National Pension System: பணத்திற்கான தேவை அனைவருக்கும் உள்ளது. பணிஓய்வு, முதுமை என எதிர்கால தேவைகளுக்காக நாம் அனைவரும் பணத்தை சேமித்து வைக்கிறோம். நல்ல வருமானம் வரும் இடங்களில் முதலீடு செய்கிறோம். குறிப்பாக ஆண்கள் மனைவி, குழந்தைகள், குடும்பம் என சிந்தித்து அவர்களுக்காக பிரத்யேக திட்டங்களில் முதலீடு செய்வார்கள். அப்படிப்பட்ட நபரா நீங்களும்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

NPS Account


எதிர்காலத்தில் உங்கள் மனைவி பணத்திற்காக யாரையும் சார்ந்திருக்காமல், தொடர்ச்சியான வருமானத்தை பெற வேண்டும் என நீங்கள் நினைத்தால், அதை சுலபமாக செய்யலாம். மனைவியின் பெயரில் தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS -இல் கணக்கு தொடங்கலாம். இந்த என்பிஎஸ் கணக்கு (NPS Account) மூலம் 60 வயதில் உங்கள் மனைவிக்கு மொத்த தொகை கிடைக்கும். இது தவிர, ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய (Pension) பலனும் கிடைக்கும். இது மனைவியின் வழக்கமான மாத வருமானமாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்பது NPS கணக்கின் மிகப்பெரிய நன்மையாகும். இதன் மூலம் 60 வயதிலும் உங்கள் மனைவிக்கு பணத் தட்டுப்பாடு இருக்காது.


மனைவி பெயரில் என்பிஎஸ் கணக்கு


உங்கள் மனைவி பெயரில் தேசிய ஓய்வூதிய அமைப்பில் ஒரு கணக்கை நீங்கள் தொடங்கலாம். வசதிக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் அல்லது ஆண்டுதோறும் இந்த கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம். இந்த கணக்கை வெறும் 1,000 ரூபாயிலும் தொடங்கலாம். NPS கணக்கு 60 வயதில் முதிர்ச்சியடைகிறது. புதிய விதிகளின்படி, நீங்கள் விரும்பினால், மனைவிக்கு 65 வயது ஆகும் வரை என்பிஎஸ் கணக்கை தொடர்ந்து இயக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


ரூ.1 கோடி நிதியை உருவாக்க எவ்வளவு மாத முதலீடு தேவைப்படும்?


ரூ.5000 மாத முதலீட்டில் ரூ.1.14 கோடி நிதியை இதில் உருவாக்கலாம். ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒருவரது மனைவிக்கு 30 வயதாகிறது என வைத்துக்கொள்வோம். அவருடைய NPS கணக்கில் ஒவ்வொரு மாதமும் அந்த நபர் 5000 ரூபாய் முதலீடு செய்கிறார். முதலீட்டில் 10 சதவீதம் ஆண்டு வருமானம் கிடைத்தால், 60 வயதில் அவரது மனைவியின் கணக்கில் மொத்தம் ரூ.1.12 கோடி சேர்ந்திருக்கும். இதன் மூலம் அவருக்கு தோராயமாக ரூ.45 லட்சம் கிடைக்கும். இது தவிர, அவரது மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் 45,000 ரூபாய் ஓய்வூதியமும் கிடைக்கும். இந்த ஓய்வூதியம் அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். 


மேலும் படிக்க | NPS, UPS, OPS: ஓய்வூதிய உத்தரவாதம், அசத்தல் வருமானம்.... யாருக்கு எது சிறந்தது? முழு விவரம் இதோ


ஓய்வூதியம், மொத்த தொகை எவ்வளவு கிடைக்கும்?


- வயது - 30 
- மொத்த முதலீட்டு காலம் - 30 ஆண்டுகள்
- மாதாந்திர பங்களிப்பு - ரூ 5,000
- முதலீட்டில் மதிப்பிடப்பட்ட வருமானம் - 10 சதவீதம்
- மொத்த ஓய்வூதிய நிதி - ரூ 1,11,98,471 


- ஆனுவிட்டி (Annuity) வாங்குவதற்கான தொகை ரூ. 44,79,388. ரூ.67,19,083 
- மதிப்பிடப்பட்ட வருடாந்திர விகிதம் - 8 சதவீதம் 
- மாதாந்திர ஓய்வூதியம் - ரூ.44,793.


நிதி மேலாளர்களின் பங்கு


NPS என்பது மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் தொழில்முறை நிதி மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த தொழில்முறை நிதி மேலாளர்களுக்கு (Fund Managers) மத்திய அரசு இந்தப் பொறுப்பை வழங்குகிறது. ஆகையால், NPS இல் முதலீட்டாளர்களின் முதலீடு முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். இருப்பினும், இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கான வருமானத்திற்கு உத்தரவாதம் இல்லை. NPS அதன் தொடக்கத்திலிருந்து சராசரியாக 10 முதல் 11 சதவிகிதம் ஆண்டு வருமானத்தை அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.


கூடுதல் வரி விலக்கின் பலன் 


தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) 2 லட்சம் வரை வரி விலக்கு (Tax Exemption) மற்றும் 60% தொகையை திரும்பப் பெறும்போது வரி விலக்கு என வரி விலக்கு பலன்களும் கிடைக்கின்றன. இதில் ரூ. 1.5 லட்சம் வரம்பை அடைந்த பிறகு ரூ.50 ஆயிரம் கூடுதல் முதலீட்டில் வரி விலக்கு கிடைக்கும். இந்த கூடுதல் விலக்கின் காரணமாக என்பிஎஸ் உறுப்பினர்கள் (NPS Members) ஒவ்வொரு ஆண்டும் ரூ.2 லட்சம் வரை வரியைச் சேமிக்கலாம்.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: டிஏ ஹை, மற்றொன்று? புத்தம் புது அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ