வங்கிகளில் பணத்தை செபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது!! கூடிய விரைவில் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் பணத்திற்கு அதிக வட்டி கிடைக்கலாம். இதற்கான ஒரு அறிகுறியை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்திற்கு அதிக வட்டியை பெற வேண்டும் என்ற கருத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது. பெரிய தனியார் மற்றும் அரசுத் துறை வங்கிகள் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு 2.70 சதவீதம் முதல் நான்கு சதவீதம் வரை வட்டி தருகின்றன. வங்கிகளின் மொத்த வைப்புத்தொகையில் சேமிப்புக் கணக்குகளின் பங்கு மூன்றில் ஒரு பங்காகும். இருப்பினும் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு சேமிப்புக் கணக்குகளுக்கு (Savings Account) மிகக் குறைந்த வட்டியையே வழங்குகின்றன.
கடந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) பாலிசி விகிதத்தை 2.50 சதவீதம் அதிகரித்து 6.50 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இவ்வாறான நிலையில், வங்கிகள் கடனுக்கான வட்டியை உடனடியாக அதிகரித்து வாடிக்கையாளர்கள் மீது சுமையை ஏற்றுவது போன்று, வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்பட வேண்டுமென மத்திய வங்கி விரும்புகிறது. ரிசர்வ் வங்கி அவ்வப்போது தனது கூட்டங்களில் சேமிப்பு வைப்பு விகிதங்களை அதிகரிக்க வங்கிகளை ஊக்குவித்து வருகிறது.
ரிசர்வ் வங்கி தனது சமீபத்திய பணவியல் கொள்கை அறிக்கையில், தற்போதைய இறுக்கமான சுழற்சியில், நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்கள் கடன் விகிதங்களை விட அதிகமாக உள்ளன என்று கூறியுள்ளது. இருப்பினும், வங்கிகளின் சேமிப்புக் கணக்குகளுக்கான விகிதங்கள் கிட்டத்தட்ட மாறாமல் உள்ளன.
வங்கிகளின் வரம்புகள் பாதிக்கப்படும்
'சேமிப்புக் கணக்கை பராமரிக்க வங்கிகளுக்கு ஆகும் செயல்பாட்டு செலவு மற்றும் தொழில்நுட்ப செலவு மிகவும் அதிகமாக உள்ளது. வட்டி விகிதங்களில் 20 முதல் 25 பிபிஎஸ் அதிகரிப்பு கூட வங்கிகளின் மொத்த இருப்புநிலையை பாதிக்கும். இது வங்கிகளின் விளிம்புகளையும் பாதிக்கலாம்.' என தனியார் துறை வங்கி அதிகாரி ஒருவர் கூறினார்.
கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிப்பால் வங்கிகளின் செலவுகளின் அதிகரிப்பு குறைந்துள்ளது. இதன் காரணமாக, அவர்களின் மார்ஜினில் ஏற்றம் உள்ளது. யெஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை தங்களது சேமிப்பு வைப்பு விகிதங்களை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று சமீபத்தில் தெரிவித்துள்ளன. சிறு வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கு அதிக வட்டி செலுத்துவதாகவும் சில வங்கிகள் 7 சதவீதம் வரை வட்டி தருவதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க | பென்ஷன் பற்றி இனி நோ டென்ஷன்: மாதா மாதம் 1 லட்சம் ஓய்வூதியம்.. அசத்தும் NPS
தனியார்-வெளிநாட்டு வங்கிகளுக்கு முழுநேர இயக்குனர் அவசியம்
தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் முழுச் சொந்தமான துணை நிறுவனங்களுக்கு இரண்டு முழு நேர இயக்குநர்கள் இருப்பதை உறுதி செய்யுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இதில் நிர்வாக இயக்குனர் (MD) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆகியோரும் இருக்கலாம். தற்போது இரண்டு முழு நேர இயக்குநர்கள் இல்லாத வங்கிகள் நான்கு மாதங்களுக்குள் அவ்வாறு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வங்கித் துறையில் அதிகரித்து வரும் சிக்கல்கள் மற்றும் வளர்ந்து வரும் சவால்களை சமாளிக்க பயனுள்ள மூத்த நிர்வாகக் குழுவை உருவாக்குவது அவசியம் என்று ரிசர்வ் வங்கி (RBI) புதன்கிழமை ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. அத்தகைய குழுவை நிறுவுவது அடுத்த கட்ட தலைமை திட்டமிடலை எளிதாக்கும்.
முழு நேர இயக்குநர்களின் எண்ணிக்கை, வங்கி போர்டின் செயல்பாட்டு அளவு, வணிகச் சிக்கல்கள் மற்றும் பிற அம்சங்கள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு இது குறித்து முடிவு செய்யப்பட வேண்டும். நியமனம் தொடர்பான விதிமுறைகளை செயல்படுத்தாத வங்கிகள் முதலில் ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ