அதிரடி வட்டியை அள்ளிக்கொடுக்கும் ரிசர்வ் வங்கி: உடனே முதலீடு செய்யுங்கள்
RBI Update: நிலையான வைப்புத்தொகை, தபால் நிலைய சிறு சேமிப்பு திட்டங்கள், உட்பட பாதுகாப்பான முதலீட்டிற்கு பல வகையான திட்டங்கள் உள்ளன. இருப்பினும் நல்ல வருமானத்தை அளிக்கும் இன்னும் பல திட்டங்களும் உள்ளன.
RBI Update: நம் நாட்டை பொறுத்தவரை சேமிப்பிற்கான பல திட்டங்கள் உள்ளன. அரசாங்கம் அனைத்து தரப்பு மக்களும் சேமித்து பயன்பெறும் வகையில் பல வித திட்டங்களை நடத்தி வருகிறது. பாதுகாப்பான வருமானத்தை அளிக்கும் பல அஞ்சல் அலுவலக திட்டங்களிலும் மக்கள் அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள். இது தவிர வங்கிகளின் சேமிப்பு திட்டங்களிலும் மக்கள் பணத்தை சேமிக்கிறார்கள். நிலையான வைப்புத்தொகை (Fixed Deposit), சிறு சேமிப்பு திட்டங்கள் உட்பட பாதுகாப்பான முதலீட்டிற்கு பல விருப்பங்கள் இருந்தாலும், சில விருப்பங்கள் பற்றி பலருக்கு இன்னும் முழுமையாக தெரியாமல் உள்ளது.
நிலையான வைப்புத்தொகை, தபால் நிலைய சிறு சேமிப்பு திட்டங்கள், உட்பட பாதுகாப்பான முதலீட்டிற்கு பல வகையான திட்டங்கள் உள்ளன. இருப்பினும் நல்ல வருமானத்தை அளிக்கும் இன்னும் பல திட்டங்களும் உள்ளன. இவற்றை பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் ஒன்று இந்திய அரசின் ஃப்ளோடிங் ரேட் பத்திரம் (Government of India Floating Rate Bond - GOI FRB). மத்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) ஃப்ளோடிங் ரேட் சேமிப்பு பத்திரங்களில் மக்கள் முதலீடு செய்யலாம். இது பல வங்கிகளின் நிலையான வைப்புகளை விட அதிக வருமானத்தை அளிக்கிறது. இந்தத் திட்டத்தின் வட்டி விகிதம் மற்றும் பிற விவரங்களை பற்றி இங்கே காணலாம்.
வட்டி விகிதம் என்ன
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அக்டோபர் 30, 2023 முதல் ஏப்ரல் 29, 2024 வரையிலான காலத்திற்கான இந்திய அரசின் ஃப்ளோடிங் ரேட் பத்திரம் 2034 (GOI FRB 2034) க்கு 8.10 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது. ஃப்ளோடிங் ரேட் பத்திரங்கள் எந்த நிலையான கூப்பன் வீதமும் இல்லாத பத்திரங்களாகும். இதில் முதலீட்டாலர்களின் கூப்பன் விகிதம் மாறுபடும். இது 6 மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்படுகிறது.
மேலும் படிக்க | டார்க் வெப்பில் 815 மில்லியன் ஆதார் தரவுகள் விற்பனைக்கு ரெடி! அதிர்ச்சித் தகவல்
நிபுணர்கள் கூறுவது என்ன?
ஃப்ளோடிங் ரேட் பத்திரங்கள் நல்ல வருமானத்தை பெற நாட்டம் உள்ளவர்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக இருக்கும் என இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (SEBI) பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர் ஸ்ரீராம் ஜெயராமன் கூறுகிறார். மூத்த குடிமக்கள் இதில் முதலீடு செய்யலாம். ரிசர்வ் வங்கி பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு வரம்பு எதுவும் இல்லை. இந்த திட்டத்தில் ஆறு மாதங்களுக்கும் ஒரு முறை வட்டி விகிதங்கள் மாறலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பல திட்டங்களை விட அதிக வட்டி
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த வாரம் அக்டோபர் 30, 2023 முதல் ஏப்ரல் 29, 2024 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய அரசின் மிதக்கும் விகிதப் பத்திரம் 2034 (GOI FRB 2034) மீது 8.05 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை அறிவித்தது. இது தேசிய சேமிப்பு சான்றிதழ் விகிதத்தை விட 35 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும். மேலும் இந்த வட்டி விகிதம் பல நிலையான வைப்பு விருப்பங்களை விட சிறந்த விகிதமாக உள்ளது.
சமீப காலம் வரை, இந்த பத்திரங்களை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் துறை வங்கிகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட பிற நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் மட்டும் பிரத்தியேகமாக கிடைத்தது. எனினும், ஜூன் 2020. அக்டோபர் 23, 2023 தேதியிட்ட ஆர்பிஐ சுற்றறிக்கையின்படி, சில்லறை முதலீட்டாளர்கள் இப்போது சில்லறை நேரடி போர்ட்டல் (Retail Direct Portal) மூலம் பல்வேறு வகையான முதலீட்டு அம்சங்களை அணுகலாம்.
மேலும் படிக்க | ATMஇல் இருந்து கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பவரா? விதிகள் மாறின, மறக்க வேண்டாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ