Post Office Public Provident Fund: பணத்தை இரட்டிப்பாக்கும் பல திட்டங்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். எனினும், இப்படிப்பட்ட திட்டங்கள் மோசடி திட்டங்களாக இருக்குமோ என்ற அச்சம்தான் நம்மில் பலருக்கு இருக்கும். பாதுகாப்பான வழியில் நம் பணத்தை பன்மடங்காக்கும் பல திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒரு சூப்பர் ஹிட் திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தபால் அலுவலக சேமிப்பு திட்டம்


பல வித திட்டங்களைக் கொண்டுள்ள தபால் அலுவலக திட்டங்களின் ஒரு திட்டத்தில்,  ஆண்டிற்கு பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தால் நீங்கள் பாதுகாப்பான வழியில் கோடீஸ்வரர் ஆகலாம். இந்த அசத்தலான திட்டத்தின் பெயர் தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் (Post Office PPF Scheme). இள வயதில் இந்த திட்டத்தில் பணத்தை சேகரிக்க துவங்கினால் சில ஆண்டுகளிலேயே நீங்கள் லட்சங்களில் சம்பாதிக்கலாம். 


உதாரணமாக 20 வயதுள்ள ஒரு இளைஞர் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால், அவருக்கு 40 வயதாகும் போது அவர் லட்சாதிபதி ஆகிவிடலாம். இந்த திட்டத்தில் முதலீட்டாளரின் பணம் பாதுகாப்பாக இருப்பதோடு உத்தரவாதமான வருமானமும் கிடைக்கின்றது. ஆகையால் தபால் அலுவலகத்தின் இந்த திட்டத்தின் மூலம் எந்த வித சந்தை அபாயங்களும் இல்லாமல் எளிதாக பணத்தை இரட்டிப்பார்க்கலாம். 


Post Office PPF Scheme: இந்த கணக்கை எப்படி தொடங்குவது?


இந்த திட்டத்தில் தபால் அலுவலகம் அல்லது ஏதாவது வங்கியின் மூலம் முதலீடு செய்யலாம். இதில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சமாக இதில் ஒரு நிதியாண்டில் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கு பிரிவு 80C (Section 80C) -இன் கீழ் வரிவிலக்கு (Tax Exemption) அளிக்கப்படும். மேலும் இதில் கிடைக்கும் வட்டித் தொகைக்கு வருமான வரி விதியின் (Income Tax Act) படி வரி (Income Tax) விதிக்கப்படாது.


PPF திட்டத்தில் கிடைக்கும் EEE வரி விலக்கு


PPF திட்டம் வரி வகையின் EEE பிரிவின் கீழ் வருகிறது. அதாவது இந்த திட்டத்தில் முதலீடு செய்த மொத்த தொகைக்கும் உங்களுக்கு வரி விலக்கு கிடைக்கும். மேலும், அந்த தொகைக்கும் முதிர்வின் போது கிடைக்கும் மொத்தத் தொகைக்கும் கிடைக்கும் வட்டிக்கும் வரி விதிக்கப்படாது. ஆகையால் நீண்டகால நன்மைகளை பெறும் நோக்கோடு முதலீடு செய்பவர்களுக்கு பிபிஎஃப் திட்டம் (PPF Scheme) நல்ல திட்டமாக கருதப்படுகிறது.


மேலும் படிக்க | மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: தேர்தலுக்கு முன் 2 குட் நியூஸ் வருது!


இந்த திட்டத்தின் லாக் இன் பீரியட் எவ்வளவு


பிபிஎஃப் திட்டத்தில் ப்ரீ-வித்ட்ராயல் (PPF Pre Withdrawal)அதாவது திட்ட காலம் முடிவதற்கு முன்பே பணத்தை எடுப்பதற்கான லாக் இன் பீரியட் ஐந்து ஆண்டுகள் ஆகும். அதாவது திட்டம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகும் முன்னர் முதலீட்டாளரால் பணத்தை எடுக்க முடியாது.  இந்த ஐந்தாண்டு காலம் முடிந்த பிறகு முதலீட்டாளர் பகுதி அளவு தொகையை எடுக்கலாம். இதற்கு படிவம் 2 (Form 2) -ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மொத்த தொகையை 15 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்க முடியாது.


Post Office PPF Scheme: சில முக்கியமான விவரங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்


ஆண்டு முதலீட்டு தொகை: ரூ. 10 லட்சம்
திட்டத்தின் கால அளவு: 20 ஆண்டுகள்
வட்டி விகிதம்: 7.1%
முதலீடு செய்யும் மொத்த தொகை: ரூ.2 லட்சம்
மொத்த வட்டி வருவாய்: ரூ.2,43,886
முதிர்வின் போது கிடைக்கும் மொத்த தொகை: ரூ.4,43,886


மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்ட பலன்கள்: அமைச்சரவை ஒப்புதல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ