சென்னை: நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அத்தியாவசியமான ஆக்சிஜன் தேவைகள் அதிகரித்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் 27-ம் தேதி இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலுக்கு ஏற்ப தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அனுமதி அளித்து இயக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.


Also Read | MS Dhoniயிடம் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள்; கார் முதல் குதிரை வரை… 


அதோடு, ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.


இந்தக் கண்காணிப்பு குழுவின் முதல் கூட்டம் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர், ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.          


இதன் தொடர்ச்சியாக இம்மாதம் ஆறாம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருக்கும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பணிகள் தொடங்கின. ஸ்டெர்லைட் ஆலையின் பிரதான நுழைவுவாயில் சீல் வைக்கப்பட்டுள்ளதால், ஆலையில் அமைந்துள்ள மற்றொரு நுழைவாயில் வழியாக பணியாளர்கள் ஆலை வளாகத்திற்குள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Also Read | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் PMK தலைவர் டாக்டர் ராமதாஸிடம் தொலைபேசியில் வாழ்த்து 


கடந்த 2 நாட்களாக மோட்டார்கள், இயந்திரங்களை இயக்கி பரிசோதித்து பராமரிக்கும் பணி தொடங்கிவிட்டது. ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மூன்றாண்டுகளாக மூடப்பட்டிருப்பதால், அனைத்துப் பகுதிகளிலும் தொழில்நுட்பப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்கு தயாராகிவிடும்.


ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு குடிநீர் வழங்குவதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். 


பூர்வாங்க பணிகள் முடிவடைந்த பிறகு, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்பு குழு மீண்டும் ஆய்வு நடத்தி, ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்கும். அதன் பிறகு ஆக்சிஜன் உற்பத்தி முழு அளவில் தொடங்கும். ஏற்கெனவே திட்டமிட்டபடி ஏழு நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Also Read | இந்தியாவில் முழு லாக்டவுனை கொண்டு வர மத்திய அரசுக்கு அழுத்தம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR