RBI கொடுத்த அதிர்ச்சி: ஒரே அடியில் பல வங்கிகளுக்கு செக்.. உரிமம் ரத்து, சிக்கலில் வாடிக்கையாளர்கள்
RBI Update: முறைகேடான செயல்முறைகளில் ஈடுபடும் வங்கிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் ரிசர்வ் வங்கி பல வங்கிகளுக்கு அபராதமும் விதித்து வருகின்றது.
RBI Update: கடந்த சில காலங்களில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகள் தொடர்பாக அவ்வப்போது பலவித முடிவுகளை எடுத்து வருகின்றது. முறைகேடான செயல்முறைகளில் ஈடுபடும் வங்கிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் ரிசர்வ் வங்கி பல வங்கிகளுக்கு அபராதமும் விதித்து வருகின்றது. ஆர்பிஐ சமீபத்தில் இப்போது மற்றொரு வங்கியின் உரிமத்தையும் ரத்து செய்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். மும்பையின் கபோல் கூட்டுறவு வங்கி லிமிடெட்டின் (‘The Kapol Co-operative Bank Limited’) உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரத்து செய்துள்ளது.
ஆர்பிஐ வங்கியின் உரிமத்தை ரத்து செய்த காரணம் என்ன?
வங்கியில் பணம் இல்லை
வங்கியிடம் போதுமான மூலதனம் இல்லை என்றும், வருமானம் ஈட்ட வாய்ப்புகள் இல்லை என்பதாலும் ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.
வங்கியில் வைப்பு மற்றும் பணம் எடுக்க முடியாது
கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதால், டெபாசிட்களை ஏற்றுக்கொள்வது, டெபாசிட் திரும்பப் பெறுவது உள்ளிட்ட வங்கிப் பணிகளை மேற்கொள்வதற்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கியை மூட உத்தரவு
மேலும், கூட்டுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் மத்திய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோருக்கு வங்கியை மூடிவிட்டு கலைப்பாளர் நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் கிடைக்கும்
டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷனில் (DICBGC) ஒவ்வொரு டெபாசிட்டும் ரூ.5 லட்சம் வரை க்ளைம் தொகையைப் பெறுவார்கள் என்று ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) தெரிவித்துள்ளது. ஆகையால் வங்கிகளின் டெபாசிட் செய்பவர்களில் 96.09 சதவீதம் பேர் தங்கள் முழுத் தொகையையும் DICGC யிடமிருந்து பெறுவார்கள்.
கலர் மெர்சண்ட்ஸ் கூட்டுறவு வங்கி
அகமதாபாத்தைச் சேர்ந்த கலர் மெர்சண்ட்ஸ் கூட்டுறவு வங்கியின் மோசமான நிதி நிலையைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வாடிக்கையாளர் ரூ.50,000 மட்டுமே எடுக்க அனுமதிப்பது உட்பட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. செப்டம்பர் 25ஆம் தேதி வங்கி வணிகம் மூடப்பட்டதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.
வங்கி கடன் கொடுக்க முடியாது
கலர் மெர்சண்ட்ஸ் கூட்டுறவு வங்கி முன் அனுமதியின்றி கடன் வழங்கவோ பழைய கடனை புதுப்பிக்கவோ முடியாது என மத்திய வங்கி கூறியுள்ளது. முதலீடு செய்யவோ புதிய வைப்புத்தொகை பெறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் ரூ.50,000 மட்டுமே எடுக்க முடியும்
டெபாசிட் செய்தவர்கள் 50,000 ரூபாய்க்கு மேல் வங்கியில் இருந்து எடுக்க அனுமதிக்கப்படமாட்டாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு
கடனை திருப்பி செலுத்த முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தற்போது ரிசர்வ் வங்கி (RBI) சில விதிகளை வகுத்துள்ளது. அந்த வகையில் கடன் வாங்குபவர்களுக்கு கடன் மறுசீரமைப்பு (Loan Restructuring) ஒரு சிறந்த வழியாக இருக்கும். இது, கடனை உரிய நேரத்தில் செலுத்தாத நபர்கள் மீதிருந்து டீஃபால்டர், அதாவது, கடனை திருப்பி செலுத்தாதவர் என்ற அடையாளத்தை அகற்றும். கடன் வாங்கிய ஒரு நபர் டீஃபால்டராக மாறினால், அவரது கடன் வரலாறு (Credit History) மோசமடைகிறது. இது மட்டுமின்றி இது அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கின்றது. இதன் காரணமாக, அவரது CIBIL ஸ்கோரும் கெட்டுவிடுகிறது. இதனால், எதிர்காலத்தில் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளும் இல்லாமல் போய் விடுகின்றது, அல்லது சிக்கலுக்கு உள்ளாகிறது. இந்த பிரச்சனைகள்ளுக்கு ரிசர்வ் வங்கியின் லோன் ரீஸ்ட்ரக்சரிங் விதி பெரிய நிவாரணம் அளிக்கின்றது.
மேலும் படிக்க | ITR: 5 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தாலும் யாரெல்லாம் வருமான வரி கட்ட வேண்டாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ