வங்கிகள் அல்லது NBFC களில் இருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாததற்கான அபராதம் தொடர்பான புதிய விதிகள் இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும். இது குறித்து தகவல் அளித்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வருவாய் ஆதாயத்திற்காக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) அபராதக் கட்டணங்களை விதிப்பதைத் தடுக்கும் வகையில், நியாயமான கடன் வழங்கும் முறையை அமல்படுத்த விதிகள் திருத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இது ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும். வருவாயை அதிகரிக்கும் வகையில், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்துவதில் தவறினால் அபராதம் விதித்து வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கிகள் இனி 'நியாயமான' கட்டணங்களை மட்டுமே விதிக்க முடியும்


வங்கிகள் கண்டபடி அபராதக் கட்டணங்கள் விதிக்கும் போக்கு குறித்து கவனத்தில் எடுத்துக் கொண்ட ரிசர்வ் வங்கி  (Reserve Bank of India), கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று விதிமுறைகளை திருத்தியது. இதன் கீழ் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் 'நியாயமான' கட்டணங்களை மட்டுமே விதிக்க வேண்டும் என கூறப்பட்டது. வங்கிகள், NBFCகள் மற்றும் பிற ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) ஒழுங்குமுறை நிறுவனங்களுக்கு இந்த திருத்தப்பட்ட விதிமுறைகளை செயல்படுத்த வங்கிகள் கால அவகாசம் கோரியதை அடுத்து, ஏப்ரல் வரை விதிகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின் தொகுப்பில் (FAQகள்), தற்போதுள்ள கடன்களுக்கும், இந்த வழிமுறைகள் ஏப்ரல் 1, 2024 முதல் பொருந்தும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அபராதக் கட்டணம் நியாயமானதாக இருக்க வேண்டும்


புதிய அபராதக் கட்டண முறை குறித்து ஆகஸ்ட் 2023 வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில், வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக, தாமதமாகும் கடன்கள் மீதான அபராத வட்டியைப் பயன்படுத்தி கொள்ளும் வகையிலான வங்கிகள் மற்றும் NBFC களின் செயல்பாடுகள் குறித்து கவலை கொண்ட ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று விதிமுறைகளை திருத்தியது. கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தவறினால் பொருந்தும் என்று ரிசர்வ் வங்கி கூறியது, இது திருப்பிச் செலுத்தும் ஒப்பந்தத்தின் முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறுவதாகும், எனவே அபராதம் விதிக்கப்படலாம். ஆனால் இந்த அபராதம் செலுத்தாத தொகைக்கு மட்டுமே விதிக்கப்படும் மற்றும் நியாயமானதாக இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | Old Tax Regime Vs New Tax Regime: NPS-க்கான வரி விலக்கை கோருவது எப்படி


கடனை வேண்டுமென்றே திரும்ப செலுத்தாவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை


கடன் வாங்கியவர்களுக்கு பாதுகாப்பை எளிக்கும் அதே வேளையில், IBA மற்றும் NESL போன்ற அமைப்புகளின் உதவியுடன், வேண்டும் என்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து அவர்களை கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் என அறிவிக்கலாம எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மோசடியாக அடையாளம் காணப்பட்ட கடன் கணக்குகள் தொடர்பான கூடுதல் தகவல்களை வங்கி தகவல் பயன்பாட்டுச் சேவைகளுக்கு வழங்கும். NESL தரவுகளின்படி, நாட்டிலேயே ரூ.10 முதல் ரூ.100 கோடி வரையிலான கடன்களில் தான் மிக அதிகமாகத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை உள்ளது என கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Income Tax Saving: NPS முதலீடு அளிக்கும் சூப்பர் நன்மை, வரி விலக்கில் இரட்டிப்பு பலன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ