RBI Update: விதிமுறைகளை மீறியதற்காக பல நிதி நிறுவனங்களுக்கு பண அபராதம் விதித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. அபராதங்களில் ஒரு வங்கிக்கு ரூ.72 லட்சமும், மற்றொரு வங்கிக்கு ரூ.30 லட்சமும், மற்றொரு வங்கிக்கு ரூ.13.38 லட்சமும், நான்காவதாக ஒரு வங்கிக்கு ரூ.10 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ரிசர்வ வங்கி (Reserve Bank Of India) 


இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உலகப் புகழ்பெற்ற மத்திய வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வங்கி நாட்டின் அனைத்து வங்கிகளின் பணிகளையும் கண்காணித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் விதிகளை ஒரு வங்கி மீறினாலோ அல்லது அந்த விதிகளை முழுமையாக பின்பற்றவில்லை என்றாலோ, அல்லது தன்னிச்சையாக செயல்பட்டாலோ மத்திய வங்கி அந்த வங்கிக்கு அபராதம் விதிக்கலாம்.


அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி


ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) பஞ்சாப் நேஷனல் வங்கி ( PNB), ஃபெடரல் வங்கி (Federal Bank) ஆகிய வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளது. இது தவிர மேலும் இரண்டு வங்கிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிஎன்பி, ஃபெடரல் வங்கி ஆகிய வங்கிகள் தவிர, மெர்சிடீஸ் பென்ஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் இந்தியா ப்ரைவேட் லிமிடட் மற்றும் கொஸமட்டம் ஃபைனான்ஸ் லிமிடட், கோட்டயம் ஆகியவற்றிற்கும் இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.


அபராதம் விதிக்கப்பட்டதற்கான காரணங்கள்:


பஞ்சாப் நேஷனல் வங்கி


கோர் பேங்கிங் தீர்வு தளத்தில் தவறான மொபைல் எண்கள் இருந்தபோதிலும், சில கணக்குகளுக்கு SMS கட்டணம் வசூலித்தது, பல டெர்ம் டெபாசிட் கணக்குகளில் முன்கூட்டியே வெளியிடப்பட்ட வட்டி விகித அட்டவணையில் இருந்து விலகி செயல்பட்டது, MCLR-இணைக்கப்பட்ட கடன்களில் வட்டி மீட்டமைப்பு தேதியை (Interest Reset Date) குறிப்பிடத் தவறியது போன்ற பல்வேறு விதி மீறல்களுக்காக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 


ஃபெடரல் வங்கி


ஃபெடரல் வங்கி (Federal Bank) ரூ.50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைக்கான டிமாண்ட் டிராஃப்டுகளை வாங்குபவரின் பெயரை டிடி -இல் சேர்க்காமல் வழங்கியதற்காக அபராதத்தை எதிர்கொண்டது.


மேலும் படிக்க | EPF கணக்கில் வட்டி: தீபாவளி பரிசாக வருகிறதா பம்பர் தொகை? அதிரடி அப்டேட் இதோ


கொசமட்டம் ஃபைனான்ஸ் 


குறிப்பிட்ட கடன் கணக்குகளில் 75 சதவீத கடன் மதிப்பு விகிதத்தை ( loan-to-value ratio) பராமரிக்காததால் கொசமட்டம் ஃபைனான்ஸுக்கு (Kosamattam Finance) அபராதம் விதிக்கப்பட்டது.


மெர்சிடீஸ் பென்ஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் இந்தியா ப்ரைவேட் லிமிடட்


தனது வாடிக்கையாளர்களிடம் சரியான கவனத்தை செலுத்தத் தவறியதற்காகவும், அதிக ஆபத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 'வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்' (KYC) தகவலைப் புதுப்பிக்காததற்காகவும் மெர்சிடீஸ் பென்ஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் இந்தியா ப்ரைவேட் லிமிடட்டுக்கு (Mercedes-Benz Financial Services India ) அபராதம் விதிக்கப்பட்டது.


வங்கி வாடிக்கையாளர்களின் நிலை என்ன?


மத்திய வங்கியின் விதிகளின்படி, ஒரு வங்கிக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை அதே வங்கிதான் ஈடுசெய்யும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகையால் ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு வங்கி வாடிக்கையாளர்களை பாதிக்காது.


கூடுதல் தகவல்


சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்ப்பு கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி, வரும் காலத்தில், அதாவது ஜனவரி 2024 முதல், கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வார கால அவகாசம், அதாவது க்ரேஸ் பீரியட் (Grace Period) வழங்கப்படும் என்று கூறியுள்ளது. வாடிக்கையாளர்களின் EMI பவுன்ஸ் ஆகிவிட்டால், ஒரு வாரத்திற்கு பயப்படத் தேவையில்லை. அந்த EMI தொகையைச் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்களுக்கான அவகாசம் கிடைக்கும். 


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸா? 44% ஊதிய ஏற்றம்.. காத்திருக்கும் 2 நல்ல செய்திகள்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ