புதுடெல்லி: தற்போதுள்ள பேட்டரி பாதுகாப்புத் தரங்களில் சில மாறுதல்களைக் கொண்டுவருவதாக இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) அறிவித்துள்ளது. இந்த மாறுதல்களின் அடிப்படையில், சில கூடுதல் பாதுகாப்பு தேவைகள் செயல்படுத்தப்படும். இந்த விதி மாறுதல்களுக்கு பின்னணியில் இருப்பது தொடர்ந்து மின்சார வாகனங்களின் பேட்டரிகள் வெடித்து ஏற்படும் விபத்துகள் ஆகும். இது, தொழில்துறை மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில மாதங்களில் மின் வாகனங்களின் பேட்டரி வெடித்ததால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு, இந்த விஷயங்களை விசாரிக்க இந்திய அரசு ஒரு சிறப்பு குழுவை அமைத்துள்ளது.


இந்த சிறப்புக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், மின்சார இரு சக்கர வாகனங்கள், பேட்டரி ரிக்‌ஷாக்கள், சைக்கிள்கள் மற்றும் 4-சக்கர வாகனங்களுக்கான AIS 156 பாதுகாப்புத் தரத்திற்கு MoRTH புதுப்பித்தலை வெளியிட்டுள்ளது. இந்த கூடுதல் பாதுகாப்பு தரநிலைகள் அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும்.



MORTH கூடுதல் பரிந்துரைகள்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் மின்சார வாகனங்களில் ஏற்படும் தீ விபத்துகளைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் பேட்டரி பாதுகாப்புத் தரங்களில் பாதுகாப்புத் தேவைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. 


மேலும் படிக்க | இந்திரா நூயி: அயலகம் சென்று அரியணை சூடி புகழின் உச்சம் தொட்ட தமிழ் பெண் 


சிறப்புக் நிபுணர் குழுவில் நரசிம்ம ராவ் (இயக்குனர், ARC, ஹைதராபாத்) மற்றும் எம்.கே.ஜெயின் (விஞ்ஞானி – G, CFEES, DRDO), டாக்டர். ஆர்த்தி பட் (விஞ்ஞானி-F, கூடுதல் இயக்குநர், CFEES, DRDO), டாக்டர். சுப்பா ரெட்டி (முதல்வர்), ஆராய்ச்சி விஞ்ஞானி, IISc, பெங்களூர்), பேராசிரியர். எல் உமானந்தா (தலைவர், டிஇஎஸ்இ, ஐஐஎஸ்சி, பெங்களூரு), டாக்டர். எம். ஸ்ரீனிவாஸ் (விஞ்ஞானி-இ, என்எஸ்டிஎல், விசாகப்பட்டினம்), பேராசிரியர். தேவேந்திர ஜலிஹால் (தலைவர், C-BEEV, 11T மெட்ராஸ், சென்னை) என பலர் இடம் பெற்றுள்ளனர். 


பேட்டரி செல், பிஎம்எஸ், ஆன்-போர்டு சார்ஜர், பேட்டரி பேக்கின் வடிவமைப்பு, உள் செல் ஷார்ட் சர்க்யூட் காரணமாக ஏற்படும் வெப்ப விளைவுகளிலிருந்து தீயிலிருந்து பாதுகாப்பு மற்றும் பிற கூடுதல் பாதுகாப்பு என புதிய விதிகளில் பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி அளவில் என்ன மாற்றங்கள் தேவை என்பது பற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.


மேலும் படிக்க | இந்திய மாணவர்களுக்கு விரைவில் விசா வழங்க நடவடிக்கை: கனடா அமைச்சர் 


பாதுகாப்புத் தரங்கள் மாற்றப்படுவதோடு, மத்திய மோட்டார் வாகன விதிகளின் (CMVR) விதி 124ன் துணை விதி 4ஐத் திருத்துவதற்காக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) 25 ஆகஸ்ட் 2022 தேதியிட்ட GSR 659(E) வரைவு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.)  இது மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் இழுவை பேட்டரிகளை தயாரிப்பது தொடர்பானது.


புதிய விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக, இந்த விஷயம் தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை அரசாங்கம் கேட்டுள்ளது.


மேலும் படிக்க | லக்ஷ்மண் நரசிம்மன்: ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ