ரேஷன் கார்டு இருக்கா? தீபாவளிக்கு இந்த பொருட்களை பெறுங்கள்
இந்த முறை தீபாவளியன்று ரூ.513 கோடி சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன் கீழ் மக்களுக்கு ரேஷன் விநியோகம் செய்யப்படும்.
ரேஷன் கார்டு புதுப்பிப்பு: தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்காக, அரசு சிறப்பு திட்டத்தை வகுத்துள்ளது. நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால் உங்களுக்கு நல்ல செய்தி. அதன்படி ஏழைகளுக்கும், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் இலவச ரேஷன் உள்ளிட்ட பல சிறப்பு வசதிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.
100 ரூபாயில் பல வசதிகள் கிடைக்கும்
மகாராஷ்டிர அரசு இம்முறை தீபாவளியன்று ரூ.513 கோடி சிறப்புத் தொகுப்பை அறிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள 1.5 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஏக்நாத் ஷிண்டே அரசு தீபாவளி பரிசு வழங்க உள்ளது. இதன் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வெறும் 100 ரூபாயில் பல வகையான சலுகைகள் வழங்கப்படும்.
மேலும் படிக்க | மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல்
நீங்கள் என்ன பொருட்களைப் பெறுவீர்கள்?
வரும் தீபாவளி பண்டிகைக்கு மாநிலத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.100 மளிகை பொருட்கள் வழங்க மகாராஷ்டிர அமைச்சரவை செவ்வாய்க்கிழமை முடிவு செய்தது. இந்த நூறு ரூபாய் பாக்கெட்டில் ஒரு கிலோ ரவை, நிலக்கடலை, சமையல் எண்ணெய் மற்றும் மஞ்சள் பருப்பு ஆகியவை இருக்கும்.
இந்த சலுகை 30 நாட்களுக்கு நீடிக்கும்
மாநில அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, இந்த சலுகையை 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி சர்க்கரை, உளுத்தம் பருப்பு, சமையல் எண்ணெய், ரவை ஆகியவை ரூ.478 கோடிக்கு அரசால் கொள்முதல் செய்யப்படும். இது தவிர ரேஷன் கார்டுதாரர்களுக்கு 35 கோடியில் மற்ற உணவுப் பொருட்கள் வாங்கப்படும்.
மகாராஷ்டிராவில் வசிக்கும் ரேஷன் கார்டுதாரர்கள் 30 நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் கார்டுதாரர்களுக்கு ரேஷன் பலன்களை வழங்குவதே அரசின் முன்னுரிமை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | IOCL M15 Petrol: இந்தியன் ஆயிலின் மெத்தனால் கலந்த மலிவு விலை பெட்ரோல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ