RBI On Inflation: பணவீக்கத்தால் அனைவரும் பதட்டத்தில் இருக்கும் இந்த தருணத்தில், இந்திய ரிசர்வ் வங்கி தலைவர் சக்திகாந்த தாஸ், இந்திய பொருளாதாரம் தொடர்பான நல்ல செய்தியை அளித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் செவ்வாயன்று, பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் தொடர்ந்து வலுவாக இருப்பதாகவும், இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி (Q2 GDP) எண்ணிக்கை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்றும் கூறினார். புவிசார் அரசியலில் உள்ள நிச்சயமற்ற தன்மை உலக வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆபத்து என்று எச்சரித்த சக்திகாந்த தாஸ், எந்தவொரு அபாயகரமான சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா சிறந்த வகையில் தயாராக உள்ளதாகவும் ஆறுதல் அளித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிசினஸ் ஸ்டாண்டர்டு ஏற்பாடு செய்த வருடாந்திர BFSI இன்சைட் உச்சி மாநாட்டில் பேசிய சக்திகாந்த தாஸ், சில தனியார் துறை வங்கிகளில் ஏற்படும் பணமதிப்பிழப்பு பிரச்சினையை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) "கூர்ந்து" கவனித்து வருவதாக தெரிவித்தார். சில முக்கிய வங்கிகள் 30 சதவீதத்திற்கும் அதிகமான அட்ரிஷன் விகிதங்களை அறிக்கைகளில் குறிப்பிடுவது பற்றி பேசிய தாஸ், அனைத்து வங்கிகளும் இதுபோன்ற பிரச்சினைகளை கவனித்துக்கொள்வதற்கு ஒரு முக்கிய குழுவை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார். 


வேலைகளை மாற்றுவது தொடர்பான இளைஞர்களின் வாழ்க்கைக் கண்ணோட்டம் மாறிவிட்டது என்றும், இளைஞர்கள் இப்போது அந்த அம்சத்தில் "வித்தியாசமாக" சிந்திக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். ஒழுங்குமுறை மேற்பார்வை முயற்சிகளின் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி (Reserve Bank) இந்த சிக்கலைப் பார்க்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


2023-24 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்தியா 7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த நான்கு காலாண்டுகளில் மிக அதிக வளர்ச்சிப் பதிவாகும். சேவைத் துறையில் இரட்டை இலக்க விரிவாக்கம் இதன் பின்னணியில் உள்ளது. இதன் மூலம் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா தக்க வைத்துக்கொண்டுள்ளது. 


- மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2022-23 முதல் காலாண்டில் (Q1) 13.1 சதவீத வளர்ச்சியையும், இரண்டாவது காலாண்டில் 6.2 சதவீதத்தையும், மூன்றாவது காலாண்டில் 4.5 சதவீதத்தையும், கடைசி காலாண்டில் 6.1 சதவீதத்தையும் பதிவு செய்துள்ளது.


- ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் 7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சி, அதே காலகட்டத்தில் சீனா பதிவு செய்த 6.3 சதவீதத்தை விட அதிகமாகும்.


- வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) தரவுகளின்படி, விவசாயத் துறையின் மொத்த மதிப்பு கூட்டல் (GVA) 3.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது 2022-23 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பதிவான 2.4 சதவீதத்தை விட அதிகமாகும். 


மேலும் படிக்க | தீபாவளிக்கு முன் LPG Gas சிலிண்டர்களின் விலையில் அதிரடி ஏற்றம்: விலை விவரம் இதோ


- 'நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை சேவைகளின்' GVA விரிவாக்கம் 12.2 சதவீதமாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 8.5 சதவீதமாக இருந்தது.


- வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறை தொடர்பான சேவைகள் ஆகியவற்றில் 9.2 சதவீத வளர்ச்சி காணப்பட்டுள்ளது. இருப்பினும் முந்தைய ஆண்டின் காலாண்டில் காணப்பட்ட 25.7 சதவீத விரிவாக்க வளர்ச்சியை விட இது குறைவாகும். 


- உற்பத்தித் துறை ஜிவிஏவும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 6.1 சதவீதமாக இருந்தது.


"ரியல் GDP அல்லது நிலையான GDP (2011-12) விலைகள் 2023-24 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.40.37 லட்சம் கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23 முதல் காலாண்டில் ரூ.37.44 லட்சம் கோடியாக இருந்தது. இது Q1 2022-23 இல் 13.1 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 7.8 சதவீத வளர்ச்சியைக் காட்டுகிறது." என என்எஸ்ஓ (NSO) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


2023-24 முதல் காலாண்டில் தற்போதைய விலையில் பெயரளவிலான ஜிடிபி ரூ.70.67 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் 65.42 லட்சம் கோடியாக இருந்தது. 2022-23 முதல் காலாண்டில் இருந்த 27.7 சதவீதத்துடன் ஒப்பிடும் போது இது 8 சதவீத வளர்ச்சியைக் காட்டுகிறது. 


மேலும் படிக்க | சுமார் 9% வட்டியை அள்ளி வழங்கும் சில வங்கிகள்... தீபாவளி சலுகையை மிஸ் பண்ணாதீங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ