LPG New Rate: எல்பிஜி சிலிண்டர் விலை ரூ 115 குறைந்தது! இந்த விலைக்கு வாங்கலாம்

LPG Gas Cylinder: கேஸ் சிலிண்டர்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அக்டோபர் முதல் பாதியில் பண்டிகைக் காலத்தின் காரணமாக பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக எரிபொருள் விற்பனை அதிகரித்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 1, 2022, 06:55 AM IST
  • மாத முதல் தேதியான இன்று எல்பிஜி விலை குறைந்தது
  • தீபாவளிக்கு பிறகு மக்களுக்கு நல்ல செய்தி
  • கேஸ் சிலிண்டர் விலை 115 ரூபாய் குறைந்தது
LPG New Rate: எல்பிஜி சிலிண்டர் விலை ரூ 115 குறைந்தது! இந்த விலைக்கு வாங்கலாம் title=

புதுடெல்லி: அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில், நவம்பர் முதல் தேதியன்று மக்களுக்கு ஆசுவாசம் தரும் செய்தி வந்துள்ளது. வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலையை அரசு குறைத்துள்ளது. இருப்பினும், வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஒட்டுமொத்தமாக மக்களுக்கு பணவீக்கத்திலிருந்து நிவாரணம் கொடுக்கும் வகையில், எல்பிஜி சிலிண்டர் விலை 115 ரூபாய் வரை குறைந்துள்ளது, புதிய விலைகள் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

வர்த்தக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ.115.50 வரை குறைந்துள்ளது. ஜூலை 6ம் தேதிக்கு பிறகு, வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் இதுவரை எந்தவித் மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிய விலைகள்

சென்னையில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலை இப்போது ரூ.1893. இதற்கு முன், 2009.50 செலுத்த வேண்டியிருந்தது.

19 கிலோ எடையுள்ள இண்டேன் எல்பிஜி சிலிண்டரின் புதிய விலை 1744 ரூபாய். முன்னதாக இது ரூ.1859.5 ஆக இருந்தது.

கொல்கத்தாவில் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1846 ஆக இருக்கும். இதற்கு முன்பு மக்கள் ரூ.1995.50 செலுத்த வேண்டியிருந்தது.

மும்பையில், 1844 ரூபாய்க்கு கிடைத்து வந்த வணிக சிலிண்டர்களை விலை, 1696 ரூபாயாக குறைந்திருக்கிறது.  

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுக்கு முன்னர் ஊழியர்களுக்கு அரசு கொடுத்த நல்ல செய்தி 

14.2 கிலோ சிலிண்டரின் விலை என்ன?

வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர், டெல்லியில் ரூ.1053க்கும், கொல்கத்தாவில் 1079க்கும், சென்னையில் 1068.5க்கும், மும்பையில் ரூ.1052க்கும் கிடைக்கிறது. அக்டோபர் 1ஆம் தேதி வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.25.5 குறைக்கப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

இந்திய எரிவாயு நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி எரிவாயு சிலிண்டர் விலையை நிர்ணயித்து வருகின்றன. வணிக சிலிண்டர்கள் ஹோட்டல்கள் மற்றும் உணவு கடைகளில் பயன்படுத்தப்படுகின்றன. தற்போதைய விலைக் குறைப்பு, வியாபாரிகளுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும். தொடர்ந்து ஆறாவது மாதமாக வர்த்தக எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் அக்டோபர் முதல் பாதியில் பண்டிகைக் காலத்தின் காரணமாக பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தினால் எரிபொருள் விற்பனை அதிகரித்துள்ளது என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.. பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை ஆண்டுதோறும் (YoY) 22-26 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

அக்டோபர் 2022 முதல் பாதியில் மாதத்திற்கு மாதம் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் பிடிஐ கூறுகிறது. அக்டோபர் 1 முதல் 15, 2022 வரை பெட்ரோல் விற்பனை 22.7 சதவீதம் அதிகரித்து 1.28 மில்லியன் டன்னாக உள்ளது. அதே நேரத்தில், இது 2021 ஆம் ஆண்டில் 1.05 மில்லியன் டன்களாக இருந்தன.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு காத்திருக்கும் நவராத்திரி பரிசு, டிஎ ஹைக் அப்டேட் இதோ!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News