Mutual Fund: முதலீட்டை துவங்குவது எப்படி, எந்த ஆவணங்கள் தேவை, முழு விவரம் இதோ
Mutual Fund: மியூசுவல் ஃபண்டுகளில் சந்தை ஆபத்து எதுவும் இல்லை. மேலும் வங்கிகளின் எஃப்டி, ஆர்டி போன்ற பாரம்பரிய திட்டங்களை விட வருமானம் அதிகமாக இருக்கும்.
மியூசுவல் ஃபண்டுகள்: முதலீட்டின் மூலம் நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய தொடக்கமும், நீண்ட காலக் கண்ணோட்டம், சந்தையின் நிச்சயமற்ற தன்மையில் நாம் கடைபிடிக்கும் பொறுமை ஆகியாவற்றால், எதிர்காலத்தில் பெரிய நிதியைத் திரட்ட உதவியாக இருக்கும். மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் நாம் மொத்தத் தொகை முதலீட்டைத் தவிர சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) மூலம் சிறு சேமிப்புகளாகவும் அவ்வப்போது முதலீடு செய்யலாம்.
இதில் நேரடி சந்தை ஆபத்து எதுவும் இல்லை. மேலும் வங்கிகளின் எஃப்டி, ஆர்டி போன்ற பாரம்பரிய திட்டங்களை விட வருமானம் அதிகமாக இருக்கும். நீங்கள் ரூ.100 என்ற குறைந்த எஸ்ஐபி உடனும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தொடங்கலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய, நீங்கள் தேவையான KYC செய்ய வேண்டும், இதற்கு சில முக்கிய ஆவணங்கள் தேவை. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மியூச்சுவல் ஃபண்ட்: கேஒய்சி-க்கு எந்த ஆவணங்கள் தேவை
தனிப்பட்ட முதலீட்டாளர் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு KYC (KYC- KYC- Know your customer) இணக்கத்தை முடிக்க வேண்டும். ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்டின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, கேஒய்சிக்கு சில ஆவணங்கள் தேவை. முகவரிச் சான்று மற்றும் அடையாளச் சான்று (ஐடி) ஆவணங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
மேலும் படிக்க | Investment Tips: இந்த தவறுகளை தவிர்த்தால் கை நிறைய லாபம் காணலாம்
அடையாளச் சான்றுக்கு, ஆதார் எண், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைக் கொடுக்கலாம். புகைப்படத்துடன் பான் கார்டு கொடுக்க வேண்டும். பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும் என பிபிஎன் ஃபின்கேப் இயக்குநர் அமித் குமார் நிகம் தெரிவித்துள்ளார். இப்போது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது டிஜிட்டல் மயமாகி வருகிறது. ஆகையால் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி இருக்க வேண்டியது அவசியமாகும்.
முகவரி ஆதாரத்திற்கான ஆவணங்கள்
KYC-க்கு நீங்கள் முகவரிச் சான்று ஆவணங்களையும் வழங்க வேண்டும். பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பதிவு செய்யப்பட்ட லீஸ் அல்லது விற்பனை ஒப்பந்தம், ஓட்டுநர் உரிமம், பிளாட் பராமரிப்பு பில், இன்சூரன்ஸ் நகல் மற்றும் லேண்ட்லைன் டெலிபோன் பில், மின்சாரக் கட்டணம் அல்லது கேஸ் பில் (3 மாதங்களுக்கு மேல் பழையதாக இருக்கக்கூடாது) ஆகியவை இதில் அடங்கும்.
இது தவிர, முகவரிச் சான்றாக வேறு பல ஆவணங்களையும் வழங்கலாம். எடுத்துக்காட்டாக, கெஜட்டட் அதிகாரி, நோட்டரி பப்ளிக், வணிக வங்கிகளின் வங்கி மேலாளர், சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தின் பிரதிநிதி, அரசாங்கங்கள் அல்லது சட்டப்பூர்வ அதிகாரிகள் மூலமும் KYC-க்கான முகவரிச் சான்றை நீங்கள் வழங்கலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?
எளிமையான வார்த்தைகளில் புரிந்து கொள்ள வேண்டுமானால், மியூச்சுவல் ஃபண்ட் என்பது பலரின் பணத்தால் உருவாக்கப்பட்ட நிதியாகும். இதில் முதலீடு செய்யப்படும் தொகை பல்வேறு இடங்களில் முதலீடு செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதில், முதலீட்டாளருக்கு அவரது பணத்தில் அதிகபட்ச வருமானம் கிடைக்கப்பட வேண்டும் என்பது ஃபண்ட் ஹவுஸின் முயற்சியாக இருக்கும். இதற்கு தொழில்முறை நிதி மேலாளர்கள் உள்ளனர். இந்த நிதி மேலாளர்கள் உங்கள் பணத்தை நிர்வகிக்கிறார்கள். உங்கள் பணத்தை எங்கு முதலீடு செய்தால் உங்களுக்கு சிறந்த வருமானம் கிடைக்கும் என்பதை அவர்கள் ஆய்வு செய்து உங்களுக்கு தெரிவித்து வழி நடத்துவார்கள்.
மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் எந்த அசட் கிளாசிலும் முதலீடு செய்யலாம். தங்கம் வாங்கும் திட்டம் இருந்தால், கோல்ட் ஃபண்ட் ஆப்ஷன் உள்ளது. இதேபோல், நிலையான வைப்புகளுக்கான கடன் நிதிகள் (டெப்ட் ஃபண்ட்), ரியல் எஸ்டேட்டுக்கான இன்ஃப்ரா நிதிகள் போன்ற ஆப்ஷன்களும் உள்ளன. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில், நீங்கள் ஒரு நிபுணரின் ஆலோசனையைப் பெறுவீர்கள். உங்கள் பணம் நிதி மேலாளரால் நிர்வகிக்கப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரை அணுகவும்.)
மேலும் படிக்க | Mutual Funds: பாதுகாப்பான முறையில் பணத்தை அள்ளலாம்: எளிய முதலீட்டு டிப்ஸ் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR