MS Dhoniயிடம் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள்; கார் முதல் குதிரை வரை…

அரண்மனை போன்ற பங்களாவிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார் வரை பல விலை மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரர் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி. 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் தல தோனி முன்னாள் இந்திய அணியின் கேப்டன். இவரிடம் 50க்கும் மேற்பட்ட பைக்குகள் முதல் பல விலையுயர்ந்த கார்கள் என சிறந்த ஆடம்பர பொருட்களை தனது விருப்பம் போல் சேகரித்து வைத்துள்ளார் தோனி.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, களத்தில் வீரர் என்றால், தலைமைத்துவ பண்பில் சூரர். வீரர்-சூரர் என்ற அடைமொழிகளை விட தனது விருப்பம் போல் வாழ்வதில் ஆர்வம் கொண்ட ரசிகர் தோனி என்றே சொல்லலாம். தனது சொந்த ஊரான ராஞ்சியில் பண்ணை வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். தோனியிடன் உள்ள பல மதிப்புக்குரிய பொருட்கள் இவை…   

பைக்குகள் அரிதான கார்கள், செல்லப் பிராணிகள் என தோனியின் விருப்பமும் ஆர்வமும் கலவையானவை.  'கேப்டன் கூல்'க்குச் சொந்தமான சில பொருட்கள்...

Also Read | டன் கணக்கில் ஆக்சிஜனை மாநிலங்களுக்கு கொண்டுசெல்லும் ரயில்வே

1 /5

எம்.எஸ். தோனியின் சொந்த ஊர் ராஞ்சி. அங்கு 7 ஏக்கர் பண்ணை இல்லம் வைத்திருக்கிறார் தோனி. ராஞ்சியின் புறநகரில் அமைந்துள்ள இந்த பண்ணை வீடு நாட்டின் மிக ஆடம்பரமான குடியிருப்பு இடங்களில் ஒன்றாகும். பண்ணை வீட்டில் வாகனங்கள் நிறுத்தும் மிகப் பெரிய கேரேஜ் மற்றும் நாய்கள் மற்றும் பல்வேறு செல்லப்பிராணிகளும் வசிப்பதற்குக் மிகப்பெரிய இடம் என தோனியின் வீடு, நவீன அரண்மனையைப் போல இருக்கிறது.

2 /5

பைக்குகளுக்காகவே பிரத்யேக கேரேஜ் ஒன்றை வைத்திருக்கிறார் தோனி. தன்னிடம் 80 பைக்குகள் வைத்திருப்பதாக அண்மையில் ஒரு வீடியோவில், தோனி தெரிவித்தார். அவரிடம் சேகரிப்பில் ஹார்லி டேவிட்சன் (Harley Davidson) முதல் டுகாட்டி 1098  (Ducati 1098) வரையிலான மிகவும் விலையுயர்ந்த பைக்குகள் மற்றும் பல உள்ளன

3 /5

மகேந்திர சிங் தோனி ஒரு ராணுவ தர நிசான் 4W73 தொடர் டிரக் வைத்திருக்கிறார். பச்சை நிற நிசான் ஜோங்கா 2019 ஆம் ஆண்டில் அவர் வாங்கிய மிகவும் மதிப்புமிக்க உடைமைகளில் ஒன்றாகும்.

4 /5

தோனிக்கு பிடித்த மற்றொரு உடைமைகளில் ஒன்று yellow Porsche, 2014 இல் இதை வாங்கினார் தோனி.

5 /5

சேதக் - எம்.எஸ்.தோனியின் வீட்டின் புதிய வரவு