6 மாதங்களில் தீயாய் அதிகரித்துள்ள தங்க விலை மேலும் அதிகரிக்கலாம் என அதிர்ச்சி தகவல்
2020 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் தங்கத்தின் விலை 17 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கக்கூடும்
புதுடெல்லி: தற்போது வேகமாக பரவுவது கொரோனாவா அல்லது தங்கத்தின் விலையா என்று பட்டிமன்றமே நடத்தலாம் போல் இருக்கிறது! கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டிருக்கும் சமயத்திலும் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் தங்கத்தின் விலை 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுவரை, தங்கத்தில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு மிகவும் நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைத்தனர். ஏனெனில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைவிட அதிக வருமானத்தை தங்கத்தில் செய்யப்படும் முதலீடு கொடுத்தது. இருப்பினும், தற்போது கொரோனா வைரசுக்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டால், அது தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது கூட, தங்கத்தில் செய்யும் முதலீடு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Also Read | செவ்வாய் கிரகத்திற்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் விண்கலன் திட்டம் ஒத்திவைப்பு!!
இந்த ஆண்டின் எஞ்சிய ஆறு மாதங்களில் தங்கத்தின் விலை நிலவரம் என zeebiz.com வலைதளம் கணித்துள்ளது. அதன்படி, அடுத்த ஆறு மாதங்களில் தங்கத்தின் விலை உயரும். ஏனென்றால், கொரோனா வைரஸ் குறித்த பயம் மக்களிடையே நிலவும் சூழ்நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தை மட்டுமே சிறந்த முதலீடு என்று நம்புகிறார்கள்.
2020ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதற்கான காரணங்களை பட்டியலிடுகிறார் ஏஞ்சல் ப்ரோக்கிங்கின் ஏவிபி பார்த்தா மெஷ் மல்லையா (Partha Mesh Mallya, AVP, Angel Broking). அமெரிக்க டாலரும், கொரோனா தொற்றுநோயும் உலகப் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளன. தற்போது, பொருளாதாரம் V, U அல்லது W வடிவத்தில் மீள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும், உலகப் பொருளாதாரத்தில் 4.9 சதவீத சரிவு ஏற்படும் என்று சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே கணிப்பு வெளியிட்டுள்ளது.
தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரிக்கலாம்?
2020 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் தங்கத்தின் விலையுயர்வு மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசியேஷனின் (India Bullion and Jewelers Association (IBJA)) தேசியத் தலைவர் பிருத்விராஜ் கோத்தாரி இவ்வாறு கூறுகிறார்: "பெரிய அளவில் முதலீடு செய்பவர்கள் தங்களிடம் உள்ல உபரி பணத்தை தங்கம் வாங்குவதில் செலவளிப்பதால் தங்கத்தின் விலை உயர்கிறது".
ஈக்விட்டி மற்றும் பிற முதலீட்டு விருப்பங்கள் COVID-19 தொற்றுநோயின் பிடியில் இருந்து தப்பவில்லை. அதோடு, உலகப் பொருளாதாரமும் கொரோனா வைரஸின் எதிர்மறையான தாக்கத்தில் இருந்து தப்பவில்லை.
பணப்புழக்கத்தைத் தக்கவைக்க, அமெரிக்காவின் மத்திய வங்கி உட்பட பல்வேறு மத்திய வங்கிகள் தங்கள் தேசிய நாணயத்தை அச்சிட்டு வருகின்றன. எனவே, இது பணவீக்கத்தின் அதிகரிப்புக்கு வழிவகுத்தது, இது தங்கத்தின் மதிப்பை ஏணியில் அல்ல, லிஃப்டில் செல்ல வைத்துவிட்டது" என்று பிருத்விராஜ் கோத்தாரி மேலும் தெரிவித்தார்.
Read Also | கொரோனா காலத்திலும் லாபமீட்டி பிரமிக்க வைக்கும் இன்ஃபோசிஸ்!!
2020 இறுதிக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 55,000 ரூபாயாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது தற்போது கணிசமான லாபத்தை கொடுக்கும் என்று கோத்தாரி ஆலோசனை கூறுகிறார்.
தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 50 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. சர்வதேச சந்தையில் விலைமதிப்புள்ள உலோகங்களின் சர்வதேச விலை அதிகரிப்பைத் தொடர்ந்து புதன்கிழமையன்று டெல்லில் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 244 ரூபாய் உயர்ந்து 5,023 ரூபாய் என்ற விலையில் முடிவடைந்தது.
Also Read | பெண் வேடத்தில் களமிறங்கி கிளார்க்காக பணியாற்றும் எந்திரன் ரோபோ!!
வெள்ளியின் விலையும் அதிகரித்து இன்று கிலோ ஒன்றுக்கு 54,200 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில், தங்கம் அவுன்ஸ் 1,813 டாலராகவும், வெள்ளி அவுன்ஸ் 19.35 டாலராகவும் அதிகரித்திருக்கிறது. எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் மூத்த ஆய்வாளர் தபன் படேல் (HDFC Securities Senior Analyst (Commodities)), "அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு மோசமடைந்து வருவதால் செவ்வாய்க்கிழமை முதல் தங்கம் வாங்கும் போக்கு அதிகரித்துக் காணப்படுகிறது" என்று கூறுகிறார்.