்கள் விசா அனுமதி பெறத் தேவையில்லை. சீனாவும் இந்தியாவும் மலேசியாவின் நான்காவது மற்றும் ஐந்தாவது பெரிய மூலச் சந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், இந்த அறிவிப்பு ஏற்கனவே குற்ற வழக்குகளைக் கொண்டவர்களுக்கு பொருந்தாது. அவர்கள் விசா வாங்கிய பிறகே மலேசியாவுக்கு செல்ல முடியும். இந்தியா மற்றும் சீனாவுக்கான விசா விலக்கு குறித்த விரிவான விவரங்கள் மற்றும் விதிமுறைகளை மலேசிய உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் விரைவில் அறிவிப்பார் என்று மலேசியப் பிரதமர் அன்வார் அறிவித்துள்ளார்.


சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், மலேசியாவில் 30 நாட்கள் வரை தங்குவதற்கு விசா அனுமதி தேவையில்லை. ஆனால், அதற்கு அதிகமான நாட்கள் அதாவது 31 நாட்கள் தங்குவதாக இருந்தாலும் விசா பெற வேண்டும். அரசாங்கத் தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் மலேசியாவில் 9.16 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.


மேலும் படிக்க - India Vs Canada: இந்தியா கனடா விசா மோதல்களும் முடிவும்


அதில், சீனாவிலிருந்து 498,540 மற்றும் இந்தியாவில் இருந்து 283,885 பேர் மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டனர். இது 2020ம் ஆண்டில் கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய 2019 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் சீனாவிலிருந்து 1.5 மில்லியன் மற்றும் இந்தியாவில் இருந்து 354,486 வருகைக்கு நெருக்கமான எண்ணிக்கை ஆகும்.


மலேசிய அரசின் விசா தொடர்பான இந்த அறிவிப்பானது, அண்டை நாடான தாய்லாந்தின் இதேபோன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றுவதாக நிபுணர்கள் கருதுகின்றனர். தாய்லாந்து நாடு, தனது சுற்றுலாத் துறையை உயர்த்துவதற்கும் அதன் மந்தமான பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதற்கும் விசா தேவையில்லை என்று அறிவித்தது.


ஏற்கனவே இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகள் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அண்மையில் அறிவித்திந்த நிலையில், தற்போது மலேசியாவுக்கு நீங்கள் செல்லும் போது, 30 நாட்களுக்குள் குறைவாக அங்கே தங்குவதாக இருந்தால் அதற்காகத் தனியாக விசா பெறத் தேவையில்லை என்ற செய்தி இந்தியர்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். 


மேலும் படிக்க | கனடா நாட்டவர்களுக்கு மீண்டும் இ-விசா! இந்தியா எடுத்த முக்கிய முடிவு


தற்போதைய நிலவரப்படி, மலேசியாவுக்குள் நுழைவதற்கு சீன மற்றும் இந்திய குடிமக்கள் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிலையில், வரும் டிசம்பர் முதல் தேதியில் இருந்து சீனாவை சேர்ந்தவர்களும் இந்திய குடிமக்களும் 30 நாட்கள் வரை மலேசியாவில் தங்குவதற்கு விசா வாங்கத் தேவையில்லை.


மலேசியாவுக்கு செல்ல விசா தேவையில்லை என்ற நாடுகளின் பட்டியலில், ​​சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், துருக்கி மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் உள்ளன. தற்போது, இந்தியா மற்றும் சீனாவும் இந்த பட்டியலில் டிசம்பர் முதல் தேதியில் இருந்து சேர்கின்றன.  


மேலும் படிக்க | இன்று முதல் இந்த 5 நாடுகளுக்கு செல்ல விசா தேவையில்லை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ