NPS -இல் சமீபத்தில் அறிமுகம் ஆன புதிய T+0 வசதி பற்றி உங்களுக்கு தெரியுமா?

National Pension System: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான PFRDA, என்பிஎஸ் உறுப்பினர்களுக்காக (NPS Members) T+0 தீர்வு முறையை சமீபத்தில் செயல்படுத்தியது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 29, 2024, 03:32 PM IST
  • தேசிய ஓய்வூதிய அமைப்பின் உறுப்பினரா நீங்கள்?
  • NPS இல் முதலீடு செய்வது முன்பை விட எளிதாகவும் வேகமாகவும் இருக்கும்.
  • வாடிக்கையாளர்களுக்கு முன்பை விட அதிக நன்மைகள் கிடைக்கும்.
NPS -இல் சமீபத்தில் அறிமுகம் ஆன புதிய T+0 வசதி பற்றி உங்களுக்கு தெரியுமா? title=

National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்பின் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான PFRDA, என்பிஎஸ் உறுப்பினர்களுக்காக (NPS Members) T+0 தீர்வு முறையை சமீபத்தில் செயல்படுத்தியுள்ளது. அதாவது, செட்டில்மென்ட் நாளில் காலை 11 மணிக்குள் (T) அறங்காவலர் வங்கிக்கு கிடைக்கும் என்பிஎஸ் பங்களிப்பு (NPS Contribution) அதே நாளில் முதலீடு செய்யப்படும். இதன் மூலம், NPS முதலீட்டாளர்கள் அதே நாளில் நெட் அசெட் வேல்யுவின் (NAV) பலனைப் பெறுவார்கள்.

இதற்கு முன்னர் T+1 அடிப்படையில் முதலீடு செய்யப்பட்டது

இதற்கு முன்ன அறங்காவலர் வங்கியால் (Trustee Bank) பெறப்பட்ட முதலீடுகள் அடுத்த முதலீட்டு நாளில் (T+1) செட்டில் செய்யப்பட்டு வந்தன. அதாவது ஒரு நாள் முன்பு வரை பெற்ற பங்களிப்புகள் மறுநாள் முதலீடு செய்யப்பட்டன. ஏற்கனவே, செட்டில்மெண்ட் நாளில் காலை 9:30 மணி வரை பெறப்பட்ட பங்களிப்புகள் அதே நாளில் முதலீட்டிற்காக பரிசீலிக்கப்பட்டதாக PFRDA தெரிவித்தது. இப்போது, ​​காலை 11 மணி வரை பெறப்பட்ட பங்களிப்புகளும் அதே நாளில் பொருந்தக்கூடிய NAV உடன் முதலீடு செய்யப்படுகின்றன. 

மேலும் படிக்க | EPS Pension: EPF சந்தாதாரர்களுக்கு கிடைக்கும் 7 வகையான ஓய்வூதியங்கள்... முழு விவரம் இதோ

வாடிக்கையாளர்களுக்கு முன்பை விட அதிக நன்மைகள் கிடைக்கும்

'பாயின்ட் ஆஃப் பிரசன்ஸ்' (POP), நோடல் அலுவலகங்கள் மற்றும் e-NPSக்கான NPS அறக்கட்டளைகள் ஆகியவை தங்கள் NPS செயல்பாடுகளை திருத்தப்பட்ட காலவரிசையுடன் சீரமைக்க வேண்டும் என PFRDA அறிவுறுத்தியது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் சரியான முறையில் பயன்பெற முடியும். முன்பு டெபாசிட் செய்த பணத்தை முதலீடு செய்யும் நேரத்தில் ஒரு நாள் வித்தியாசம் இருக்கும். ஏனெனில் அவை அடுத்த வர்த்தக நாளில் (T+1) முதலீடு செய்யப்பட்டன. ஆனால் இனி அந்த வித்தியாசம் வெகுவாக குறைக்கப்படும்.

NPS இல் முதலீடு செய்வது முன்பை விட எளிதாகவும் வேகமாகவும் இருக்கும்

புதிய விதிகளின்படி, இந்த முறை முன்பை விட முதலீட்டாளர்களுக்கு சிறந்ததாக இருக்கும். இப்போது காலை 11 மணி வரை டெபாசிட் செய்யப்பட்ட பணமும் அதே நாளில் முதலீடு செய்யப்படும். அதுவும் அன்று பொருந்தும் நெட் அசெட் வேல்யுவி (Net Asset Value) படி இது முதலீடு செய்யப்படும். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) என்பிஎஸ் உறுப்பினர்கள் (NPS Members) விரைவில் பலன்களைப் பெற NPS இல் சில மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த மாற்றங்களுக்குப் பிறகு, NPS இல் முதலீடு செய்யும் செயல்முறை எளிதாகவும் வேகமாகவும் இருக்கிறது.  

2023-24 ஆம் ஆண்டில் அரசு சாரா துறைகளில் இருந்து 9.47 லட்சம் புதிய சந்தாதாரர்கள் NPS இல் சேர்ந்துள்ளனர். இதன் காரணமாக NPS இன் முதலீட்டு அளவு 30.5% அதிகரித்துள்ளது. இது ஆண்டு அடிப்படையில் ரூ.11.73 லட்சம் கோடியானது. 31 மே 2024 வரை NPS சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 18 கோடியாக இருந்தது. 

மேலும் படிக்க | PPF, SSY... சிறுசேமிப்பு திட்ட விதிகளில் மாற்றங்களை அறிவித்த நிதி அமைச்சகம்: விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News