பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இந்த எரிபொருட்களின் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும் என்று சமீப காலமாக பல்வேறு செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது, அதாவது இந்த மாதத்தின் முதல் நாளில் எதிர்பார்த்தபடி பெட்ரோல் விலையை எண்ணெய் சந்தை நிறுவனங்கள் குறைக்கவில்லை.  ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு OMCகள் வெளியிடும் புதிய விலைகள், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | LPG New Rate: எல்பிஜி சிலிண்டர் விலை ரூ 115 குறைந்தது! இந்த விலைக்கு வாங்கலாம்


கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான சில தகவல்களின்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 40 காசுகள் குறைக்கப்படுவதாக செய்திகள் வெளியானது, இந்த புதிய விலைகள் நவம்பர் 1 செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது.  திங்கள் கிழமையன்று தேசிய தலைநகரில் பெட்ரோல் விலை ரூ.96.72 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.106.03 ஆகவும், மும்பையில் ரூ.106.31 ஆகவும், சென்னையில் ரூ.102.63 ஆகவும் இருந்தது.



சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் எரிபொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது, சில நாட்களாகவே கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 95 டாலருக்கும் குறைவாகவே இருந்து வருகிறது.  ஓஎம்சி-கள் டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை குறைத்திருந்தால் பெட்ரோல் மாற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலைகள் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஒரே அளவில் இருந்திருக்கும், கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதியன்று எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டது.


மேலும் படிக்க | Crude Oil Price: அதிகரித்தது க்ரூட் ஆயில் விலைகள்! பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ