Train Fire: மத்தியப் பிரதேசத்தில் ஓடிக் கொண்டிருந்த ரயில் தீப்பற்றி எறிந்தது

Ratlam-Ambedkar Nagar train catch fire: மத்திய பிரதேச மாநிலத்தில் DEMU ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது, சேத விவரங்கள் இன்னும் தெரியவில்லை. ஆனால் உயிர் பலி ஏதும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 23, 2023, 01:54 PM IST
  • ரத்லம் நகர் தீ விபத்து!
  • யாருக்கும் எந்த சேதமும் இல்லை
  • இரு ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன
Train Fire: மத்தியப் பிரதேசத்தில் ஓடிக் கொண்டிருந்த ரயில் தீப்பற்றி எறிந்தது title=

மத்தியப் பிரதேசத்தின் ரத்லாமில் ரத்லம்-அம்பேத்கர் நகர் ரயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன; உயிர் சேதம் இல்லை
இச்சம்பவம் ப்ரீதம் நகர் ரயில் நிலையத்தில் காலை 7 மணியளவில் நடந்துள்ளது உயிர் சேதம் ஏதும் இல்லை என்ற போதிலும், மேலதிக விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (2023, ஏப்ரல் 23) காலை ரத்லாம்-டாக்டர் அம்பேத்கர் நகர் DEMU ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரத்லாமில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள ப்ரீதம் நகர் ரயில் நிலையத்தில் காலை 7 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று மேற்கு ரயில்வேயின் ரட்லான் பிரிவு மக்கள் தொடர்பு அதிகாரி கேம்ராஜ் மீனா தெரிவித்தார்.

மேலும் படிக்க | ரயில்வே அளித்த முக்கிய அப்டேட், மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்
 
ரத்லாம் ஸ்டேஷனில் இருந்து புறப்பட்ட பிறகு, டிஇஎம்யூ (டீசல்-எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்) ரயிலின் டிரைவிங் மோட்டார் கோச் (ரயிலின் நடுவில் வைக்கப்பட்டது) பிரிதம் நகர் ரயில் நிலையத்தில் தீப்பிடித்தது. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீ கிட்டத்தட்ட கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

ரயில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்ட ரயில்வே மேலாளர் (டிஆர்எம்) சம்பவ இடத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார், என்றார். இச்சம்பவத்தால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என அதிகாரி தெரிவித்தார்.

மேலும் படிக்க | IRCTC அளித்த முக்கிய அறிவிப்பு: இதை மட்டும் செஞ்சிடாதீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News