ரயில் பெட்டிகளில் இருக்கும் இந்த நம்பருக்கு என்ன அர்த்தம்: இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும், இதில் தினமும் சுமார் 40 மில்லியனுக்கு அதிகமான மக்கள் பயணிக்கின்றனர். அதன்படி நீங்களும் இந்திய ரயில்களில் பயணம் செய்திருக்கீர்கள் என்றால், ரயில் பெட்டியில் ஒரு அடையாளம் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆம், இவை சில ரயில்களில் 5 இலக்கங்களாக இருக்கும். சிலவற்றில் 6 இலக்கங்களும் இருக்கும். இந்த எண்களுக்குப் பின்னால் சிறப்புத் தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. அதன் விவரத்தை இங்கே காணபோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த எண்களில் உள்ள முதல் இரண்டு இலக்கங்கள் அந்த குறிப்பிட்ட பெட்டி தயாரிக்கப்பட்ட ஆண்டைக் குறிக்கும். அடுத்த இலக்கங்கள் அத்தனையும் அந்த பெட்டி அந்த குறிப்பிட்ட வருடத்தில் செய்யப்பட்ட எத்தனையாவது பெட்டி என்பதைக் குறிப்பதாகும். உதாரணமாக, இந்த ரயில் பெட்டியின் எண்ணான 98397 என்பதில் 98 என்பது, இந்த பெட்டி 1998-ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என்பதை குறிக்கும். அதேபோல் கடைசி எண் 397 மூலம், அந்த பெட்டி ஸ்லீப்பர் வகுப்பு என்பது தெரியவரும். மறுபுறம் 05497 இன் 497 இலக்கங்கள் ஜனரல் பெட்டியை குறிக்கும். இவற்றில், ஏசி முதல் வகுப்பு 001-025 வரையிலான வரிசை எண்களைக் கொண்டுள்ளது. மறுபுறம், ரயில் பெட்டியில் 05497 எண் என்று எழுதப்பட்டால், அது 2005 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என்பது அர்த்தமாகும்.


மேலும் படிக்க | Old Pension Scheme முக்கிய செய்தி: வெளியானது படிவம்: இதுதான் கடைசி தேதி


001-025 : AC First class
026-050 : Composite 1AC + AC-2T
051-100 : AC-2T
101-150 : AC-3T
151-200 : CC (AC Chair Car)
201-400 : SL (2nd Class Sleeper)
401-600 : GS (General 2nd Class)
601-700 : 2S (2nd Class Sitting/Jan Shatabdi Chair Class)
701-800 : Sitting Cum luggage Rake
801 + : Pantry Car, Generator or Mail


எனவே அடுத்தமுறை ரயிலில் பயணம் செய்யும் போதாவது நீங்கள் பயணிக்கும் பெட்டியின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இனி ரயிலில் இந்த சேவைகள் இருக்காது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ